National Human Rights and Anti Corruption Movement

National Human Rights and Anti Corruption Movement தேசிய மனித உரிமைகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கம்

24/05/2026
பிரபலங்களுக்கு உடனடி சிகிச்சை... பாமரருக்கு எப்போது?மருத்துவ உதவி — பரிந்துரையால் அல்ல, தேவையால் கிடைக்க வேண்டும்!நகைச்ச...
16/05/2026

பிரபலங்களுக்கு உடனடி சிகிச்சை... பாமரருக்கு எப்போது?
மருத்துவ உதவி — பரிந்துரையால் அல்ல, தேவையால் கிடைக்க வேண்டும்!

நகைச்சுவை நடிகர் முத்துக்காளை அவர்களின் மனைவி மாலதி அவர்கள், மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (KMC)-யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, முத்துக்காளை அவர்கள் தாமே வெளியிட்ட வீடியோவில் உருக்கமாக தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பம் மிகுந்த கவலையிலும் வேதனையிலும் இருக்கும் இந்த நேரத்தில், மாலதி அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கட்சி சார்பாக மனதார பிரார்த்தனைகளையும் செய்கிறோம்.

வெளியான தகவல்களின் படி, முத்துக்காளை அவர்கள் வெளியிட்ட வீடியோவைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் அவர்களின் கவனத்திற்கு இந்த விஷயம் சென்றது. அதன் பின்னர், அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் நேரில் சென்று முத்துக்காளை அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, மேல்சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனிதநேயத்தின் அடிப்படையில் இப்படிப்பட்ட உதவி கிடைப்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. அதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால், இங்கு எழும் மிகப் பெரிய கேள்வி வேறு ஒன்று.

ஒரு பிரபலமான நபர் வீடியோ வெளியிட்டால் உடனே உதவி கிடைக்கிறது.
அப்படியானால், வீடியோ வெளியிட முடியாத சாதாரண மக்களுக்கு யார் உதவி செய்வார்கள்?

ஒரு கூலி தொழிலாளி, ஒரு விவசாயி, ஒரு ஆட்டோ ஓட்டுனர், ஒரு வீட்டு வேலைக்காரி, ஒரு முதிய தாய், ஒரு ஏழை குடும்பம் — இவர்களில் யாருக்காவது இதேபோன்ற மேல்சிகிச்சை அவசியம் ஏற்பட்டால், அவர்கள் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு முதல்வரிடம் வேண்டுகோள் வைக்க முடியுமா?
அவர்கள் பின்னால் ஊடக கவனமும் இருக்காது. அவர்களுக்கு அரசியல் அல்லது பிரபலத் தொடர்பும் இருக்காது. அப்படியென்றால், அவர்கள் உயிர் குறைவானதா?

இதுவே நம் கவலையின் மையம்.

மருத்துவம் என்பது யாரோ ஒருவர் பரிந்துரை செய்தால் கிடைக்க வேண்டிய உதவி அல்ல.
மருத்துவம் என்பது தேவைப்படுகிறவருக்கு தானாகக் கிடைக்க வேண்டிய அரசின் அடிப்படை பொறுப்பு.

ஒரு அரசு மருத்துவமனையில் நோயாளிக்கான நிலைமை தீவிரமானது, மேலும் உயர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவர்கள் கருதினால், அந்த நோயாளி பிரபலமா, ஏழையா, செல்வாக்குள்ளவரா, ஆதரவற்றவரா என்று பார்க்காமல், அடுத்த கட்ட சிகிச்சை தானாகவே தொடங்க வேண்டும்.
அதற்காக முதல்வர் தனியாகத் தலையிட வேண்டிய சூழல் இருக்கக் கூடாது.
அதற்காக அமைச்சர் ஒருவரை அனுப்பி பரிந்துரை செய்ய வேண்டிய நிலையும் இருக்கக் கூடாது.
அரசு மருத்துவ அமைப்பே தானாக இயங்க வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு ஒரு உண்மையை நினைவூட்டுகின்றன:
இன்றும் பல சாதாரண மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை, படுக்கை, மருந்து, ஸ்கேன், அறுவைசிகிச்சை, உயர் சிகிச்சை பரிந்துரை, நிதி உதவி ஆகியவற்றிற்காக கதவுக்கதவாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களால் ஒவ்வொரு முறையும் “வீடியோ” போட்டுக் கேட்க முடியாது.
அவர்களால் ஒவ்வொரு முறையும் “முதல்வரிடம்” சென்று சொல்ல முடியாது.
அவர்களால் ஒவ்வொரு முறையும் “பிரபலங்களின் கவனம்” பெறவும் முடியாது.

எனவே, இந்தச் சம்பவத்தை தனிப்பட்ட உதவி சம்பவமாக மட்டும் பார்க்காமல், தமிழக அரசு ஒரு நிரந்தர கொள்கை மாற்றத்திற்கான முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கட்சி சார்பாக எங்கள் வலியுறுத்தல்கள்:

1.அரசு மருத்துவமனைகளில் தீவிரநிலை நோயாளிகளுக்கான “தானியங்கி மேல்சிகிச்சை பரிந்துரை முறை” உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும்.

2.மருத்துவர்கள் உயர் சிகிச்சை அவசியம் என பரிந்துரைத்தவுடன், நோயாளி எந்தப் பின்னணியில் இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.ஏழை மற்றும் ஆதரவற்ற நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை உதவி செல்கள் அரசு மருத்துவமனைகளில் செயல்பட வேண்டும்.

4.மேல்சிகிச்சைக்கான நிதி, காப்பீடு, மாற்று மருத்துவமனை அனுமதி, மருந்து, பரிசோதனை, ICU உள்ளிட்ட வசதிகள் தாமதமின்றி கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும்.

5.“பிரபலங்களுக்கு உடனடி உதவி, பாமரருக்கு தாமதமான உதவி” என்ற நிலை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

முத்துக்காளை அவர்களின் மனைவிக்கு உதவி கிடைப்பது நல்லது.
ஆனால், அந்த உதவி எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
ஓர் உயிருக்கும் அதிக மதிப்பு, குறைந்த மதிப்பு என்று இருக்கக் கூடாது.
அரசு மருத்துவத்தில் முகம் பார்க்கக் கூடாது; அவசியம் மட்டும் பார்க்க வேண்டும்.

மக்களின் உயிர் பாதுகாப்பு என்பது விளம்பர விஷயம் அல்ல.
அது அரசின் தர்மமும் கடமையும் ஆகும்.

தேசிய ஜனநாயகக் கட்சி சார்பாக,
தமிழக அரசு இந்த விவகாரத்தில் தெளிவான, மனிதநேயமான, நிரந்தரமான சுகாதார நடைமுறையை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பிரபலங்களுக்கு கிடைக்கும் வேகமும், கவனமும், சிகிச்சையும் —
பாமர மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும்!

இப்படிக்கு,
சுப.கார்த்திகேயன் MBA., MA., LLM
தலைவர்
தேசிய ஜனநாயகக் கட்சி

#தேசியஜனநாயககட்சி #சுபகார்த்திகேயன்

இரயில்வே மூலம் இறந்த உடலை எடுத்துச் செல்லலாம் – பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல்ஒருவர் சென்னை போன்ற நகரப்பகுதியில் மரணம் அடை...
19/04/2026

இரயில்வே மூலம் இறந்த உடலை எடுத்துச் செல்லலாம் – பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல்

ஒருவர் சென்னை போன்ற நகரப்பகுதியில் மரணம் அடைந்தால், அவரின் உடலை கன்னியாகுமரி போன்ற தூர இடங்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும்போது பல நேரங்களில் மிகவும் அதிக செலவு ஏற்படுகிறது. சில சமயங்களில் இது ₹75,000 வரை கூட செல்லக்கூடும்.

ஆனால், பலருக்கும் தெரியாத ஒரு மாற்று வழி உள்ளது.

இரயில்வே மூலம் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி உள்ளது.

இதன் மூலம் சுமார் ₹1,000 முதல் ₹2,000 வரை செலவில் உடலை மாற்றிச் செல்ல முடியும்.

துயர நேரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய உதவியாக இருக்கும்.

மனவேதனையுடன் இருக்கும் அந்த நேரத்தில், தேவையற்ற பணச்சுமையை குறைக்க இது ஒரு நல்ல வழிமுறை.

தேவையான நடைமுறைகள்:

1. இறந்தவர் தொற்றுநோயால் மரணம் அடையவில்லை என்பதற்கான மருத்துவர் சான்றிதழ் பெற வேண்டும்.

2. உடலை காற்று புகாதவாறு, முறையாக sealed செய்யப்பட்ட நிலையில் பேக்கிங் செய்ய வேண்டும்.

3. உடலுடன் குறைந்தபட்சம் ஒருவர் பயணம் செய்ய வேண்டும்.

4. ரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பே நிலையத்திற்கு வர வேண்டும்.

5. உடல் சுமார் 100 கிலோ சரக்காக கணக்கிட்டு, அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

6. உடன் வரும் நபருக்கு தனியாக பயணச்சீட்டு எடுக்க வேண்டும்.

மொத்த செலவு:

சுமார் ₹1,000 – ₹2,000 மட்டும்

சமூகப் பொறுப்பு:

நாம் அறிந்த ஒரு பயனுள்ள தகவலை, அதைப் பற்றி அறியாதவர்களுடன் பகிர்வது ஒரு நல்ல மனிதநேய செயல்.

இது பல குடும்பங்களுக்கு கடினமான இறுதி நேரங்களில் பணச்சுமையை குறைக்க உதவும்.

அறிந்ததை பகிர்வோம்.
துயரத்தில் துணை நாமே.
மனிதம் வாழ்க!

அன்புடன்,
வழக்கறிஞர் #சுப_கார்த்திகேயன்

📱 சட்டம் சார்ந்த அனைத்து தகவல்களும் – இனி உங்கள் கைப்பேசியில்!புதிய சட்டங்கள், முக்கிய நீதிமன்ற தீர்ப்புகள், பொதுமக்களுக...
13/02/2026

📱 சட்டம் சார்ந்த அனைத்து தகவல்களும் – இனி உங்கள் கைப்பேசியில்!

புதிய சட்டங்கள், முக்கிய நீதிமன்ற தீர்ப்புகள், பொதுமக்களுக்கு பயன்படும் சட்ட விழிப்புணர்வு செய்திகள் – அனைத்தும் ஒரே செயலியில்!

✨ உங்கள் நம்பகமான “சட்ட நண்பன்” App

✔️ எளிய மொழியில் சட்ட விளக்கங்கள்
✔️ துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்கள்
✔️ தினசரி புதிய அப்டேட்கள்
✔️ அனைவருக்கும் பயன்படும் சட்ட அறிவுரை

சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்…
உங்கள் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்…

📥 இன்றே Play Store-இல் இருந்து பதிவிறக்கம் செய்யுங்கள்:

https://play.google.com/store/apps/details?id=com.yeskay.snnews

சட்ட அறிவில் முன்னேற – இன்றே தொடங்குங்கள்!

12/02/2026

பொதுப் பணியாளர் தேர்வு வாரியம் தொடர்பாக தகவல் கோருதல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) - மாடல் மனு (பொதுப் பணியாளர் தேர்வு வாரியம் தொடர்பாக தகவல் கோருதல்) From, சுப. கார்த்திகேயன், எண்:7, பழைய பேருந்து நிலையம், இராசிபுரம், நாமக்கல் - 637408. செல்: 8300076988 மின்னஞ்சல்: [email protected] To, பொது தகவல் அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை - 600003. Subject: தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 - தகவல் கோருதல் தொடர்பாக. Sir/Madam, நான் கீழே குறிப்பிடப்பட்ட தகவல்களை, 2005 ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின்படி, கோருகிறேன்....

12/02/2026

RTI Act Section 6 – தகவல் கோருவதற்கான முறைகள்

RTI Act Section 6 – தகவல் கோருவதற்கான முறைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அறை 6 படி, எந்த ஒரு இந்தியக் குடிமகனும் எந்த ஒரு அரசு அலுவலகத்திலிருந்தும் தேவையான தகவலை எழுத்துப் பூர்வமாக அல்லது மின்னஞ்சல் மூலம் கோரலாம். விண்ணப்பம் ஏதேனும் குறிப்பிட்ட வடிவத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தகவல் கோர ஒரு காரணம் சொல்ல தேவையில்லை. குறைந்தபட்ச RTI விண்ணப்பக் கட்டணம் ₹10 ஆகும். (குறிப்பிட்ட பிரிவுகளில் கட்டணம் இல்லாது தகவல் கோரலாம்). ---- RTI விண்ணப்பத்தின் மாதிரி (Model RTI Application)...

RTI மூலம் பெற முடியாத தகவல்கள் – சட்டப்பூர்வமாக விதிக்கப்பட்ட வரம்புகள்RTI மூலம் பெற முடியாத தகவல்கள் – சட்டப்பூர்வமாக வ...
12/02/2026

RTI மூலம் பெற முடியாத தகவல்கள் – சட்டப்பூர்வமாக விதிக்கப்பட்ட வரம்புகள்

RTI மூலம் பெற முடியாத தகவல்கள் – சட்டப்பூர்வமாக விதிக்கப்பட்ட வரம்புகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (RTI Act) பொதுமக்களுக்கு அரசாங்கம் மற்றும் அதன் நிறுவனங்களின் தகவல்களை அறிய உரிமை அளிக்கிறது. ஆனால், சில குறிப்பிட்ட தரவுகள் இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட முடியாது. RTI சட்டம் 2005 - பிரிவு 8 (Section - விலக்கப்பட்ட தகவல்கள்: கீழ்க்கண்ட தகவல்கள் RTI மூலம் பெற முடியாது: 1. தேசிய பாதுகாப்பு மற்றும் மதிப்புரிமை: தேசத்தின் பாதுகாப்பு, உறவுமுறை, மற்றும் இராணுவ ரகசிய தகவல்கள்....

RTI மூலம் பெற முடியாத தகவல்கள் – சட்டப்பூர்வமாக விதிக்கப்பட்ட வரம்புகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (RTI Act) பொது....

RTI Act, 2005 – சட்டத்தின் நோக்கம்RTI Act, 2005 - சட்டத்தின் நோக்கம் இந்தச் சட்டம் மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை வழங்...
12/02/2026

RTI Act, 2005 – சட்டத்தின் நோக்கம்

RTI Act, 2005 - சட்டத்தின் நோக்கம் இந்தச் சட்டம் மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை வழங்க உருவாக்கப்பட்டது. எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் (மத்திய, மாநில, உள்ளாட்சி அரசு) உள்ள தகவல்களை மக்கள் கேட்டு பெறலாம். இது அரசு நிர்வாகத்தில் பாரத மக்கள் நேரடி பங்கு பெற உதவுகிறது.

RTI Act, 2005 – சட்டத்தின் நோக்கம் இந்தச் சட்டம் மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை வழங்க உருவாக்கப்பட்டது. எந்த ஒரு அரச.....

RTI விண்ணப்பத்திற்கான நேர வரம்புRTI விண்ணப்பத்திற்கான நேர வரம்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பொதுமக்கள் எந்தவ...
12/02/2026

RTI விண்ணப்பத்திற்கான நேர வரம்பு

RTI விண்ணப்பத்திற்கான நேர வரம்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பொதுமக்கள் எந்தவொரு அரசு அலுவலகத்திலிருந்தும் தகவலை கேட்டால், அந்த தகவல் 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். வயது, வருவாய், கல்வி போன்ற தனிப்பட்ட தகவல்களுக்கு அரசு நிராகரிக்கலாம். சத்தியப்பிரமாணத்துடன் தகவல் கேட்க தேவையில்லை, ஆனால் தகவல் கேட்ட அலுவலகம் சரியானது என்பதற்குச் சான்று வேண்டும்.

RTI விண்ணப்பத்திற்கான நேர வரம்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பொதுமக்கள் எந்தவொரு அரசு அலுவலகத்திலிர.....

காவல் நிலையம் புகாரை ஏற்க மறுப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனு(Party-in-Person / மனுதாரர் தானே வாதா...
12/02/2026

காவல் நிலையம் புகாரை ஏற்க மறுப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனு

(Party-in-Person / மனுதாரர் தானே வாதாடுபவர்) காவல் நிலையம் புகாரை ஏற்க மறுப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனு (BNSS பிரிவு 175(3) அல்லது 223ன் கீழ்) மன்றம் : மாவட்ட முதன்மை நீதிவான் நீதிமன்றம், ___________ (மாவட்டம்) மனுதாரர் : பெயர் :சுப.கார்த்திகேயன் முகவரி : ________________________ எதிர்மனுதாரர்கள் : காவல் ஆய்வாளர், __________ காவல் நிலையம், __________ மாவட்டம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், __________ மாவட்டம். மனுவின் வகை பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (Bharatiya Nagarik Suraksha Sanhita – BNSS)...

(Party-in-Person / மனுதாரர் தானே வாதாடுபவர்) காவல் நிலையம் புகாரை ஏற்க மறுப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்ப.....

Address

No-7, Old Busstand
Rasipuram
637408

Alerts

Be the first to know and let us send you an email when National Human Rights and Anti Corruption Movement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to National Human Rights and Anti Corruption Movement:

Shortcuts

Share