Mani Senthil

Mani Senthil போர்த்தொழில் வலையொளி

அண்ணன் என்றால்..உயிர் உள்ளவரைஅவன் மட்டும் தான்...தலைவர் என்றால்உயிர் உள்ளவரைமேதகு மட்டும் தான்...பணத்திற்காகபதவிக்காகஇடம...
05/06/2026

அண்ணன் என்றால்..
உயிர் உள்ளவரை
அவன் மட்டும் தான்...

தலைவர் என்றால்
உயிர் உள்ளவரை
மேதகு மட்டும் தான்...

பணத்திற்காக
பதவிக்காக
இடம் மாறும்
கோழை.

வெட்டியவன்
வீட்டின் வாசலில்
அலங்காரமாய்
தொங்குமாம்
வாழை.

🔶

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

🔶

ஏறக்குறைய தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு இளையராஜா அவர்களுக்கே உரிய அந்தரங்கமான Personal தான். என்ன ஒன்று என்றா...
02/06/2026

ஏறக்குறைய தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு இளையராஜா அவர்களுக்கே உரிய அந்தரங்கமான Personal தான். என்ன ஒன்று என்றால்.. இது பற்றி அவர்களால் பலரோடும் பகிர்ந்துக் கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு இளையராஜா. எண்பதுகளில் பிறந்த பலருக்கும் இளையராஜா தான் தாலாட்டு. பதின் வயதுகளில் கிடைத்த முதல் முத்தத்தில் இளையராஜா தான் முதல் காதல். முதல் காமம். ஊர் திருவிழாக்களில் இளையராஜா ஒலிக்க தொடங்கியவுடன் திருவிழாக்கள் வந்துவிட்டன. எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு இரவில் வலியால் கசிந்து கொண்டிருந்த விழிகளுக்கு.. இளையராஜா பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.
வேலை கிடைக்காமல் முகவரி தெரியாத ஊரில் எங்கோ கிடைத்த ஒரு இடத்தில் பசியோடு தனியே படுத்துக் கொண்டிருந்தபோது, இளையராஜா குரல் மூலம் தான் அவரவர் சொந்த ஊரின் சுவாசத்தை பருகிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு இளையராஜா எப்படி என்றால்.. உங்களைப் போல எல்லாமும் தான்.

எல்லோருக்கும் சொல்லிக் கொள்வதற்கும், சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே நெகிழ்ந்து கொள்வதற்கும், யாருக்கும் தெரியாமல் விழிகளில் வடிகிற ஒரு துளி கண்ணீரை சிறிய வலியோடும், நிறைய நினைவுகளோடும் உணர்ந்து நினைக்கின்ற ஒரு காலம் இருக்கும் இல்லையா...

அந்தக் காலத்தின் இசையமைப்பாளர் இளையராஜா தான்.

இளையராஜா சிம்பொனி இசைத்து சாதனை படைத்து விட்டதாக சொல்கிறார்கள்.

ஆனால் ஒவ்வொரு எளிய மனிதனின் வாழ்க்கையிலும் அவனது நிராதரவு பொழுதுகளில்... அவரது வயலின்களும், அருண் மொழியின் ஒற்றைப் புல்லாங்குழலும்.. கொடுக்கின்ற ஆறுதல்.. சிம்பொனி இசையெல்லாம்
அதற்கு முன்னால் கொஞ்சம் சின்னது தான்.

இளையராஜாவை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு.. சற்றே சிந்தித்து, உள்ளுக்குள்ளேயே உருகி, இப்படி ஒரு கேள்வியா என நினைத்து பதில் சொல்ல சில மணித்துளிகள் எடுத்துக் கொள்கிற எல்லோருக்கும் தெரிந்த உண்மை..,

இளையராஜா என்பது வெறும் பெயர் அல்ல.

அவர் நமது வாழ்க்கை.

தீவிர எதிர் முனைகளான அளவற்ற அறமும், தீரா வன்மமும் இரண்டும் எதிர்பாராத வகையில் கலந்து நிற்கிற நமது இயல்பான வாழ்க்கையில்.. அவர் மட்டும் தான் தேங்கிவிட்ட கடவுளின் அமுதம்.

கடவுள் உலகத்தை படைத்தார் என்பது உண்மையோ பொய்யோ தெரியாது.

ஆனால் எங்கள் உலகத்தை படைத்தது இளையராஜா தான்.

எங்கள் தலைமுறையின் மகத்தான மாமேதைக்கு.. திசை உணர்த்திய இசைக் கடவுளுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

♥️

மணி செந்தில்.

31/05/2026
எனது இலக்கு பெரிது . என் கனவு பெரிது .❤️
10/05/2026

எனது இலக்கு பெரிது . என் கனவு பெரிது .❤️

17/03/2026

தேர்தல் காலத்தில்...😡😡😡

13/03/2026

விவாகரத்து வழக்குகள்- சட்டம் சொல்வது என்ன..? திருமதி சங்கீதா அவர்கள் தொகுத்துள்ள வழக்கு "ஒர்த்" இல்லையா..?

கண்ணியம் காக்க தவறிய விஜய் !

மிகுந்த கண்ணியத்தோடு போராடிப் பார்க்கும் சங்கீதா !

போர்த்தொழில் வழங்கும் காணொளி!

போர்த்தொழில் வலையொளியை ஆதரித்து பின் தொடர..

https://youtube.com/?si=MqNLb6M5BGRXAv9K

Address

1B/16, Udayarpalayam Road, Old Palakkarai
Kumbakonam
612002

Alerts

Be the first to know and let us send you an email when Mani Senthil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mani Senthil:

Share