14/10/2024
வாழ்க அம்பேத்கர்...
வளர்க சமத்துவம்....
நான் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் கரத்தை பற்றி
தலித் அரசியல் விடுதலைக் களத்திற்கு வாய்க்கரிசி போட்டு வந்த நேரத்தில்
#சினிமா பிரபலமாக
நடிகர் ரஜினிகாந்த்தை முதல்வராக வேண்டும் அவர் அரசியல் களத்திற்கு வர வேண்டும் என எதிர்பார்த காலம் எத்தனையோ நபர்கள் ரஜினி பின்னால் சென்றனர்
ஆனால்
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை நெஞ்சில் ஏந்தி தலித் மக்களின் கண்ணிர் துடைக்க வீரர்களாக எழுந்த இளைஞர்களின் கலங்கரை விளக்கு
செந்தமிழ் காவலர் தலைவர் எழுச்சித்தமிழர் தான்
இந்தியாவின் கடைக்கோடி சேரி தொடங்கி ஈழம் வரை விடுதலை அரசியலை முன்னிறுத்திய தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை என் போன்ற ஒவ்வொரு இளைஞர்களும் தலைவராக ஏற்று மண் விடுதலையும் மக்கள் விடுதலையும் வென்றெடுக்க வேண்டும் என களம் கண்டோம்
ஆக
அந்த கால கட்டத்தில் இளைஞர்கள் திரை நடிகரின் பின்னால் சென்றிருந்தால் இந்த சமுக மாற்றம் நிகழ்ந்திருக்குமா?
குனிந்த நம் தலை நிமிர்ந்திருக்குமா?
விடுதலை குரல் ஒலித்திருக்குமா ?
அமைப்பாய் திரண்டிருப்போமா
அங்கிகாரம் கிடைத்திருக்குமா?
அதை உணர்ந்து இன்றைய
இளைஞர்கள் தங்களுக்கான
தலைவர் கொள்கை இயக்கம் எது என்பதை அடையாளம் கண்டு அரசியல் களம் வரவேண்டும் தற்காலிக பதவி மோகம் முக்கியம் இல்லை
தலைமுறைக்கான அரசியலே முக்கிய என்பதை உணர்ந்து வர வேண்டும்
............. களத்தில்..............
மக்கள் தொண்டன் வழக்கறிஞர்
ம.சங்கத்தமிழன்
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி செயலாளர்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்