Dr நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்

  • Home
  • India
  • Rasipuram
  • Dr நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்

Dr நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜு M.A.,B.L.,
வழக்கறிஞர்
இராசிபுரம்
செல்; don't call
94456 75801 வாட்ஸ் ஆப்,

கிராம சபை கூட்டம் நடைபெறும் இடம் நேரம் பற்றிய சட்ட விளக்கம்கிராமசபை கூட்டம் நடக்கும் இடம், நாள், நேரம்கிராமசபை கூட்டம் அ...
12/08/2026

கிராம சபை கூட்டம் நடைபெறும் இடம் நேரம் பற்றிய சட்ட விளக்கம்

கிராமசபை கூட்டம் நடக்கும் இடம், நாள், நேரம்

கிராமசபை கூட்டம் அந்த கிராம ஊராட்சிக்கு உட்பட்ட ஏதாவது பொது இடத்தில் நடத்தப்பட வேண்டும்.

கிராமசபை கூட்டம் அந்த கிராம ஊராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டிலும் சுழற்சி முறையில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.

அரசு அல்லது ஊராட்சிகளின் ஆய்வாளரான மாவட்டாட்சியர் சிறப்பு அறிவிக்கை மூலம் அறிவித்தாலன்றி கிராமசபை கூட்டம் அலுவலக விடுமுறை நாட்களிலோ பொது விடுமுறை தினங்களிலோ நடத்தக்கூடாது.

கிராமசபை கூட்டம் சுமார் காலை 11.00 க்கு துவங்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு கிராம சபை (கூட்டம் கூட்டுதல், நடத்துதல்) விதிகள் 1998 விதி எண்: 2

Tamil Nadu Grama Sabha (Quorum and Procedure for Convening and Conducting of Meetings) Rules, 1998. Rull 2. Venue and day of the meeting The Grama Sabha in every Village Panchayat shall meet at a public place within the limits of the Vil-lage Panchayat. Meeting shall be held on official working day. No meeting shall be held on public holidays, unless specially notified by the Inspector, or by the Government.

தமிழ்நாடு கிராம சபை ( குறைவெண், கூட்டம் கூட்டுதல், மற்றும் நடத்துதல்) திருத்த விதிகள் 2006

விதி எண்: 2 Amendment To The Tamil Nadu Grama Sabha (Quorum and Procedure for Convening and Conducting of Meetings) Rules 1998 (GO 130) Rule 2. Venue, day and time of meeting - The Grama Sabha in every Village Panchayat shall meet at a public place within the jurisdiction of the Village Panchayat in each of the Ward by rotation on the date appointed by the President of the Village Panchayat or as the case may be, the Inspector at 11.00 a.m. on any working day. No meeting shall be held on any public holiday, unless specifically notified in this behalf by the Inspector, or the Government

தமிழ்நாடு கிராம சபை ( குறைவெண், கூட்டம் கூட்டுதல், மற்றும் நடத்துதல்) திருத்த விதிகள் 2006
விதி எண்: 2

கிராம பாராளுமன்றம் (கிராமசபை) வெளியீடு பத்து ரூபாய் இயக்கம்

Dr நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் வழக்கறிஞர்
பொது செயலாளர்
பத்து ரூபாய் இயக்கம்
094456 75801

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள காவல் துறை பாதுகாப்பு கோரி விண்ணப்பம் அனுப்புநர்கே எம் சக்திவேலு BE MA DPM PDAuE, MIS...
12/08/2026

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள காவல் துறை பாதுகாப்பு கோரி விண்ணப்பம்

அனுப்புநர்
கே எம் சக்திவேலு BE MA DPM PDAuE, MISTE,
விவசாய அணி - மாநில செயலாளர்
பத்து ரூபாய் இயக்கம்.

பெறுநர்
காவல் ஆய்வாளர் அவர்கள்,
தேவூர் காவல் நிலையம்,.
சங்ககிரி வட்டம் ,
சேலம் மாவட்டம் .

பொருள்: கிராம சபை கூட்டத்திற்கு பாதுகாப்பு கோருதல் தொடர்பாக..

பெருந்தகையீர், வணக்கம்
நான் சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், கத்தேரி கிராமத்தில் வசித்து வருகிறேன். வருகின்ற 15-08-2026 தேதி சுதந்திர தினம் அன்று காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் படி (*கிராம பாராளுமன்றம்*) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

மேற்படி ஊராட்சியில் எனக்கு வாக்குரிமை உள்ளது. நான் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் உரிமை உடைய கிராம சபை உறுப்பினர் ஆவேன். கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று அதன் விவாதங்களில் கலந்து கொள்ளவும், பேசவும், தீர்மானம் கொண்டு வரவும், எனக்கு சட்டப்படியான உரிமையும் நியாய படியான கடமையும் உள்ளது. கிராமசபை கூட்டத்தில் புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோ பதிவு செய்யவும், உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

என்னுடைய கிராமத்தில் கிராம வளர்ச்சிக்கான கோரிக்கைகளை கிராம சபையில் முன்வைத்து தீர்மானமாக கொண்டு வரவும் கிராமசபை நிகழ்ச்சிகள் நிரலில் (அஜென்டா) குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களின் மீது விவாதங்களில் நானும் பங்கேற்க உள்ளேன். மேலும் என்னுடைய கிராமத்தில் உள்ள *கிராம சபை உறுப்பினர்களான சமூக ஆர்வலர்களும், மகளிர் குழுவினர், பாலரும், மாற்றுத்திறனாளிகள் , பட்டியல் குடிமக்களும்,சிறு குறு பெரும் விவசாயிகள், விவசாய குழு என கிராமசபை* கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்கள். விவாதங்களில் கலந்து கொள்ள ஆர்வமாக தயாராகி வருகின்றனர்.

ஆனால் சிலர் இதற்கு எதிராகவும் இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் இருப்பதாகவும் கிராம சபை கூட்டத்தில் விவாதத்தில் சட்டவிரோதமாக குழப்பங்களையும் விரும்பத்தகாத பிரச்சினைகளையும் உருவாக்கக் முயற்சிப்பதாக தெரியவருகின்றது.

நான் கிராமசபை உறுப்பினர் என்ற முறையில் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று விவாதங்களில் கலந்துகொண்டு சட்டப்படியான என்னுடைய கடமைகளை நிறைவேற்றவும் உரிமைகளை பெறவும் எனக்கு காவல்துறையின் பாதுகாப்பு தேவைப்படுகின்றது.

எனவே கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கும் கிராம சபை உறுப்பினர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
இப்படிக்கு,

(கே எம் சக்திவேலு)

இடம்: கத்தேரி
நாள் : 12.08.2026

நகல்:


1. காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
சேலம் மாவட்டம்.

2. காவல் துறை இயக்குநர் அவர்கள்
காவல் துறை தலைமையகம்
சென்னை

3. காவல் துறை தலைமை (மேற்கு மண்டலம்)
கோவை

4. காவல் துறை துணை தலைவர்
சேலம் சரகம்

5. காவல் துறை துணை கண்காணிப்பாளர்
சங்ககிரி

7. உள்துறை செயலாளர்
தலைமை செயலகம்
சென்னை

8. முதல்வர் அவர்கள்
தலைமை செயலகம்
சென்னை

9 ஆளுநர் அவர்கள்
மக்கள் மாளிகை கிண்டி சென்னை

10. பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் 7 பழைய பேருந்து நிலையம் இராசிபுரம் 637408 வாட்ஸ் அப் 094456 75801

கிராம சபை கூட்டத்தில் மக்களின் கருத்துக்களை கேட்டுக் பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் மக்கள் வருகை புரிந்த பின்னர...
12/08/2026

கிராம சபை கூட்டத்தில் மக்களின் கருத்துக்களை கேட்டுக் பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்

மக்கள் வருகை புரிந்த பின்னர் தான் கூட்ட புத்தகத்தில் கையெழுத்து வாங்க வேண்டும்

மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கிராம சபை கூட்டம் விளம்பரங்கள் ஏதும் செய்யாமல் ஒலி பெருக்கி மூலம் விளம்பரங்களை செய்ததாக பொய்யான பதில் வழங்கிய ஊராட்சி செ...
12/08/2026

கிராம சபை கூட்டம் விளம்பரங்கள் ஏதும் செய்யாமல் ஒலி பெருக்கி மூலம் விளம்பரங்களை செய்ததாக பொய்யான பதில் வழங்கிய ஊராட்சி செயலாளர் மீது விசாரணை

நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து கற்குவாரி உரிமையாளர்களும் தங்களது குவாரியில் *வே-பிரிட்ஜ் (weighbridge)* யை கண...
11/08/2026

நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து கற்குவாரி உரிமையாளர்களும் தங்களது குவாரியில் *வே-பிரிட்ஜ் (weighbridge)* யை கண்டிப்பாக 31.08.2026-க்குள் நிறுவி உதவி இயக்குநர் (கனிமம்), நாமக்கல் அலுவலகத்தில் அதற்கான நிறுவப்பட்ட அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் 01.09.2026 முதல் *MiMas Portal-இல்* நடைச்சீட்டு பெறுவது நிறுத்தப்படும் என உதவி இயக்குனர் (கனிமம்) அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்

மாதிரி கிராம சபை கூட்டம் பயிற்சி
11/08/2026

மாதிரி கிராம சபை கூட்டம் பயிற்சி

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

11/08/2026

போதை பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழி ஏற்பு

இராசிபுரம் லட்சுமி விலாஸ் உணவகத்தில்

11/08/2026
சமூக ஆர்வலர் பரமத்தி ராஜா நினைவேந்தல் நிகழ்வு  பரமத்தி  நகர பத்து ரூபாய் இயக்க செயலாளர் தெய்வத்திரு *ராஜா* அவர்களின்  மற...
10/08/2026

சமூக ஆர்வலர் பரமத்தி ராஜா நினைவேந்தல் நிகழ்வு

பரமத்தி நகர பத்து ரூபாய் இயக்க செயலாளர் தெய்வத்திரு *ராஜா* அவர்களின் மறைவிற்கு துக்கம் விசாரிக்கவும், குடும்பத்தில் உள்ளவருக்கு அனுதாபம் தெரிவிக்கவும், பத்து ரூபாய் இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் நல்வினை விஸ்வராஜு அவர்களும், மாநில செயலாளர் வழக்கறிஞர் சதீஷ்குமார் அவர்களும், துணை பொது செயலாளர் சீனிவாசன் அவர்களும் மற்றும் இயக்கத் தோழர்களும் செல்ல இருப்பதால் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாளை 13/08/2026 வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில்

பரமத்தி மூன்று ரோடு (திருச்செங்கோடு பிரிவு சாலை) அருகில் அனைவரும் ஒன்று கூடி செல்ல உள்ளோம்.

தொடர்புக்கு-
ப. ரமேஷ் குமார்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
பத்து ரூபாய் இயக்கம்
நாமக்கல்
செல் 91718 15114

க.ராஜா முகமது
மாவட்டச் செயலாளர்
பத்து ரூபாய் இயக்கம்
நாமக்கல்
செல் 99408 16527.

https://chat.whatsapp.com/L20YndQ7zBVJBA8739GmB6?s=cl&p=a&mlu=4

09/08/2026

சமூக ஆர்வலர் மாற்று திறனாளி வழக்கறிஞர் தாராபுரம் முருகானந்தம் நினைவு நாள் நிகழ்வு

Address

No 7 Old Bus Stand
Rasipuram
637408

Alerts

Be the first to know and let us send you an email when Dr நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share