22/08/2024
தங்கலான்
நேரடியா படம் உண்டாக்கின தாக்கத்துக்கு வரேன். ரஞ்சித் அற்புதமான மேக்கர். பல சம்பவங்களை சுவையா யோசிச்சி காட்சிப்படுத்த தெரிஞ்ச இயக்குனர். ஆனா.. சமயங்களில் தன்னுடைய சுய அரசியலை முன்னிலைப் படுத்தி கதையின் தன்மையை அந்த கதை எதிர்பார்க்கும் நியாயத்தை ஒட்டுமொத்தமாக குலைத்துப் போட்டு விடுவார்.
சில தோல்விகளுக்கு பின் சார்பட்டா பரம்பரையில் தன்னை தக்க வைக்க அந்த கதை எதிர்பார்க்கும் போக்கு எதுவோ அதை மட்டுமே தெளிவாக காட்சிகளாக்கினார். ஜெயித்தார். இதோ தங்கலானிலும் ஒரு அட்டகாசமான களம் கிடைத்தும்.. அருமையான மேக்கிங் டீம்.. பக்காவான ப்ரபஷனலான நடிகர்கள்.. காசை வாரியிறைக்க தயங்காத ப்ரட்யூசர் என எல்லாம் கிடைத்தும்... வழக்கம் போல தன் ஐடியாலஜியை முன்னிலைப் படுத்தி கதையையும் அதன் மூலம் படத்தையும் சிதைத்துப் போட்டிருக்கிறார்.
நியாயமாக ஜிவி பிரகாஷ்.. விக்ரம்.. பசுபதி என அனைவருக்கும் விருதுகளும் வசூலும் குவிந்திருக்க வேண்டும். ரஞ்சித் கட்டமைத்து செல்லும் படத்தின் பிரமாண்ட முதல் பாதி அத்தகைய பிரமிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதன் பின்னர் வழக்கம் போல வலிந்து திணிக்கப்படும் இன வேறுபாடு காட்சிகள் படத்தின் தன்மையை பாதித்து மொத்தமாக ஏமாற்றி வைக்கிறது.
ஒரு க்ரியேட்டரை இப்படி தான் படம் எடுக்க வேண்டும் என யாரும் நிர்பந்திக்க முடியாது. ஒரு கதையும் களமும் கோரும் பட்சத்தில் அதில் ஏற்றதாழ்வு.. ஜாதி.. என தம் சிந்தனைகளை கோர்த்து சொல்வதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் எந்த ஒரு கதை என்றாலும் அதில் தன் ஐடியாலஜியை வலிந்து திணித்தே தீருவேன் என இறங்கினால் அது சராசரி ரசிகனாக நமக்கு கடும் சலிப்பையே ஏற்படுத்துகிறது.
சினிமா பாக்க தான் காசு கொடுத்து தியேட்டருக்கு வரோம் சார்.. உங்க கொள்கை பரப்பு டாகுமெண்ட்ரிகளை பார்க்க அல்ல.