பொது அறிவுத்தகவல்கள்

பொது அறிவுத்தகவல்கள் 1

27/08/2026
12.08.2026 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிவங்காள விரிகுடாக் கடற்பகுதி வெப்பமடையத் தொடங்கியுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில...
12/08/2026

12.08.2026 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணி

வங்காள விரிகுடாக் கடற்பகுதி வெப்பமடையத் தொடங்கியுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில் இலங்கையை அண்மித்த கிழக்கு வங்காள விரிகுடாக் கடற்பகுதி 28 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்ப அதிகரிப்பைக் கொண்டுள்ளது.

அதேவேளை அதிகளவிலான வெப்பநீர் பசுபிக் சமுத்திரப் பகுதியில் இருந்து இந்து சமுத்திர பகுதிக்கு கடலடிப்பகுதியினூடாக கடத்தப்படுகின்றது( படம் 3).

இதனால்.........

1. இன்று பிற்பகல் முதல் எதிர்வரும் 16.08.2026 வரை பிற்பகல் வேளைகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகள் வெப்பச் சலன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

2. குறிப்பாக இன்று பிற்பகல் 2.00 மணி முதல் முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மழை கிடைக்கும்.

3. நாளை (13.08.2026) கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கணிசமான பகுதிகள் மழையைப் பெறும்.

இது வெப்பச்சலன செயற்பாட்டினால் கிடைக்கும் மழை என்பதனால் இடி மின்னல் நிகழ்வுகளோடு கூடியதாக இந்த மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதால் இடி மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் மக்கள் சற்று அவதானமாக இருப்பது அவசியம்.

அதேவேளை இலங்கையின் மத்திய, மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவா மாகாணங்களுக்கு தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 17.08.2026 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை மழை ஏனைய பகுதிகளில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மழை கிடைக்காத பகுதிகளில் அதிகளவில் உணரக்கூடிய வெப்பநிலையோடு கூடிய வானிலை நிலவும் வாய்ப்புள்ளது.

++++++++++++++++++++++++++++++++++++

பசுபிக் பிராந்தியத்தில் சூப்பர் எல்நினோ உருவாகிவிட்டது. நினோ பிராந்தியம் 3.4 இல் வெப்பநிலை (இன்று காலை 11.00 மணியளவில்) 2.89 பாகை செல்சியஸ் என்ற அளவில் அதிகரித்துள்ளது.

அரபிக்கடல் பகுதியில் இந்து சமுத்திர வெப்பச்சுட்டெண்/ இந்து சமுத்திர இருமுனை ( Indian Ocean Dipole) 0.71 என்ற நேர்மறை பெறுமானத்தை எட்டியுள்ளது.

இதனால்.....

இம்முறை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அனைத்து வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

********************************************

முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் குறைந்தது 03 புயல்களோடு 05 க்கு மேற்பட்ட தாழமுக்க நிகழ்வுகள் இலங்கையை அண்மித்து உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

********************************************

எல்நினோ , இந்து சமுத்திர இருமுனை மற்றும் தாழமுக்க செயற்பாடுகளினால் அதிக கனமழையும் அதனோடு இணைந்த வெள்ளம் மற்றும் அதனோடு இணைந்த நிலச்சரிவு நிகழ்வுகளும் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்படும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கனமழையுடனான வெள்ள அனர்த்தங்கள் நிகழும் என எதிர்வுகூறப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கான போதுமான தயார்ப்படுத்தல்களை நாம் இன்னமும் மேற்கொள்ளவில்லை.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த எல்நினோ அதிதீவிர வானிலை நிகழ்வின் காரணமாக உருவாக்கக்கூடிய வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்ள நாம் இன்னமும் தயாராகவில்லை.

1. சாத்தியமான வெள்ள அனர்த்தத்தைத் தணிக்கவல்ல குளங்களைத் தூர்வாரி ( நீரைத் தேக்கி வைத்திருக்கும் களிமண்படையை அகற்றாமல்) அவற்றை நாம் அகலப்படுத்த வேண்டும்.

2. வெள்ளநீர் வழிந்தோடும் வாய்க்கால்களை துப்புரவாக்குதல் வேண்டும். குறிப்பாக யாழ்ப்பாண நகரப்பகதிகளில் சற்றுக் கனமழை கிடைத்தாலே நகர வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடிய வாயக்கால்களின் அடையல்கள் அகற்றப்பட்டு துப்புரவாக்கப்பட்டு நீர் இலகுவாக வழிந்தோடி கடலைச் சென்றடைய ஏற்ற வகையில் அவை மாற்றப்படல் வேண்டும்.

3. கனமழைக்காலத்தில் நீர் தேங்கி பாதிப்புக்களை ஏற்படுத்தும் குழிகளை, பள்ளங்களை அடையாளம் கண்டு அவற்றை மூடி விடுதல் வேண்டும்.

அதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிவரை அதிக வெப்பநிலையோடு கூடிய வானிலை நிலவும் வாய்ப்புள்ளது.

கடந்த 01.06.2026 இலிருந்து இன்று 12.08.2026 வரை வடக்கு மாகாணத்தில் சராசரியாக ( ஒரு சில இடங்களில் மட்டுமே) 6.9 மி.மீ. மழை கிடைத்துள்ளது. ஆனால் இந்த 73 நாட்களில் 249 மி.மீ. நீர் ஆவியாகி உள்ளது.

எங்களுடைய நீர்ப்பயன்பாட்டுப் பாங்கில் நாம் இக்காலப்பகதியிலேயே அதிக நீரைப் பயன்படுத்துவதுண்டு (ஆலயங்களில் பெருந்திருவிழாக்களும் இக்காலமே)

தரைக்கீழ் நீர் சார்ந்து நெருக்கடிநிலையில் நாம் உள்ளோம். ஆனால் பல இடங்களில் எல்நினோ, மற்றும் தற்போது நிலவும் வரண்ட வானிலை, தற்போது நாம் கொண்டுள்ள தரைக்கீழ் நீர் வளத்தின் அளவு என எதனையும் கருத்தில் கொள்ளாது நீரை வீண்விரயம் செய்கிறோம். நீரைத் துஸ்பிரயோகம் செய்கின்றோம்.

வானிலை சார்ந்த அனர்த்தங்கள் எப்போதும் வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடியன. ஆனால் அது எமது தயார்ப்டுத்தல்களிலும் தனிமனித விழிப்புணர்விலுமே தங்கியுள்ளது.

- நாகமுத்து பிரதீபராஜா -

03.08. 2026 திங்கட்கிழமை 3.00 மணிமிக அவசரமான எச்சரிக்கை*********************************************மத்திய, சப்ரகமுவா, த...
03/08/2026

03.08. 2026 திங்கட்கிழமை 3.00 மணி

மிக அவசரமான எச்சரிக்கை
*********************************************

மத்திய, சப்ரகமுவா, தென் மற்றும் மேல் மாகாணங்களுக்கு இன்று மாலை, இரவு என மழை தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புள்ளது.

நாளையும் (04.08.2026) கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

பல ஆறுகள் வெள்ள மட்டத்தை அடைந்துள்ளன. மகாவலி, களுகங்கை, களனி கங்கை போன்றன பல இடங்களில் பெருக்கெடுத்துள்ளன.

இதனால் ஆற்றங்கரையோரங்கள், நீர்த்தேக்கங்களின் மேலதிக நீர் வெளியேறும் பகுதிகள், மற்றும் தாழ்நிலப்பகுதி மக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்.

நுவரெலியா, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவுக்கான அத்தனை ஏதுநிலைகளையும் கொண்டுள்ளன.

எனவே அன்புக்குரிய மக்கள் அனைவரும் தயவு செய்து பாதுகாப்பான வழிகளூடாக நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளை விட்டு வெளியேறுவது மிகவும் சிறந்தது.

தயவு செய்து இன்று இரவு வரை காத்திருக்காமல் பகல் பொழுதே பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்தது.

- நாகமுத்து பிரதீபராஜா

2026.08.03 සඳුදා පැය 3.00ඉතා හදිසි අනතුරු ඇඟවීම*********************************************මධ්‍යම, සබරගමුව, දකුණු සහ බස...
03/08/2026

2026.08.03 සඳුදා පැය 3.00

ඉතා හදිසි අනතුරු ඇඟවීම
*********************************************

මධ්‍යම, සබරගමුව, දකුණු සහ බස්නාහිර පළාත්වලට අද සවස සහ රාත්‍රියේ අඛණ්ඩ වැසි ලැබීමට ඉඩ ඇත.

හෙට (2026.08.04) ද තද වැසි ඇති වීමට ඉඩ ඇත.

බොහෝ ගංගා ගංවතුර මට්ටමට පැමිණ ඇත. මහවැලි, කළුගඟ, කැළණි ගඟ ආදී බොහෝ ස්ථානවල පිටාර ගැලී ඇත.

මේ හේතුවෙන්, ගං ඉවුරුවල, ජලාශවලින් අතිරික්ත ජලය මුදා හරින ප්‍රදේශවල සහ පහත් බිම් ප්‍රදේශවල ජීවත් වන ජනතාව වහාම එම ස්ථානවලින් ඉවත් වී ආරක්ෂිත ස්ථාන කරා යා යුතුය.

නුවරඑළිය, මහනුවර, කෑගල්ල, මාතලේ සහ කුරුණෑගල දිස්ත්‍රික්කවල සමහර ප්‍රදේශවලට නායයෑම් ඇතිවීමේ සියලු විභවයන් ඇත.

එබැවින්, නායයෑම් අවදානමට ලක්විය හැකි ප්‍රදේශ ආරක්ෂිත මාර්ග හරහා ඉවත් කරන ලෙස සියලුම ආදරණීය ජනතාවට උපදෙස් දෙනු ලැබේ.

කරුණාකර, අද රාත්‍රිය වන තුරු බලා සිටීමට වඩා දිවා කාලයේදී ආරක්ෂිත ස්ථාන වෙත යාම වඩා හොඳය.

- නාගමුතු ප්‍රතිපරාජා -

02.08.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிஇலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் தளம்பல் நிலை ஒன்று...
02/08/2026

02.08.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணி

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் தளம்பல் நிலை ஒன்று உருவாகியுள்ளது.

இதனால் இன்று இரவு முதல் எதிர்வரும் 06.08.2026 வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளுக்கு சற்று மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திற்கு சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தற்போது மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை எதிர்வரும் 06.08.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே இப்பகுதிகளில் தொடர்ச்சியாக மழை கிடைத்து வருவதாலும், பல பகுதிகளிலும் மண் நிரம்புநிலையை எட்டியுள்ளதனாலும் இம்மாகாணங்களின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு அபாயம் உள்ளதனால் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள மக்கள் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

++++++++++++++++++++++++++++++++++++

மத்திய பசிபிக் பெருங்கடலில் மிக வலுவான எல்நினோ உருவாகிக் கொண்டுள்ளது. இன்றைய தினம் (02.08.2026) நினோ 3.4 பிராந்தியத்தில் வெப்பநிலை 2. 4 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளது.

எல்நினோவின் தொலை இணைவு வடமேற்கு இந்து சமுத்திரப் பகுதியில் ஆப்பிரிக்காவுக்கு கிழக்காக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அது இந்து சமுத்திரத்தின் மேற்கு பகுதி நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் (IOD) மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று (02.08.2026) இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண்+0.66 என்ற அளவில் அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் எதிர்பார்த்ததற்கு மாறாக எல்நினோவின் உச்சம் முன்கூட்டியே அதாவது செப்டெம்பர் மாதத்தின் பிற்பகுதியில் ஆரம்பிக்கும் என்பதோடு எல்நினோவின் உச்சம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து எதிர்வரும் 2027 ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்நினோவின் காரணமான சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பும் இந்து சமுத்திர வெப்பச்சுட்டெணின் நேர்மறை(Positive) மற்றும் எதிர்மறை (Negative) மாற்றங்களும் இலஙகைக்கு இரண்டு வேறுபட்ட தீவிர வானிலைத் தோற்றப்பாடுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

1. செப்டெம்பரின் இறுதிப்பகுதி வரை வெப்ப அதிகரிப்பு காணப்படும். அதிக வெப்பநிலை, அதிக ஆவியாக்கம் மற்றும் மிகக்குறைந்த மழை வீழ்ச்சி வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளுக்கு பெரும் நீர்த் தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடும்.

2. ஒக்ரோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்புக் காரணமாக அதிக தாழமுக்கங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இம்முறை இரண்டாவது இடைப்பருவம் மற்றும் வடகீழ்ப் பருவக்காற்று காலப்பகுதிகளில் குறைந்தது 06 தாழமுக்கங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இவற்றில் இரண்டு தாழமுக்கங்கள் புயல்களாக உருவாகும் வாய்ப்புள்ளன. ( இது ஒரு நீண்ட கால முன்னறிவிப்பு என்பதனால் இதில் மாற்றங்கள் நிகழக் கூடும்)

3. எனவே ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிகம் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 900 மி.மீ. இனை விட அதிக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

4. ஆனால் தாழமுக்க செயற்பாட்டினாலேயே இம்மழை கிடைக்கும் என்பதனால் குறைந்த மழை நாட்களில் அதிக மழை கிடைக்கும். இதனால் வெள்ள அனர்த்தங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே நாம்....

1. அதிக வெப்பநிலை, அதிக ஆவியாக்கம், மற்றும் குறைவான மழையினால் ஏற்படக்கூடிய மிக வரண்ட வானிலை மற்றும் வரட்சி,

2. தாழமுக்கங்கள்/ புயல்கள், குறுகிய நாட்களில் கிடைக்கும் கனமழை, காரணமாக ஏற்படும் வெள்ள அனர்த்தங்கள்

என இரண்டு விடயங்களுக்கும் எம்மைத் தயார்ப்படுத்த வேண்டும்.

குறிப்பாக ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் குறிப்பாக வங்காள விரிகுடாவில் இந்து சமுத்திரத்தின் சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் என்ற அளவில் காணப்படுவதுண்டு. இது அதிகரிக்கும் போது தாழமுக்கங்கள்/ புயல்கள் உருவாகுவதுண்டு.

கடந்த 2025, நவம்பர் மாதம் 26ம் திகதி இந்து சமுத்திர வெப்பநிலை ( இலங்கைக்கு தெற்காக) 29.4 பாகை என்ற அளவில் இருந்தமையே 'டிட்வா' புயல் உருவாக காரணம்.

ஆனால் இம்முறை எல்நினோவின் காரணமாக இந்து சமுத்திர வெப்பநிலை 30 பாகை செல்சியஸ் இனை விடவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே இது தொடர்பாக நாம் அவதானமாக இருப்பது அவசியம்.

குறிப்பு: இது இன்றைய நிலையில் பல்வேறு மாதிரிகளின் பொதுப்பார்வை அடிப்படையிலான கணிப்பே... இதில் மாற்றங்கள் நிகழக் கூடும் என்பதனைக் கருத்தில் கொள்க.

- நாகமுத்து பிரதீபராஜா -

📢 TIN இலக்கம் இனி 7 அத்தியாவசிய சேவைகளுக்கு கட்டாயம்!அரசாங்கத்தின் புதிய நடைமுறையின்படி, கீழ்க்கண்ட சேவைகளைப் பெற வரி செ...
09/07/2026

📢 TIN இலக்கம் இனி 7 அத்தியாவசிய சேவைகளுக்கு கட்டாயம்!

அரசாங்கத்தின் புதிய நடைமுறையின்படி, கீழ்க்கண்ட சேவைகளைப் பெற வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) அவசியமாகும்:

✅ மோட்டார் வாகன பதிவு
✅ மோட்டார் வாகன உரிமம் (Revenue Licence) புதுப்பித்தல்
✅ நிலப் பதிவு / உரிமை மாற்றம்
✅ கூட்டிணைக்கப்படாத நிறுவன பங்குகள் மாற்றம்
✅ கிரயப் பத்திரம் மேற்கொள்ளுதல்
✅ வங்கி நடப்புக் கணக்கு திறத்தல்
✅ கட்டடத் திட்ட அனுமதி பெறுதல்

Address

Jaffna Town
40000

Telephone

+94769178808

Website

Alerts

Be the first to know and let us send you an email when பொது அறிவுத்தகவல்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category