Anna -அண்ணா

Anna -அண்ணா Advocate & Politician

30/07/2026

குமரி மாவட்டத்தில் பேருந்துகளில் தொடர் திருட்டுச் சம்பவங்கள். நகை, பணத்தை இழந்து தவிக்கும் பயணிகள் (குறிப்பாக முதியவர்கள்). அனைத்து பேருந்துகளிலும் கேமராக்கள் பொருத்தி போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

29/07/2026

குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும். பிஞ்சுக் குழந்தைகளின் எதிர் காலம் கவலையளிக்கிறது.
நாடு முழுவதும் உள்ள பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி பிச்சை எடுப்பதை முற்றிலுமாக தடை செய்ய அரசு முன் வர வேண்டும்.

21/06/2026

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இரவு நேரங்களில் பேருந்து வசதி உள்ளதா என்பதையும், அதன் கால அட்டவணையும் தெரியாமல் அவதிப்படும் பொதுமக்கள். அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்து கால அட்டவணையை வைப்பதற்கு போக்குவரத்து கழகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?

21/06/2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள். அனைத்துப் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள், முக்கியப் பகுதிகளின் முன்பு வேகத்தடைகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து தேவையான இடத்தில் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

01/06/2026

மூத்த குடிமக்களின் பராமரிப்பு சம்பந்தமான மனுக்களை சார் ஆட்சியர், ஆட்சியர் அலுவலகங்கள் மிகக் குறுகிய காலத்தில் விசாரித்து தீர்வுகளை வழங்க வேண்டும். வயதான காலங்களில் மூத்த குடிமக்களால் நீண்ட காலம் காத்திருப்பு என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது. மாவட்ட ஆட்சியர் உரிய உத்தரவுகள் பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மாவட்ட நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கை தேவை. நீர்நிலைகளில் தொடரும் மரணங்கள்! சுற்றுலா பயணிகள்/பொதுமக்கள் நீர்நிலைகள் பயன்ப...
16/05/2026

மாவட்ட நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கை தேவை.
நீர்நிலைகளில் தொடரும் மரணங்கள்! சுற்றுலா பயணிகள்/பொதுமக்கள் நீர்நிலைகள் பயன்படுத்துவது குறித்து உரிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்துமா? இன்னொரு மரணம் ஏற்படுவதை தடுக்குமா?

உரிய கட்டுப்பாடுகள், விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் எத்தனை எத்தனை மரணங்கள் நாள்தோறும்! சுற்றுலா பயணிகள்/பொதுமக்கள் நீ...
14/05/2026

உரிய கட்டுப்பாடுகள், விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் எத்தனை எத்தனை மரணங்கள் நாள்தோறும்! சுற்றுலா பயணிகள்/பொதுமக்கள் நீர்நிலைகள்/ கடற்கரைகளில் பயன்படுத்துவது குறித்து உரிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்துமா?

08/01/2026

கன்னியாகுமரி மாவட்டத்தில், திருவட்டார் தாலுகா ஆரம்பித்து ஆறாண்டுகள் ஆகியும் இதுவரை தனியாக கருவூலம் அமைக்காதது ஏன்???? திருவட்டார் தாலுகாவிற்கென்று தனியாக கருவூலம் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பேரூராட்சியில் பணி ஆணை பிறப்பித்த பிறகும், சாலைப் பணியினை துவங்காததை கண்டித்து உள்ளிரு...
29/12/2025

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பேரூராட்சியில் பணி ஆணை பிறப்பித்த பிறகும், சாலைப் பணியினை துவங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 13-வது வார்டு கவுன்சிலர் ிரதீப்குமார் அவர்களை பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று அவரிடமும் அதிகாரிகளிடமும் விவரங்கள் கேட்டறிந்தேன்..
்ணா

Address

Kulasekharam
629161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anna -அண்ணா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share