06/06/2026
ுழு_விவரம்
2026-2027 கல்லூரி கட்டனம் எவ்வளவு?
கல்வி ஆண்டிற்கான கட்டணங்களை எவ்வாறு தெரிந்து கொள்வது? (நடைமுறைப் படிநிலைகள்)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழகத்தில் எந்தவொரு கல்வி நிறுவனமும் தன்னிச்சையாகக் கட்டணம் வசூலிக்க முடியாது.
கல்லூரி வகை மற்றும் படிப்புகளின் அடிப்படையில் கட்டணத்தை அறிந்து கொள்ளும் வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன:
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
அ) பொறியியல் (B.E / B.Tech / B.Arch) படிப்புகள்:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நீதிபதி தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு முறைப்படுத்துகிறது.
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tneaonline.org அல்லது www.dte.tn.gov.in
நடைமுறைப் படிநிலைகள்:
tneaonline.org இணையதளத்திற்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் உள்ள "Information Brochure" அல்லது "Fee Structure" லிங்கைக் கிளிக் செய்யவும்.
அங்கு அரசாணை மற்றும் கட்டண நிர்ணயக் குழுவின் அதிகாரப்பூர்வ ஆணை (Fee Order) PDF வடிவில் இருக்கும்.
குறிப்பு: 2026-2027 கல்வி ஆண்டிற்கான தற்போதைய பொதுவான கட்டண வரம்பு: சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு
இடங்களுக்கு (Non-Accredited) ஆண்டுக்கு ₹50,000 மற்றும் (Accredited) படிப்புகளுக்கு ₹55,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
ஆ) மருத்துவத் துறை படிப்புகள் (MBBS, BDS, நர்சிங், ஆயுஷ், ஹோமியோபதி, BNYS):
மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணங்களை நீதிபதி ஆர். பொங்கியப்பன் தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு 2025, 2026 மற்றும் 2027 ஆகிய கல்வி ஆண்டுகளுக்காக மாற்றி அமைத்துள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnmedicalselection.net
நடைமுறைப் படிநிலைகள்:
tnmedicalselection.net இணையதளத்திற்குச் செல்லவும்.
"Notifications" பகுதிக்குச் சென்று, "UG Fee Structure for Medical/Dental/Para Medical Admissions" என்ற கோப்பைப் பதிவிறக்கம் செய்யவும்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரம்:
அரசு மருத்துவக் கல்லூரிகள் (MBBS): ஆண்டுக்கு ₹18,073 மட்டுமே (அனைத்து கட்டணங்களும் சேர்த்து).
சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் (அரசு ஒதுக்கீடு): ஆண்டுக்கு ₹4.35 லட்சம் முதல் ₹4.50 லட்சம் வரை.
மேலாண்மை ஒதுக்கீடு (Management Quota): ஆண்டுக்கு ₹15 லட்சம் (அண்மையில் ₹1.5 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது).
NRI ஒதுக்கீடு: ஆண்டுக்கு ₹27 லட்சம்.
துணை மருத்துவப் படிப்புகள் (Nursing/BPT) மற்றும் ஆயுஷ் (ஹோமியோபதி, BNYS, சித்தா): இதற்கான தனிக் கட்டணப் பட்டியலும் இதே இணையதளத்தில் "Para Medical" பிரிவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
இ) கலை மற்றும் அறிவியல் (Arts & Science) படிப்புகள்:
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தன்னாட்சி கலைக் கல்லூரிகளுக்குத் தனியே கட்டணக் குழு இல்லை. ஆனால், அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் (Affiliating Universities) மற்றும் தமிழக உயர்கல்வித் துறை வழிகாட்டும் கட்டணமே இறுதியானது.
அரசு கல்லூரிகள்: சேர்க்கைக் கட்டணம் மிகக் குறைவு (ஆண்டுக்குச் சுமார் ₹2,000 - ₹5,000 வரை மட்டுமே). www.tngasa.in இணையதளத்தில் சேர்க்கை வழிகாட்டியைக் காணலாம்.
சுயநிதி மற்றும் தன்னாட்சி (Autonomous) கல்லூரிகள்: இக்கல்லூரிகள் தங்களின் அங்கீகரிக்கப்பட்ட கட்டணப் பட்டியலைத் தங்களின் சொந்த இணையதளத்தில் (Mandatory Disclosure) பொதுமக்களின் பார்வைக்குக் கட்டாயம் வெளியிட்டிருக்க வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
👨⚖️ P..பாலகிருஷ்ணன் B.Com., B.L.,
🏢 BALA LAW FIRM - 'The Legal Warriors'
📍 97, சன்னதி தெரு, முதலாம் மாடியில், திருப்பரங்குன்றம், மதுரை - 625005.
📞 தொடர்புக்கு: 888 3943 888
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖