சசியுடன்_சட்டம்_அறிவோம்

  • Home
  • India
  • Tirupur
  • சசியுடன்_சட்டம்_அறிவோம்

சசியுடன்_சட்டம்_அறிவோம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சசியுடன்_சட்டம்_அறிவோம், Lawyer & Law Firm, Tiruppur, Tirupur.

தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த தலைவர் திரு எஸ் ஜி சூர்யா அவர்களை  காவல்துறை கைது செய்துள்ளது. அவர் தமிழக பாஜக வின் முக்கிய முன...
07/03/2025

தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த தலைவர் திரு எஸ் ஜி சூர்யா அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. அவர் தமிழக பாஜக வின் முக்கிய முன்னெடுப்பான தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக செயல்படும் அனைவருக்கும் சம கல்வி எனும் கையெழுத்து இயக்கத்தின் பணியின் போது கண்ணகி நகர் காவல் நிலைய காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திரு. சூர்யா, பள்ளி மாணவர்களுக்கு மூன்று மொழி கற்கை திட்டத்தை ஆதரிக்கும் வகையில் கையொப்பம் சேகரிக்க முயன்ற போது, அவர் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 126(2), 192 மற்றும் 2015 இன் இளைஞர் நீதி சட்டத்தின் பிரிவு 3 இன் கீழ் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிரிவுகள் :
BNS 126(2):
இந்த பிரிவு, தவறான தடுப்பு குற்றமாகக் கருதப்படுகிறது. திரு.சூர்யா, கையொப்பம் சேகரிப்பு மூலம், அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்க்கும் வகையில் மற்றும் பள்ளி குழந்தைகளை தவறாக தடுத்ததாக செயல்பட்டதாகக் கருதி கைது செய்யபட்டுள்ளார்.
BNS 192:
இந்த பிரிவு கலவரத்தை தூண்டுவதற்கான உந்துதலுக்கான சட்டமாகும். திரு. சூர்யா, தனது நடவடிக்கைகள் மூலம் சமூகத்தில் கலவரத்தை தூண்டுவதாக கருதி கைது செய்யபட்டுள்ளார்.

இளைஞர் நீதி சட்டம் 2015 - பிரிவு 3:
இந்த பிரிவு, குழந்தைகளின் சிறந்த நலனை முன்னிறுத்தும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், சூர்யாவின் நடவடிக்கைகள் குழந்தைகளின் நலனை பாதிக்கும் வகையில் இருக்கலாம் என்று போலீசாரின் கருத்து.

திரு.சூர்யா வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதால், அவரை இரண்டு நாட்கள் ரிமாண்டில் வைக்க போலீசாருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது . இது வார இறுதி நீதிமன்ற விடுமுறை காரணமாகவும், ruling partyக்கு அரசியல் நன்மைகளை வழங்குவதற்காகவும் இருக்கலாம்.

திரு.சூர்யா போன்ற தனிநபர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்படுவது ஆளும் கட்சியின் அரசியல் விளையாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. இந்திய உச்ச நீதிமன்றம் சாதாரண வழக்குகளில் வெள்ளிக்கிழமை கைது செய்யக்கூடாது என்று பல முறை தெளிவுபடுத்தியுள்ளது, ஆனால் தமிழக போலீசார் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வெள்ளிக்கிழமை கைதுகள் மற்றும் அரசியல் விளையாட்டுகள் தொடர்ந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சட்ட முறைமையையும் பாதிக்கும் என்று அச்சம் ஏற்படுகிறது.

போலீசார் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது சட்ட நம்பிக்கையை பலவீனப்படுத்துகிறது. இது சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தி பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கிறது. இந்த நடவடிக்கைகள் நீதிமன்றங்களால் கண்டிக்கப்பட வேண்டும்.

வழக்குரைஞர்,
சசி பிரபாகரன் செல்வராஜ்.

கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு அனுமதி!கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ஆர்எஸ்எஸ் சர்கசங...
19/02/2025

கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு அனுமதி!

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ஆர்எஸ்எஸ் சர்கசங்கசலக் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி, புர்பா பர்தமானில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய வளாகத்தில், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான நிகழ்ச்சியில் சர்கசங்கசலக் உரையாற்ற இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஒலிபெருக்கிகள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதால், தேபாசிஷ் சௌத்ரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சுற்றுச்சூழல் துறையின் 2022 ஆம் ஆண்டு உத்தரவின்படி, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுத் தேர்வு காலங்களில் இந்தத் தடை அமலில் இருக்கும்.

பாதுகாப்பு தரப்பு வாதங்கள்:

--> அரசு வழக்கறிஞர் கிஷோர் தத்தா, பொதுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு தடையை அமல்படுத்தியதாகவும், இது 2022 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட பொதுவான தடை என்றும் வாதிட்டார்.
--> தற்போது மத்யாமிக் தேர்வுகள் நடைபெற்று வருவதால், ஒலிபெருக்கிகள் பயன்படுத்த அனுமதித்தால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும், ஒலி அளவைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை என்றும் கூறினார்.
--> எனவே, நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் அல்லது வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரினார்.

நீதிபதி அளித்த காரணங்கள் மற்றும் முக்கிய உண்மைகள்:

--> நீதிபதி அம்ரிதா சின்ஹா தனது உத்தரவில், நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தேர்வுகளுக்கு இடையூறு இருக்காது என்றும், அருகிலுள்ள பள்ளிகள் இந்திய விளையாட்டு ஆணைய வளாகத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
--> நிகழ்ச்சி ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும் என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
--> ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படாது, ஒலிப்பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், ஒலி குறிப்பிட்ட இடத்திற்குள் மட்டுமே இருக்கும் என்றும் மனுதாரர் உறுதியளித்தார்.
-->இந்த காரணங்களின் அடிப்படையில், நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நீதிமன்ற உத்தரவு:

--> ஒலி அளவு குறைந்தபட்சமாக இருக்க வேண்டும் என்றும், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

--> மனுதாரர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த உத்தரவின் மூலம், ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

வழக்கு எண் : W.P.A 3570 of 2025

வழக்கு : Shri Debasish Choudhury -versus- The State of West Bengal & Ors

விவசாயிகள் கவனத்திற்குபிரதம மந்திரி கிசான்  சம்மான் நிதி  திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000/-  வழங்க ஆணையிடப்பட்ட...
20/06/2019

விவசாயிகள் கவனத்திற்கு

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000/- வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கென திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும்
எதிர்வரும் 21.06.2019, 22.06.2019 மற்றும் 23.06.2009 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மேற்படி முகாமில்
விவசாயிகள் தனியாக மனு எதுவும் அளிக்க தேவையில்லை.

விவசாயிகள் இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு கீழ்க்கண்ட விபரங்கள் :
சர்வே எண்,
பட்டா எண்,
ஆதார் எண்,
வங்கி சேமிப்புக்கணக்கு எண்,
குடும்ப அட்டை எண்
மொபைல் எண் போன்றவைகளை சம்பந்தப் பட்ட கணக்கெடுப்பு பணியாளர்களிடம் / கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்துப் பயன் பெறலாம்.

மேலும், விவசாயிகள் தங்களது நிலத்திற்கான பட்டா அவர்களது தாய் அல்லது தந்தை பெயரில் இருக்கும் பட்சத்தில் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளவும் மேற்படி முகாமில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் மேற்படி சிறப்பு முகாமை நல்ல முறையில் பயன்படுத்தி ரூ 6 ஆயிரம் நிதியுதவி பெறுவதற்கு தேவையான விவரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

#சசியுடன்_சட்டம்_அறிவோம்

 #உண்மைஅறிவோம் #ரஞ்சித்எனும்பொய்யன்பறையர்களின் நிலங்களைப் பறித்தவன் ராசராச சோழன்.- பா.ரஞ்சித்.இது சிறிதும் ஆதாரமற்ற கருத...
10/06/2019

#உண்மைஅறிவோம்

#ரஞ்சித்எனும்பொய்யன்

பறையர்களின் நிலங்களைப் பறித்தவன் ராசராச சோழன்.
- பா.ரஞ்சித்.

இது சிறிதும் ஆதாரமற்ற கருத்து.
ராசராச சோழனின் மகனான ராசேந்திரசோழன் அந்தனர், கொல்லர், கணக்கர், காவிதி உள்ளிட்ட பல பிரிவினரை உள்ளடக்கி கீழ்த் தஞ்சை பகுதிகள் பலவற்றை இணைத்து மிகப்பெரிய பாசனப் பகுதியுடன் கூடிய குடியிருப்பை ஏற்படுத்தினான். அதை 57 செப்பேடுகளாக எழுதி வைத்தான். அவைதான் "கரந்தைச் செப்பேடுகள்" என்று அழைக்கப்படுகின்றன..

அவ்வாறு உருவாக்கப்பட்ட பகுதியில், நிலங்களை அளந்து மக்களுக்கு ஒப்படைக்கும் போது, அப்பகுதிகளில் ஏற்கனவே உள்ள பறையர் மற்றும் கம்மாளர் ஆகியோரது விவசாய நிலங்களை விட்டுவிட்டு மற்ற நிலங்களையே அளந்து மக்களுக்கு ஒப்படைக்கச் சொல்கிறான்.
அது மட்டுமின்றி, பறையர் மற்றும் கம்மாளர் நிலங்களுக்கு பூரண வரிவிலக்கு அளித்துள்ளான்.ஆனால் பார்ப்பனர்களது நிலங்களுக்கு முதல் மூன்றாண்டுகளுக்கு வரிச் சலுகையும், பிறகு முழுவரியும் கட்டி வர வேண்டும் என்றும் விதித்துள்ளான்.ராசராச சோழனும் இதையே தான் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளான்.

உண்மை இவ்வாறிருக்க பா.ரஞ்சித் இவ்வாறு பொய்யுரைக்க அவசியம் என்ன....

மேற்கண்ட கரந்தைச் செப்பேடுகள் கூறுவது படி கி.பி.11 ஆம் நூற்றாண்டில் பறையர்கள் விவசாயிகளாகவும், அரசிடம் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களாகவும் சமூகப் படிநிலையில் மிக உயர்வான இடத்திலும் இருந்துள்ளனர் என்று தெரிகிறது...

ஆனால் ,இந்த திராவிட மற்றும் தலித்திய வாதிகள் தாங்கள் எப்போதுமே தீண்டத்தகாதவர்களாகத் தான் இருந்துள்ளோம் என்று அழுகாச்சி காவியம் பாடி பறையர் மக்களை கடும் தாழ்வு மனப்பான்மையில் தள்ளி வருகின்றனர்...

06/06/2019

தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு வர நினைப்பவர்களுக்கு (T.C ) வாங்குவதுதான் பிரச்சினையா???
கவலை வேண்டாம் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 8 ஆம் வகுப்புவரை குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க மாற்றுச் சான்றிதழ் (T.C) தேவையில்லை... மாற்றுச் சான்றிதழ் இல்லாமலே குழந்தைகளை வயதுக்கேற்ற வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளலாம்...
வாருங்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி...

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெ...
25/03/2019

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.

2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,

• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.

• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.

• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.

7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.

8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.

1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை

போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.

1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.

11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.

12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .

13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.

15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்

Team Handmade Editz Heartfelt Condolence on death of our Ex.Hounarable  Defense Minister and Goa CM., Mr.Manohar Parikka...
17/03/2019

Team Handmade Editz Heartfelt Condolence on death of our Ex.Hounarable Defense Minister and Goa CM., Mr.Manohar Parikkar !! He is more than a politician ! and Nation first Person ! May his soul Rest in peace on the Foot of our Bharat Matha ! Jai Hind !

காவல்துறை எப்போது நீதிமன்ற ஆணை இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும்….. உதாரணம் பொது ஊழியர் போல  ஆள்மாறாட்டம் செய்தல் அல்ல...
16/03/2019

காவல்துறை எப்போது நீதிமன்ற ஆணை இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும்…..

உதாரணம்

பொது ஊழியர் போல ஆள்மாறாட்டம் செய்தல் அல்லது பொது ஊழியர் போல உடையணிந்து பிறரை ஏமாற்றுவது( காவல்துறையினரை போல உடையணிந்து ஏமாற்றுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றுதல் போன்றவை)

இவ்வகை தண்டனைக்குரிய குற்றம் செய்திருக்கும் குற்றவாளிகளுக்கு புகலிடம் அளிப்பது பாதுகாப்பதும் குற்றமே

குற்றவாளிகளை காப்பாற்ற அவரிடமிருந்து வெகுமதி பெறுவதும் குற்றமே

கள்ள நாணயம் கள்ளநோட்டுகள் தயாரித்தல் இவற்றைத் தயாரிக்கும் எந்திரங்களை உருவாக்குதல் அந்த எந்திரங்களை பாதுகாத்து வைத்திருத்தல் அவற்றை வாணிகம் செய்தல் கள்ள நாணயம் மற்றும் நோட்டுகளை புழக்கத்தில் விடுதல் மற்றும் அவை தொடர்பான அனைத்தும் பிடிஆணை தேவையில்லாத குற்றங்கள்….

பொது இடங்களில் ஆபத்து உண்டாக்கும் வகையில் வண்டிகளை மிக வேகமாக ஓட்டுவதும் குற்றமே

படகு கப்பல் போன்ற நீரில் பயணிக்கும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களை பயணத்துக்கு ஏற்ற செல்வதும் குற்றமே

வழிபாட்டுத் தலங்களை கெடுத்தல் அழித்தல்மற்றும் பிற மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் எழுதுதல் பேசுதல் அவையும் குற்றமே…

கொலைக்குற்றம், வரதட்சணை மரணம், கொலை முயற்சி, தற்கொலை முயற்சி, தற்கொலைக்கு தூண்டுதல்

பிறரைத் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்துதல்,

முறையின்றி பிறரை சிறைபிடித்து வைத்தல்,

பெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வண்ணம் பெண்களிடம் கீழ்தரமாக நடந்து கொள்ளுதல்,

பெண்ணை தொடர்ந்து பின் செல்லுதல்,

கட்டாய திருமணத்திற்கு வலியுறுத்தி பெண்ணை கடத்துதல்,

குற்றமுறு நம்பிக்கை மோசடி செய்தல்,

குற்றமுறு மிரட்டல் செய்தல்,

ஒரு திருட்டை செய்தல் அந்த திருட்டு சொத்தை பெறுதல் அதை விற்று பணமாக மாற்றுவது மறைத்து வைப்பது மறைத்து வைக்க உதவுவது போன்ற அனைத்தும் குற்றமே,

போலி ஆவணங்களைத் தயாரித்தல்., போலி ஆவணம் என்று தெரிந்தும் அதைவைத்து பிறரை ஏமாற்றுதல்

மேற்கூறிய குற்றங்களை செய்தால் நீதிமன்றத்தின் கைது ஆணை இன்றி அவரை கைது செய்ய காவல் துறை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு !!

25/02/2019

#தேசிய_பாதுகாப்பு_சட்டம்_ 2000revised act
#தேசதலைவர்கள் #அரசுபணி பொறுப்பு.
சோசியல் மீடியாவில் வெறுப்பு செய்திகள், போலியான மெசேஜ்கள், பாலியல் தொல்லைகள், மார்பிங் புகைப்படங்கள் அல்லது ஆபாச வீடியோக்களை அனுப்பி யாராவது உங்களைத் தொந்தரவு செய்தால், அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, அந்தப் படத்தையும், அதை அனுப்பியவரின் மொபைல் எண்ணையும் [email protected] என்ற இ-மெயிலுக்கு அனுப்புங்கள்.

Address

Tiruppur
Tirupur
641665

Alerts

Be the first to know and let us send you an email when சசியுடன்_சட்டம்_அறிவோம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share