11/07/2026
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட கிளை சார்பாக ஒன்றிய மோடி அரசின் அங்கன்வாடி திட்டத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட கோரி 10.07.2026-ம் தேதி கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.ராஜேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் தோழர் இரா. தெய்வராஜ் துவக்கிவைத்தார்.கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் ஏ.வரதலட்சுமி பொருளாளர் தோழர் பி.ரமேஷ்வரி ஆகியோர் உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் தோழர் க.நீதி ராஜா தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தோழர் பி. சீனிவாசன் ஆகியோர் உரையாற்றினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் தோழர் இரா.லெனின் ஆர்ப்பாட்டத்தில் நிறைவு செய்து உரையாற்றினார்