08/07/2022
*யாரெல்லாம் சொத்துக்கு உரிமையாளர்?*
*[இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி, இது இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மதத்தினருக்கு வித்தியாசப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்]*
*திருமணமான ஆணின் சொத்துக்கு உரிமை: மனைவி, மக்கள் – தாய்*
*திருமணமான பெண்ணின் சொத்துக்கு உரிமை: கணவன் – பிள்ளைகள்*
*திருமணமாகாத ஆணின் சொத்துக்கு உரிமை: – பெற்றோர்*
*திருமணமாகாத பெண்ணின் சொத்துக்கு உரிமை: – பெற்றோர்*
*பெற்றோர்கள் இல்லையென்றால் இருதரப்புக்குமே சகோதர சகோதரிகள் சொத்துக்கு உரிமை கொண்டாடலாம்.*
*திருமணம் ஆகிவிட்ட ஓர் ஆணின் மனைவி, மக்கள் இறந்து விட்டால், அவருடைய மகன் அல்லது மகள் வயிற்று வாரிசுகளுக்கு நேரடியாக சொத்துப் போக நேரிடும்*
*கணவர் இறப்பிற்கு அவரது மனைவியே காரணம் என்று சட்டத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது கணவரது மரண வழக்கில் மனைவி சம்பந்தப்பட்டு இருந்தாலோ மனைவி கணவரது சொத்தில் பங்கு கேட்க முடியாது*
*தாத்தா மற்றும் தந்தை சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு இணையாக பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது. நிலம், வயல் மற்றும் அசையா சொத்துகளை பெண்களும் பிரித்து கொள்ளலாம். ஆனாலும் பாரம்பரியமாக இருக்கும் வீட்டை சகோதரன் விரும்பும் வரை அவரின் சம்மதமில்லாமல் அதை விற்கவோ, விற்பனை செய்து பணம் கொடுக்க வேண்டும் என்றோ அடம் பிடிக்க முடியாது*
*இந்த உரிமைகள் எல்லாம் தனிப்பட்ட முறையில் யாருக்குமே உயிலோ அல்லது பாகப்பிரிவினை செய்து வைக்காமல் இருந்தால் மட்டுமே பொருந்தும்*
*உயில் எழுதி வைத்து விட்டால் உயிலின் தன்மையை பொறுத்துதான் அந்த சொத்துக்களை பிரிக்க முடியும்*
*முன்பே சொன்னது போல உயிலை எத்தனை முறையும் எழுதலாம். மாற்றி அமைக்கலாம்*
*கடைசியாக எழுதிய உயிலே செல்லுபடியாகும். எனவே காலம் கடத்தாது உயில் எழுதுங்கள்*
🙏🙏🙏🙏🙏🙏🙏 *NSD LAW FIRM முகநூல் பக்கம்* https://www.facebook.com/NSD-LAW-FIRM-cell96777-06622-696759200699260/ *NSD LAW FIRM*
*Trichy.NS.DILIP.BA.,BL.* (Advocate & Legal consultant)
[இலவச சட்ட ஆலோசனை& சட்ட சேவை வழங்க இயலாது]
*96777-06622 என்ற வாட்சப் என்னில் உரிய தகவல் ஆவனங்களுடன் மெசேஜ் மட்டும் செய்யவும்*
*NSD LAW FIRM வாட்சப் குழுவில் இனைய*
https://chat.whatsapp.com/GkKPre6Rl1UFETRBgdnwbd
*NSD LAW FIRM டெலிகிராம் குழுவில் இனைய* https://t.me/NSDLAWASSOCIATED
*NSDசட்ட பார்வை*
*YOUTUBE சேனலை* subscribe செய்து பாருங்கள்🔔 https://youtube.com/channel/UC78USnaLqpYbVmKQctTm2Ow பின்தொடர்ந்து தினமும் சட்ட தகவல்களை அறியலாம்!