பொது அறிவுத்தகவல்கள்

பொது அறிவுத்தகவல்கள் 1

18/05/2026
2026.05.17 ඉරිදා රාත්‍රී 10.30හෙට (2026.05.18) මුලතිව්, වවුනියාව, කිලිනොච්චිය, ත්‍රිකුණාමලය, මඩකලපුව, අම්පාර, බදුල්ල, කො...
17/05/2026

2026.05.17 ඉරිදා රාත්‍රී 10.30

හෙට (2026.05.18) මුලතිව්, වවුනියාව, කිලිනොච්චිය, ත්‍රිකුණාමලය, මඩකලපුව, අම්පාර, බදුල්ල, කොළඹ, කළුතර, ගම්පහ සහ කුරුණෑගල දිස්ත්‍රික්කවලට මධ්‍යස්ථ වැසි ලැබීමට ඉඩ ඇත.

ඉදිරි දින 30 තුළ නැවතත් බෙංගාල බොක්කෙහි අඩු පීඩන ප්‍රදේශයක් ඇති වීමට ඉඩ ඇත. එහි ස්ථායිතාව තීරණය කළ හැක්කේ ඉදිරි දින කිහිපයෙන් පසුව පමණි.

2026 නිරිතදිග මෝසම්
++++++++++++++++++++++++++++++++++++

2026 නිරිතදිග මෝසම් වැසි හෙට අනිද්දා (2026.05.19) ශ්‍රී ලංකාවේ ගොඩබිම් ප්‍රදේශ හරහා කඩා වැටෙනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.

මෙම වසරේ නිරිතදිග මෝසම් වර්ෂාපතනය ශ්‍රී ලංකාවේ සාමාන්‍යයට ආසන්න වීමට ඉඩ ඇත (සාමාන්‍යයට වඩා 5-10% අඩු).

මාසික, ජුනි සහ ජූලි මාසවල සාමාන්‍ය වර්ෂාපතනයට වඩා තරමක් වැඩි වීමට ඉඩ ඇත.

කෙසේ වෙතත්, අගෝස්තු සහ සැප්තැම්බර් මාසවල සාමාන්‍ය වර්ෂාපතනයට වඩා අඩු වර්ෂාපතනයක් ලැබීමට ඉඩ ඇත.

සුපුරුදු පරිදි, මෙවරද, ශ්‍රී ලංකාවේ සබරගමුව, දකුණු, බටහිර සහ වයඹ පළාත් නිරිතදිග මෝසම් කාල පරිච්ඡේද තුනකදී අධික වර්ෂාපතනයක් සහිත ගංවතුර විපත් වලට මුහුණ දීමට ඉඩ ඇත.

1. මැයි 25 සිට ජුනි 10 දක්වා කාලය

2. ජුනි 20 සිට ජූලි 5 දක්වා

3. ජූලි 15 සිට ජූලි 25 දක්වා

(මෙය දිගුකාලීන අනාවැකියක් වන අතර එය වෙනස් විය හැක)

2026 නිරිතදිග මෝසම් වැසි සමයේදී රත්නපුර, ගාල්ල, කළුතර දිස්ත්‍රික්කවලට වැඩි වර්ෂාපතනයක් ලැබෙනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.

ජූලි අග සිට එල් නිනෝ ධනාත්මක වීමට ඉඩ ඇත. එල් නිනෝ හුදකලා නියඟ ඇති කිරීමට පමණක් නොව, අනපේක්ෂිත වායුගෝලීය කැළඹීම් සමඟ සම්බන්ධ ඉතා අධික වර්ෂාපතනයක් සහිත ගංවතුර විපත් ඇති කිරීමට ද හැකියාව ඇති බව අප මතක තබා ගත යුතුය.

- නාගමුතු ප්‍රදීපරාජා -

17.05.2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிநாளை ( 18.05.2026) முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு,...
17/05/2026

17.05.2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணி

நாளை ( 18.05.2026) முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, குருநாகல் மாவட்டங்களுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 30ம் திகதிக்கிடையில் மீளவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் உறுதித்தன்மையை அடுத்த சில நாட்களின் பின்னரே குறிப்பிட முடியும்.

2026 தென்மேற்கு பருவமழை
+++++++++++++++++++++++++++++++++++++

2026 தென்மேற்கு பருவக்காற்றின் உடைவு ( Break of the Monsoon) இலங்கையின் நிலப்பகுதிகளில் நாளை மறுதினமே(19.05.2026) நிகழவுள்ளது.

இவ்வருட தென்மேற்கு பருவக்காற்று மழை இலங்கையின் சராசரியை அண்மித்ததாகவே கிடைக்கும் வாய்ப்புள்ளது( சராசரியை விட 5-10 % குறைவாகவும் அமையலாம்.

மாதங்களின் அடிப்படையில் ஜுன், ஜுலை மாதங்கள் சராசரியை விட சற்று கூடுதலான அளவில் மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

ஆனால் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் சராசரியை விட குறைவான அளவு மழைவீழ்ச்சியைப் பெறும் வாய்ப்புள்ளது.

வழமை போன்று இம்முறையும் தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் இலங்கையின் சப்ரகமுவ, தெற்கு, மேற்கு, வடமேற்கு மாகாணங்கள் மூன்று காலப்பகுதிகளில் அதீத மழையுடன் கூடிய வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன.

1. மே மாதம் 25ம் திகதி முதல்- ஜுன் 10 வரையான காலப்பகுதி

2. ஜுன் 20ம் திகதி முதல் ஜுலை 5ம் திகதி

3. ஜுலை 15ம் திகதி முதல் ஜூலை 25ம் திகதி

( இது ஒரு நீண்ட கால முன்னறிவிப்பு என்பதனால் இதில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்)

எனைய பகுதிகளோடு ஒப்பிடும் போது இரத்தினபுரி, காலி, களுத்துறை மாவட்டங்கள் 2026ம் வருட தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் அதிக மழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் இருந்து எல்நினோ நேர் நிலைக்கு ( Positive) வரும் வாய்ப்புள்ளது. எல்நினோ என்பது தனித்து வரட்சியை மட்டுமல்ல, எதிர்பாராத வளிமண்டல குழப்பங்களோடு தொடர்புடையதாக மிகச்செறிவான மழைவீழ்ச்சியோடு கூடிய வெள்ள அனர்த்தங்களையும் உருவாக்க வல்லது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

- நாகமுத்து பிரதீபராஜா -

@

15.05.2026 வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணிமத்திய வங்காள விரிகுடாவில் இலங்கையின் பருத்தித்துறைக்கு வடக்கு, வடகிழக்கு திசையில...
15/05/2026

15.05.2026 வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணி

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கையின் பருத்தித்துறைக்கு வடக்கு, வடகிழக்கு திசையில் 309 கி.மீ. தூரத்திலும் இந்தியாவின் கடலூருக்கு கிழக்காக 219 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டிருக்கும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுநிலையின்( Well Marked Low Pressure )அமுக்க சாய்வு விசையின்( Pressure Gradient Force - PGF) பற்றாக்குறையின் காரணமாக பல மணித்தியாலங்களாக ஒரே இடத்தில் நிலைகொண்டு தற்போது மிக மிகக் குறைவான வேகத்தில் நகருகின்றது.

ஆனாலும் அதன் சுழற்சி வேகமாக இயங்குகின்றது. இதனால் அதன் மையம் அதிக ஈரப்பதனை உள்நோக்கி ஈர்க்கின்றது.

இந்த தாழ்வு நிலையின் மையம் ஈர்க்கின்ற அதிகளவிலான ஈரப்பதன் அரபிக் கடலிலிருந்து இலங்கையூடாக வங்காள விரிகுடாவை நோக்கி நகர்கின்றது.

இதனால் இலங்கையின் பல பகுதிகளும் பரவலாக கனமழையைப் பெறுகின்றன. குறிப்பாக அரபிக்கடலிலிருந்து ஈரப்பதன் உள்நுழைகின்ற இலங்கையின் நிலப்பகுதிகளும் ( மேல் மாகாணம், தென் மாகாணம், வடமேல் மாகாணம், வட மாகாணம், சப்ரகமுவ மாகாணம்) இலங்கையிலிருந்து ஈரப்பதன் வங்காள விரிகுடாவுக்கு வெளியேறுகின்ற இலங்கையின் நிலப்பகுதிகளும்( கிழக்கு, வடக்கு, ஊவா) பகுதிகளும் கனமழையைப் பெறுகின்றன.

இந்த நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்வரும் 17.05.2026 வரை வங்காள விரிகுடாவில் நிலவும் என்பதனால்;

நாளை( 16.05.2026) வடக்கு, கிழக்கு, மேற்கு, வட மேற்கு, மத்திய, சப்ரகமுவா, ஊவா, தெற்கு மாகாணஙகள் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம்( 17.05.2026) மேற்கு, சபரகமுவா, தெற்கு, வடமேற்கு மாகாணங்கள் கனமழையையும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மிதமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே தொடர்ச்சியாக மழை கிடைக்கும் பகுதிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் மழை கிடைக்கும் என்பதனால் இப்பிரதேசங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

அதேவேளை மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நாளையும் நாளை மறுதினமும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் இம்மாகாணங்களின் சில பகுதிகளில் நிலச்சரிவு அனர்த்தங்கள் இடம்பெறக்கூடும் என்பதனால் மக்கள் மிக அவதானமாக இருப்பது மிகவும் அவசியம்.

எதிர்வரும் 18.05.2026 காலை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் அதுவரை கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

- நாகமுத்து பிரதீபராஜா -

14.05.2026 வியாழக்கிழமை காலை 9.30 மணிமத்திய வங்காள விரிகுடாவில் உள்ள நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்பார்த்த வேகத்...
14/05/2026

14.05.2026 வியாழக்கிழமை காலை 9.30 மணி

மத்திய வங்காள விரிகுடாவில் உள்ள நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் கடந்த பல மணி நேரங்களாக குறிப்பிட்ட இடத்திலேயே நிலை கொண்டிருப்பதனால் இலங்கையை விட்டு விலகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழையுடனான வானிலை அடுத்த 48 மணி நேரத்திற்கு பின்னரே விலகும் வாய்ப்புள்ளது.

இதனால் இன்றும் இலங்கையின் வடக்கு மேற்கு, வட மேற்கு, மத்திய, வட மத்திய கிழக்கு மற்றும் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இன்று கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக்கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் இம்மாவட்டங்களின் சில பகுதிகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படக்கூடும்.

நாளைய தினமும்(15.05.2026) வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணம் பரவலாக கனமான மழை யைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முல்லைத்தீவு,வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் நாளை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 16.05.2026 அன்றும் மேற்கு,வட மேற்கு ,வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மேற்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

- நாகமுத்து பிரதீபராஜா -

12.05.2026 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணிவங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தற்போது காணப்படும் காற்...
11/05/2026

12.05.2026 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணி

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தற்போது காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலையானது தொடர்ந்து வடக்கு வடகிழக்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளும் அடங்கலாக இலங்கையின் பல பகுதிகளுக்கும் பரவலாக கிடைக்கும் மழை எதிர்வரும் 13.05.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது.

கவனத்திற்குரிய 48 மணித்தியாலம்
+++++++++++++++++++++++++++++++++++

ஊவா, மத்திய, வட மத்திய, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களைப் பொறுத்தவரை அடுத்த 48 மணித்தியாலங்கள் மிக முக்கியமானவை. இந்த மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை கிடைத்து வருவதாலும் பல குளங்கள் மற்றும் ஆறுகளின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாலும் இவற்றுக்கு அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அடுத்த 48 மணித்தியாலங்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

அத்தோடு மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தொடரும் கனமழை காரணமாக நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. இந்த மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு மழை தொடரும் வாய்ப்புள்ளதனால் தயவு செய்து இப்பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது சிறந்தது.

மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்கவும்
+++++++++++++++++++++++++++++++++++++

காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது இலங்கைக்கு தென் கிழக்கே காணப்படுவதால் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும். அத்தோடு கிழக்கு மற்றும் வடக்கு கடற்பிரதேசங்களில் நாளை காற்று மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும் என்பதனால் மீனவர்கள் எதிர்வரும் 14.05.2026 வரை வடக்கு, கிழக்கு தெற்கு கடற்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது.

- நாகமுத்து பிரதீபராஜா -

09.05. 2026 சனிக்கிழமை இரவு 8.00 மணிகனமழை மற்றும் சாத்தியமான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு தொடர்பான விழிப்புணர்வு ++++++++...
09/05/2026

09.05. 2026 சனிக்கிழமை இரவு 8.00 மணி

கனமழை மற்றும் சாத்தியமான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு தொடர்பான விழிப்புணர்வு
+++++++++++++++++++++++++++++++++++++

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் இலங்கைக்கு தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற்றம் பெறவுள்ளது.

இது அடுத்து வரும் நாட்களில் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரமாக வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நேற்று (08.05.2026) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைக்க தொடங்கியுள்ள மழை எதிர்வரும் 13.05.2026 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை நாளை முதல் பரவலடைவதோடு செறிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நாளை (10.05.2026) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இதனால் மிக கனமழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்தோடு இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலையினால் இலங்கையின் ஊவா மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம், வடமேல் மாகாணம், மேல் மாகாணம் என்பவற்றின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நாளை(10.05.2026) பிற்பகலில் முல்லைத்தீவு, வவுனியா, கண்டி, மட்டக்களப்பு, காலி, களுத்துறை மாவட்டங்கள் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

நாளை(10.05.2026) மாலை குறிப்பாக 5.30 மணிக்கு பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை நாளை பிற்பகல் 3.00 மணியளவில் வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் (11.05.2026) பிற்பகல் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், தம்புள்ளை, கண்டி, மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்கள் கனமழையைப் பெறும்.

நாளை மறுதினம் (11.05.2026) பிற்பகல் 3.00 மணியளவில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும், பதுளை மாவட்டத்திற்கும், வடக்கு மாகாணத்தின் கிழக்கு பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 12.05.2026 பிற்பகலில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும், பதுளை, முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களுக்கும் கனமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக கிடைத்து வரும் கன மழை காரணமாக இலங்கையின் பல பகுதிகளிலும் குளங்கள் மற்றும் ஆறுகள் வான் பாயத் தொடங்கியுள்ளன.

எனவே இந்த காற்றழுத்த தாழ்வு நிலையினால் கிடைக்க விருக்கும் கனமழை சில பகுதிகளுக்கு வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் ஏற்கெனவே கன மழை கிடைத்தது வருகிறது. பல பகுதிகளில் நிலம் முழு நீர்க்கொள்ளளவோடு உள்ளது. இப்பகுதிகளில் தொடர்ந்தும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மத்திய மற்றும் ஊவா மாகாண உறவுகள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

அத்தோடு நாளை மறுதினம் முதல் முதல் இலங்கையின் தெற்கு, கிழக்கு, வடக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் நாளை மறுதினம் முதல் இக்கடற்பகுதிகளுக்கு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது சிறந்தது.

கடந்த ஆண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மே மாதம் அதிக மழை கிடைத்திருந்தது. குறிப்பாக வரலாற்றின் அதி கூடிய மழை கிடைத்த மே மாதமாக கடந்த ஆண்டு மே மாதம் விளங்கியது. இவ்வாண்டும் மே மாதம் கன மழையைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக மே மாதம் என்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மழை குறைந்த மாதங்களில் ஒன்று. இப்போது அது கனமழை கிடைக்கும் மாதங்களில் ஒன்றாக மாற்றம் பெறுகிறது. காலநிலை மாற்றம் இது போன்ற வியத்தகு வித்தைகளை உருவாக்கும்.

-நாகமுத்து பிரதீபராஜா-

2026.05.02, සෙනසුරාදා, සවස 4.00පසුගිය දින කිහිපය තුළ උතුරු සහ නැගෙනහිර පළාත් ඇතුළුව දිවයිනේ බොහෝ ප්‍රදේශවල පවතින තාප තරං...
02/05/2026

2026.05.02, සෙනසුරාදා, සවස 4.00

පසුගිය දින කිහිපය තුළ උතුරු සහ නැගෙනහිර පළාත් ඇතුළුව දිවයිනේ බොහෝ ප්‍රදේශවල පවතින තාප තරංගය එළඹෙන සිව්වන දින (2026.05.04) සිට උතුරු පළාතේ බොහෝ ප්‍රදේශ ඇතුළුව දිවයිනේ බොහෝ ප්‍රදේශවලට පැතිර යාමට ඉඩ ඇති අතර ඒ සමඟම එය තවත් තීව්‍ර වනු ඇත.

එම පදනම මත, ඉදිරි...

2026.05.04 දින උතුරු පළාතේ බොහෝ ප්‍රදේශවල, විශේෂයෙන් වවුනියාව, මුලතිව්, කිලිනොච්චි සහ මන්නාරම දිස්ත්‍රික්කවල පස්වරු 2 ට, ත්‍රිකුණාමලය සහ අනුරාධපුර පොළොන්නරුව දිස්ත්‍රික්කවල පස්වරු 4.30 ට සහ බස්නාහිර පළාතේ, දකුණු පළාතේ, සබරගමුව පළාතේ සහ වයඹ පළාත්වල බොහෝ ප්‍රදේශවල පස්වරු 1.00 ට, මධ්‍යම පළාතේ, උතුරු පළාතේ සහ ඌව පළාත්වල බොහෝ ප්‍රදේශවල පස්වරු 2.00 ට සහ ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ පස්වරු 3.00 ට.

උතුරු පළාතේ, විශේෂයෙන් යාපනය දිස්ත්‍රික්කයේ සමහර ප්‍රදේශවල සහ 2026.05.06 වන දින සවස 4.00 ට මධ්‍යස්ථ සිට සුළු තද වැසි ඇතිවීමේ හැකියාවක් පවතී.

2026.05.07 වන දින සවස 4.00 සිට බස්නාහිර පළාතේ සහ උතුරු සහ උතුරු මැද පළාත්වල සමහර ප්‍රදේශවල මධ්‍යස්ථ සිට සුළු තද වැසි ඇතිවීමේ හැකියාවක් පවතී.

2026.05.08 වන දින පස්වරු 1.00 ට උතුරු පළාතේ, උතුරු මැද පළාතේ, බස්නාහිර පළාතේ, දකුණු පළාතේ සහ මධ්‍යම පළාත්වල බොහෝ ප්‍රදේශවල මධ්‍යස්ථ සිට සුළු තද වැසි ඇතිවීමේ හැකියාවක් පවතී.

තීව්‍රතාවය (දෛනික වර්ෂාපතනය) සහ අඛණ්ඩතාව (දහවල් දහවල් පසු අඛණ්ඩව දින දෙකක් හෝ තුනක්) මත පදනම්ව, මධ්‍යම පළාතේ, වයඹ පළාතේ සහ ඌව පළාත්වල සමහර ප්‍රදේශවල මධ්‍යස්ථ නායයෑම් සිදුවිය හැකි බැවින්, ජනතාව තරමක් ප්‍රවේශම් විය යුතුය.

පසුගිය දින කිහිපය තුළ උතුරු සහ නැගෙනහිර පළාත් ඇතුළුව දිවයිනේ බොහෝ ප්‍රදේශවලට වැසි ලැබී ඇතත්, යාපනය දිස්ත්‍රික්කයේ සමහර ප්‍රදේශවලට ඉතා සුළු වර්ෂාවක් ලැබී ඇත. සාමාන්‍යයෙන්, තාප තරංග/බටහිර/හිම කුණාටු ඇති වන්නේ කාලගුණික තත්ත්වයන් මත පදනම්ව, විශේෂයෙන් උෂ්ණත්වය ඉහළ යාම මත පදනම්ව, නමුත් එය තීරණය කිරීමේදී දේශීය භූගෝලීය සාධක වැදගත් කාර්යභාරයක් ඉටු කරයි. එබැවින්, වලාකුළු සෑදුනද, දේශීය භූගෝලීය සාධකවල බලපෑම හේතුවෙන් යාපනය දිස්ත්‍රික්කයට අපේක්ෂිත වර්ෂාපතනය නොලැබීම සැලකිය යුතු කරුණකි.

තාප තරංග වර්ෂාව යනු ගිගුරුම් සහිත වැසි සහිත වර්ෂාවකි. ඉදිරි දිනවලදී ලැබෙන වර්ෂාව තද ගිගුරුම් සහිත වැසි වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. විශේෂයෙන් එළඹෙන පස්වන (05.05.2026), හත්වන (07.05.2026) සහ එකොළොස්වන දිනවලදී, මෙම වර්ෂාව ඇති වන විට ජනතාව ඉතා ප්‍රවේශම් විය යුතුය.

මේ අතර, එළඹෙන 2026.05.14 වන දින අරාබි මුහුදේ පීඩන අවපාතයක් ඇති වීමේ සම්භාවිතාවක් පවතී. සාමාන්‍යයෙන්, අරාබි මුහුදේ ඇතිවන පීඩන අවපාත සහ සුළි කුණාටු වලින් ශ්‍රී ලංකාවට බලපෑම් එල්ල වීමේ සම්භාවිතාව ඉතා අඩුය. කෙසේ වෙතත්, මේවා හේතුවෙන්, දකුණු, බටහිර සහ වයඹ පළාත්වලට සැලකිය යුතු වර්ෂාපතනයක් ලැබෙනු ඇත. මේ අතර, ශ්‍රී ලංකාවේ නිරිතදිග, බටහිර සහ වයඹ මුහුදු ප්‍රදේශ කැළඹිලි සහිත තත්ත්වයක පවතිනු ඇත. කෙසේ වෙතත්, ඇතිවන පීඩන අවපාතය පිළිබඳ පැහැදිලි නිගමන ලබා ගත හැක්කේ තවත් දින කිහිපයකට පසුවය.

- නාගමුතු ප්‍රතිපරාජා-

02.05.2026 சனிக்கிழமை மாலை 4.00 மணிகடந்த சில நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும்...
02/05/2026

02.05.2026 சனிக்கிழமை மாலை 4.00 மணி

கடந்த சில நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கிடைத்து வரும் வெப்பச் சலன மழை எதிர்வரும் நான்காம் திகதி முதல் (04.05.2026) வடக்கு மாகாணத்தின் பல பகுதிகள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு விரிவடையும் சாத்தியங்களும் அதேவேளை செறிவடையும் வாய்ப்புகளும் உள்ளன.

அந்த அடிப்படையில் எதிர்வரும்....

04.05.2026 பிற்பகல் 2 மணிக்கு வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக வவுனியா, முல்லைதீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 4.30 மணிக்கு திருகோணமலை மற்றும் அனுராதபுரம் பொலன்னறுவை மாவட்டங்களில் சற்று கனமான மழையும்

05.05.2026 அன்று பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மாகாணம் ,தென் மாகாணம், சப்ரகமுவா மாகாணம் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பிற்பகல் 2.00 மணியளவில் மத்திய மாகாணம், வடக்கு மாகாணம், ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் பிற்பகல் 3.00 மணியளவில் திருகோணமலை மாவட்டத்திலும் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

06.05.2026 பிற்பகல் 2.00 மணியளவில் வடக்கு மாகாணத்திற்கு குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும், பிற்பகல் 4.00 மணி அளவில் வடமத்தியமாகாணத்திற்கும் மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

07.05.2026 பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மாகாணத்தின் பகுதிகளிலும் பிற்பகல் 4.00 மணியிலிருந்து வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

08.05.2026 பிற்பகல் 1.00 மணி அளவில் வடமாகாணம், வடமத்தியமாகாணம், மேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மழையின் செறிவையும்( நாளுக்கான து) தொடர்ச்சித்தன்மையையும் பொறுத்து (இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மதியத்தின் பின்னர் மட்டும்) மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் நடுத்தர அளவிலான நிலச்சரிவு நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்பதனால் மக்கள் சற்று அவதானமாக இருப்பது அவசியம்.

கடந்த சில நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் மழை கிடைத்தாலும் கூட யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளுக்கு மழை மிக மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றது. பொதுவாக வெப்பச் சலன/ மேற்காவுகை/ உகைப்பு மழை என்பது வளிமண்டலவியல் நிலைமைகளின் அடிப்படையில் குறிப்பாக அதிகரிக்கும் வெப்பநிலையின் அடிப்படையில் உருவாகினாலும் அதனைத் தீர்மானிப்பதில் உள்ளூர் புவியியல் காரணிகளே செல்வாக்கு செலுத்துகின்றன . எனவே உள்ளூர் புவியியல் காரணிகளின் செல்வாக்கின் விளைவாலேயே, மேகங்கள் உருவாகினாலும் கூட யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எதிர்பார்த்த அளவு மழை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்பச் சலன மழை இடி மின்னல் நிகழ்வுகளோடு கூடிய மழை. அதிலும் எதிர்வரும் நாட்களில் கிடைக்க உள்ள மழை அதிக இடி மின்னலோடு கூடிய மழை வீழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக எதிர்வரும் ஐந்தாம் திகதி(05.05.2026) ஏழாம் திகதி(07.05.2026) மற்றும் பதினோராம் திகதிகளில் அதிகளவிலான இடி மின்னல் நிகழ்வுகளுக்கு வாய்ப்பு இருப்பதனால் இந்த மழை கிடைக்கும் பொழுது மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியமானதாகும்.

அதேவேளை எதிர்வரும் 14.05.2026 அன்று அரபிக் கடலில் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக அரபிக் கடலில் உருவாகும் தாழமுக்கங்கள் மற்றும் சூறாவளிகளினால் இலங்கை மிக மிகக் குறைவாகவே பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆனாலும் இவற்றினால் தெற்கு, மேற்கு வடமேற்கு மாகாணங்கள் குறிப்பிடத்தக்க அளவு மழையைப் பெறும். அதேவேளை இலங்கையின் தென்மேற்கு, மேற்கு, வட மேற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். எனினும் உருவாகவுள்ள தாழமுக்கம் தொடர்பாக இன்னும் சில நாட்களுக்கு பின்னரே தெளிவான முடிவுகளைப் பெற முடியும்.

- நாகமுத்து பிரதீபராஜா -

Address

Jaffna Town
40000

Telephone

+94769178808

Website

Alerts

Be the first to know and let us send you an email when பொது அறிவுத்தகவல்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category