Advocate dindigul district court

Advocate dindigul district court Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate dindigul district court, Lawyer & Law Firm, Dindigul.

டெல்லியில் நிலைமை இது..பிசிஐ என்ன செய்கிறது? பிறகு “ரவுடிகள் “எங்கள் உன்னத தொழிலை ஆக்கிரமித்துள்ளனர் என்று அழுது பிரயோஜன...
27/07/2024

டெல்லியில் நிலைமை இது..பிசிஐ என்ன செய்கிறது? பிறகு “ரவுடிகள் “எங்கள் உன்னத தொழிலை ஆக்கிரமித்துள்ளனர் என்று அழுது பிரயோஜனமில்லை... அதேபோல் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலும் இதே நிலைமைதான்...

RTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பம் அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை.1.விண்ணப்பத்தின் தேதி ம...
11/10/2019

RTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பம் அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை.

1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம்.
2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல் அலுவலரின் முழுமுகவரி அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்
3.நீங்கள் முன்னர் எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின் விபரம். பார்வை: என்ற தலைப்பின் கீழ்
4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்ற கேள்வி
5.தேதியுடன் கூடியுடன் உங்கள் கையொப்பம்
6.தகவல் கோரும் விண்ணப்பக் கட்டணம். ரூ.10/- செலுத்தப்பட்டதற்கான சான்று. (நீதி மன்ற வில்லை எனில்(court fees stamp) மனுவின் மேல் பாகத்தில் ஒட்டி விடலாம்.)
7.நீதிமன்ற வில்லையை[court fees stamp](ஒட்டியதும் உங்கள் விண்ணப்பத்தை ஒளிநகல் (xerox) எடுத்து வைக்கவும்
8.விண்ணப்பத்தை ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.(மேல் முறையீட்டின் போது ஒப்புதல் அட்டை முக்கியம்.

தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த தகவல்கள் கேட்கலாம்?
1) பதிவேடுகள் (Records),
2) ஆவணங்கள் (Documents),
3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.( Memo Office Tips),
4) கருத்துரைகள் (Comments),
5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,
6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள் (Offices of the Information notes),
7) சுற்றறிக்கைகள் (Circulars),
8) ஆவணகள் (Documentation),
9) ஒப்பந்தங்கள் (Agreements),
10) கடிதங்கள் (Letters),
11) முன்வடிவங்கள் (Model),
12) மாதிரிகள் (Models),.
13) கணீனி சார்ந்த பதிவுகள் (Information stored in computer),
14) மின்னஞ்சல்கள் (Emails).
15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள் (All information of public good well),
16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை, (The right to review relevant documents and records),
17) நகல் எடுக்கும் உரிமை (Right to take Xerox) ஆகியன

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல் முறையீடு:
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீடு செய்யலாம்.மேல் முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்க ளுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.

மாநில தலைமை தகவல் ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
2, தியாகராயசாலை,
ஆலையம்மன் கோவில் அருகில் ,
தேனாம்பேட்டை,
சென்னை -600018.
தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580

தகவல் தர மறுத்தால் தண்டனை Sec 20 RTI Act தகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் & ஒழுங்கு நடவடிக்கை

பொது தகவல் அலுவலர் செய்யும் பின்வரும் செயலுக்கு ரூ 25000 அபராதம் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிவரும்

1. நியாயமான காரனம் இல்லாமல் விண்னப்பம் வாங்க மறுத்தால்
2. உரிய காலகெடுவில் தகவல் தர மறுத்தால் (30 நாட்கள்)
3. தகவலுக்கான வேண்டுகோளை தீய எண்ணத்துடம் மறுத்தால்
4. தவறான, முழுமையுறாத, தவறான எணத்தை தோற்றுவிக்கும் வகையில் தகவலை தெரிந்தே கொடுத்தால்
5. தகவலை அழித்தால்
6. தகவல் கொடுப்பதை தடுத்தால்

பிரிவு 20 (1) படி நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் அபராதம்
ரூ 25,000 உயர்த பட்ச அபராதம்
பிரிவு 20 (2) படி துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை
மேற்படி காரணத்திற்காக தகவல் ஆணையகம் மட்டுமே தண்டனை விதிக்க முடியும்
தண்டனை விதிக்கும் முன்பு பொது தகவல் அலுவலர் விளக்கம் கேட்ட பின்னர்தான் தண்டனை விதிக்க முடியும்
நியாயமாகவும் கவணமாக செயல்பட்ட பொது தகவல் அலுவலர் மீது தண்டனை விதிக்க இயலாது.
குறிப்பு: பொதுவாக தகவல் ஆனையகம் தண்டனை விதிப்பதை தவிர்க்கின்றது
தண்டனைகள் (பிரிவு-20)

மாநில தகவல் ஆணையமானது, புகார் அல்லது மேல்முறையீடு எதனையும்
தீர்மானிக்கும்போது:

1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம் ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம் ஒன்றினை மறுக்குமிடத்தும் ;
2. பொது தகவல் அலுவலர் காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க மறுக்குமிடத்தும் ;
3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான கோரிக்கையினை உள்நோக்கத்துடன்
மறுக்குமிடத்தும் ;
4. கோரிக்கையின் பொருளாக இருந்த தகவலை அழிக்குமிடத்தும் ;
5. பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுக்குமிடத்தும்; அந்த விண்ணப்பம் பெறப்படும் வரை அல்லது தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும்.

எனினும், மொத்த தண்டத் தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், தண்டம் விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட பொதுத்தகவல் அலுவலருக்கு போதுமான வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும்.
பொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும், கவனத்துடனும், செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு, அவரையே சார்ந்ததாகும்.
மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில், பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக, அவருக்கு பொருந்தத்தக்க பணிவிதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்

கொடைக்கானல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ரகுபதி(84) சாட்சியை குறுக்கு விசாரனை செய்த போது திடீ...
17/09/2019

கொடைக்கானல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ரகுபதி(84) சாட்சியை குறுக்கு விசாரனை செய்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார் அவரை சக வழக்கறிஞர்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்"அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந் நிகழ்வு வழக்கறிஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய மூத்த வழக்கறிஞர் ரகுபதி அய்யா அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

வழக்கறிஞர்கள் காவல் நிலையங்களுக்கு போகலாமா?நீதிமன்ற விழாவில் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி ராமநாதன் அவர்கள் " காவல் நிலையங்...
13/04/2019

வழக்கறிஞர்கள் காவல் நிலையங்களுக்கு போகலாமா?

நீதிமன்ற விழாவில் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி ராமநாதன் அவர்கள் " காவல் நிலையங்களுக்கு சென்று வழக்கு நடத்தாதீர்கள், நீதிமன்றத்திற்கு வந்து வாதாடுங்கள்" என்று வழக்கறிஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

குற்றங்களுக்காக கைது செய்யப்படுவோருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துகள் 20-22 பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. குற்றவாளிகளை தனக்கெதிராகவே சாட்சி சொல்ல வற்புறுத்தக்கூடாதென்றும், கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்கவும், வழக்கறிஞர்களை கலந்து ஆலோசிக்கவும், உதவி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட சாட்சிய சட்டத்தில் போலீசாரிடம் கொடுக்கும் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்றுக் கொள்ளக்கூடாதென்றும், நீதிமன்றத்திடமே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விரும்பும் கைதியிடம், கொடுக்கப்போகும் வாக்குமூலம் அவருக்கெதிராகவே பயன்படுத்தப்படுமென்று எச்சரித்த பின்னர் காவலர்கள் உட்பட எவரையும் அனுமதிக்காமல் வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்ய வேண்டுமென்றும் பாதுகாப்புள்ளது. கைதிகளை சித்ரவதைப்படுத்தி, மிரட்டி விசாரணையின் போது காவலர்கள் வாக்குமூலத்தை பெற வாய்ப்புள்ளது என்பதால் சட்டத்தால் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் கட்சிக்காரர்களுக்காக சென்ற வழக்கறிஞர் அய்யாதுரை காவலர்களால் தாக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற தொடர் நீதிமன்ற புறக்கணிப்பால் நீதிபதி பால் கமிஷன் 1979 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அவர் வழக்கறிஞர்கள் காவல் நிலையங்களுக்கு செல்வது முறையற்றது, தொழில் நெறிமுறைகளுக்கு மாறானது என்று அறிக்கை அளித்தார்.

தற்போது குற்ற வழக்குகள் மட்டுமின்றி சிவில் வழக்குகளும் காவல் நிலையத்தில் பைசல் செய்யப்படுகிறது. விசாரணையின் போது இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். காவல்துறை ஒரு தரப்பிற்கு சாதகமாக செயல்படுவதாக கூறி எழும் வாய்த் தகறாரு முற்றி கைகலப்பாக இறுதியில் மாறுகிறது. இதனால் காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம், புறக்கணிப்பு ஆகியவை நடைபெறுகிறது. இதனால் நீதிமன்றத்தில் பணிகள் பாதிக்கப்படுகிறது.

காவலர்களின் அத்துமீறல்களை தடுக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும், உரிமையியல் நடைமுறைச் சட்டத்திலும் போதுமான அதிகாரங்கள் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதனால் காவல் நிலையங்களுக்கு வழக்கறிஞர்கள் செல்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். சட்டத்தை மீறும் காவலர்களின் சட்ட விரோத செயல்களை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
04/04/2019

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் வழக்குரைஞர் சங்க தேர்தலில்தலைவர் - திரு மனோகரன்து.தலைவர்- திரு.வெங்கடேசன்செயலாளர் - திரு.கிருஷ்ணன்இ . செயலாள...
22/03/2019

திண்டுக்கல் வழக்குரைஞர் சங்க தேர்தலில்
தலைவர் - திரு மனோகரன்
து.தலைவர்- திரு.வெங்கடேசன்
செயலாளர் - திரு.கிருஷ்ணன்
இ . செயலாளர் - திரு.முத்துராமலிங்கம்
பொருளாளர் - திருமதி- பவானி
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐🤝👏

திண்டுக்கல் வழக்குரைஞர் சங்க தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வழக்கறிஞர் R.ரமேஷ் பிரபு அவர்கள் தேர்தலில் வெற்றி ...
17/03/2019

திண்டுக்கல் வழக்குரைஞர் சங்க தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வழக்கறிஞர் R.ரமேஷ் பிரபு அவர்கள் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

தேர்தல் நாள் : 22/03/2019

அனைத்து வழக்கறிஞர்களுக்கும் இதே வேண்டுகோள்..!பொள்ளாச்சியில் மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை செய்து, ...
12/03/2019

அனைத்து வழக்கறிஞர்களுக்கும் இதே வேண்டுகோள்..!

பொள்ளாச்சியில் மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை செய்து, நகை பறித்த வழக்கில் கைது செய்யபட்டுள்ள குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜர் ஆக மாட்டோம் என்று பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

திண்டுக்கல் வழக்குரைஞர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வழக்கறிஞர் R.K.ரவிசந்திரன் அவர்கள் தேர்தலில் வெற்றி ...
12/03/2019

திண்டுக்கல் வழக்குரைஞர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வழக்கறிஞர் R.K.ரவிசந்திரன் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

தேர்தல் நாள் : 22/03/2019

எல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்..? மிரட்டும் வருமான வரி துறை..? நமக்கு என்ன லாபம்..?ஏன்..?எல்லாம் அபராதம் எ...
16/02/2019

எல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்..?
மிரட்டும் வருமான வரி துறை..?
நமக்கு என்ன லாபம்..?

ஏன்..?

எல்லாம் அபராதம் என்கிற ஒற்றை விஷயம் தான். வருமான வரித் துறைச் சட்டம் 234 -ன் படி ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வருமான வரி சொல்லும் நேரத்துக்குள் தங்கள் வருமான வரியை செலுத்தி வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் 5,000 ரூபாய் அபராதத்தோடு டிசம்பர் 31-ம் தேதி வரை காலக் கெடு கொடுக்கப்படுகிறது. அப்படியும் வரி செலுத்தாதவர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் 10,000 ரூபாய் அபராதத்தோடு வரி தாக்கல் செய்ய வேண்டும்.

நோட்டீஸ்

இப்போது பலருக்கும் “மதிப்புக்குரிய ###XX, வருமான வரிச் சட்டம் 139-ன் கீழ் நீங்கள் கடந்த நிதி ஆண்டுக்கு வந்த வருமானத்தை கணக்கில் காட்டி வருமான வரி தாக்கல் செயய்வில்லை. விரைவில் 10,000 ரூபாய் அபராதத்துடன் வருமான வரி தாக்கல் செய்யவும். இப்படிக்கு வருமான வரித் துறை” என நோட்டிஸ் வந்து கொண்டிருக்கிறது. அலரி அடித்துக் கொண்டு ஆடிட்டர்களை நோக்கி படை எடுக்கிறார்கள். சரி முதலில் வருமான வரிச்சட்டம் 139 என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்.

வருமான வரிச் சட்டம் பிரிவு 139

இந்த சட்டத்தில் யார் எல்லாம் வரி தாக்கல் செய்ய வேண்டும், ஒரு நிதி ஆண்டில் எவ்வளவு ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் அவர்கள் வரி தாக்கல் செய்ய வேண்டும். சிலருக்கு ஒரு நிதி ஆண்டில் அரசு சொல்லி இருக்கும் அளவுக்கு வருமானம் இல்லை என்றால் கூட அவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்..? ஏன் என விரிவாக இருக்கிறது. ஆக பிரிவு 139-ன் படி யார் எல்லாம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் எனப் பார்ப்போம்.

1. யார் எல்லாம் வரி தாக்கல் செய்ய வேண்டும்?

சொந்தமாகவோ அல்லது வாடகை கொடுத்தோ 2000 சதுர அடிக்கு மேல் கார்பெட் ஏரியா உள்ள வீட்டில் வசிப்பவர்களுக்கு மாதம் 5,00,000 ரூபாய்க்கு மேல் வருமானம் இல்லை என்றால் கூட வரி தாக்கல் செய்ய வேண்டும்.

2. யார் எல்லாம் வரி தாக்கல் செய்ய வேண்டும்?

சொந்தமாக இரு சக்கர வாகனங்களைத் தவிர வேறு எந்த விதமாக மோட்டார் வாகனங்களை வைத்திருந்தாலும் அவர்களும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இதில் ஆட்டோ, லோட் வாகனங்கள், சின்ன யானை (டாடா ஏஸ்) போன்ற வணிக ரீதியிலான வாகனம் வைத்திருப்பவர்கள் என அனைவரும் அடக்கம். இவர்களுக்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வரவில்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

3. யார் எல்லாம் வரி தாக்கல் செய்ய வேண்டும்?

ஒரு நிதி ஆண்டில் (01 ஏப்ரல் தொடங்கி அடுத்த ஆண்டில் மார்ச் 31 வரை) மொத்தமாகவோ அல்லது மாதாமாதமோ க்ளப்களுக்கு 25,000 ரூபாய்க்கு மேல் செலுத்தி உறுப்பினர்களாக இருப்பவர்களும் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இவர்களுக்கும் ஒரு நிதி ஆண்டில் 5,00,000 ரூபாய்க்கு மேல் வருமானம் வந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

4. யார் எல்லாம் வரி தாக்கல் செய்ய வேண்டும்?

ஒருவருக்கு சொந்தமாகவோ அல்லது வாடகை கொடுத்தோ 300 சதுர அடிக்கு மேல் வணிக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள கடை, உற்பத்தி ஆலைகள், அலுவலகங்களை வைத்திருப்பவர்கள் கூட வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இவர்களுக்கும் ஒரு நிதி ஆண்டில் 5,00,000 ரூபாய்க்கு மேல் வருமானம் வந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

5. யார் எல்லாம் வரி தாக்கல் செய்ய வேண்டும்?

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா, மகன், மகள் என நான்கு பேர் வெளிநாடு பயணிக்கிறார் என்றால்… அதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி தாக்கல் செய்வது நல்லது. குறிப்பாக பான் அட்டை உள்ளவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டால் நிச்சயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இவர்களுக்கும் ஒரு நிதி ஆண்டில் 5,00,000 ரூபாய்க்கு மேல் வருமானம் வந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

6. யார் எல்லாம் வரி தாக்கல் செய்ய வேண்டும்?

க்ரெடிட் கார்ட் என்கிற கடன் அட்டை. தங்கள் பெயரில் ஒரு க்ரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். காரணம் கடன் வாங்குகிற அளவுக்கு பணப் புழக்கம் இருக்கும் ஒரு நபர் ஏன் வருமான வரி தாக்கல் செய்யக் கூடாது என்பது வருமான வரித்துறையின் கேள்வி. ஆக இவர்களுக்கும் ஒரு நிதி ஆண்டில் 5,00,000 ரூபாய்க்கு மேல் வருமானம் வந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

வேறு யார் எல்லாம்..?

இதற்கு மேல் சாதாரணமாக கடை நடத்துபவர்கள், சின்ன சின்ன வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள், பான் அட்டை வைத்திருப்பவர்கள், குறிப்பாக ஆண்டுக்கு 5,00,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் அனைவருமே கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். சரி இத்தனை மிரட்டி நம்மிடம் இருந்து வருமான வரி தாக்கல் செய்யச் சொல்கிறார்களே… நமக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா..? இருக்கிறதே.. மேற்கொண்டு படியுங்கள்.

வங்கிக் கடன்கள்

பொதுவாக வேலைக்கு சேர்ந்து சில வருடங்களுக்குப் பின் தான் வீட்டுக் கடனை அடைக்க அலது தங்கை திருமணத்துக்கு அல்லது நம் திருமணத்துக்கு என பணம் தேவைப்படும். அப்போது வங்கிகளிடம் கேட்டால் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறீர்களா எனக் கேட்பார்கள். கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் நாம் வருமான வரி தாக்கல் செய்திருந்தால் கடன் கிடைப்பது 75% உறுதி. காரணம் நம் 3 வருட வருமானத்தை அவர்கள் கண்ணால் பார்த்து விட்டார்கள். அதை அரசிடமும் நாம் கணக்கு காட்டி இருக்கிறோம் என்பதால் நம் மீதான நம்பகத் தன்மை அதிகரித்துவிடும்.

உங்கள் வருமானத்தைப் பெற

நாம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே ஏதாவது பகுதி நேர பிசினஸாக எதையாவது செய்யும் நடுத்தர மக்களை நாம் அதிகம் பார்க்க முடியும். உதாரனமாக மாத சம்பளத்துக்கு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகளாக இருப்பது, பத்திரிகைகளில் கட்டுரை,கதை, கவிதைகளை எழுதுவது, பேச்சாளர்களாக மேடைகளில் பேசி சம்பாதிப்பது, பகுதி நேரங்களில் வகுப்பு எடுப்பது என பல்வேறு வேலைகளைச் செய்கிறார்கள்.

டிடிஎஸ் – Tax Deducted at Source

இவர்களில் பலருக்கும் பகுதி நேர வேலைகள் மூலம் ஒரு பகுதி வருமானம் வரும். ஆனால் அதற்கு பெரும்பாலும் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டு வரும். ஆக இந்த பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை மீண்டும் பெற நாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். நமக்கு ஆண்டு வருமானம் 5,00,000 ரூபாய்க்கு கீழ் என நாம் தாக்கல் செய்தால் தானே நமக்கு பணத்தை திருப்பித் தருவார்கள் அதற்குத் தான் வரி தாக்கல் செய்யச் சொல்கிறார்கள்.

நம் இறப்பின் போது நம் குடும்பத்துக்கு காசு கிடைக்க

இந்தியாவில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படி ஒரு சாலை விபத்தில் நாம் இறந்துவிட்டால் நமக்கு மோட்டார் வாகன இன்ஷூரன்ஸ் மூலம் க்ளெய்ம் கிடைக்கும். சுமார் 5 லட்சம் ரூபாய் தொடங்கி 2 கோடி ரூபாய் வரை இந்த க்ளெய்ம் கிடைக்கும். இந்த கெளெய் தொகையை இறப்பவரின் வயது, அவரின் வருமானம். அவரை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலை ஆகியவைகளைப் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கொடுக்கும்.

தாக்கல் செய்திருந்தால்

இப்போது நம் இறப்புக்குப் பின் நம் வருமானத்தை நிரூபிக்க வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்களா எனக் கேட்பார்கள். வருமான வரி தாக்கல் செய்திருந்தால் க்ளெய்ம் உறுதி. காரணம் வருமான வரி தாக்கல் செய்திருக்கும் படிவம் ஒரு அரசு ஆதாரமாகவே எடுத்துக் கொள்ளப்படும். எனவே வேலை வேகமாக முடிந்து நம் க்ளெய்ம் தொகையும் நம் குடும்பத்துக்கு முறையாகச் சென்று சேரும். அப்படிஒருவேளை நாம் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் நம் குடும்பத்தினர் நம் பழைய அலுவலகத்துக்கும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குமாக ஆண்டு கணக்கில் நடக்க வேண்டி இருக்கும்

Address

Dindigul

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate dindigul district court posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share