Advocates Groups

Advocates Groups அடிப்படை சட்ட விழிப்புணர்வு

20/01/2024

குற்றம் நடைபெறுவதை தடுக்காத அரசு ஊழியருக்கு, நடைபெற்ற குற்றத்திற்கு கிடைக்கும் அதிகபட்ச தண்டனையில் பாதி தண்டனையாமே.!
உங்களுக்கு தெரியுமா.?

👊👊👊👊👊👊
நமக்கொரு பிரச்சினை என்றால், முதலில் காவல்நிலையத்திற்கே ஓடுகிறோம். இது முற்றிலுந்தவறு, நமக்குக் குற்றவியல் மற்றும் உரிமையியல் தொடர்பான எந்தப்பிரச்சினையாக இருந்தாலும், முதலில் நாம் அணுக வேண்டியது, தத்தமது கிராமத்தில் எந்நேரமும் வசிக்க வேண்டிய கிராமநிர்வாக ஊழியரைத்தானே தவிர, எங்கோ உள்ள காவலூழியர்களையன்று.

ஆமாம், குற்ற விசாரணை முறை விதி 36 இன்படி, காவல் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும், தான் ஊழியம் செய்யும் வட்டாரத்தில் குற்றம் எதுவும் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டிய கடமைப் பொறுப்பு இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு கிராமத்திலும் எந்த விதமான குற்றமும் நடைபெறாமல் தடுக்க வேண்டிய ஊழியப் பொறுப்பு அக்கிராம நிர்வாக ஊழியருடையது என, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூலின் அத்தியாயம் 3, பிரிவு 2இல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்கிராமத்தில் வசிக்கும் குடிமக்களுக்கும், இதில் பொறுப்புண்டு என்பதால்தான்,
கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடை முறைநூல்
என பெயரிடப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும்.

இப்படிக் குற்றம் நடைபெறாமல் தடுக்கவேண்டிய அரசூழியர்கள், அதனைத் தடுக்காததன் விளைவாக இந்தியத் தண்டனைச் சட்டப்படி அல்லது வேறு தண்டனைச் சட்டப்படி நடந்துள்ள குற்றத்திற்காகக் குற்றமிழைத்த நபரைத் தண்டிக்கும் போது, இந்தியத் தண்டனைச் சட்டம் 1860இன் பிரிவு 119இன்படி, அக்குற்றத்தைத் தடுக்காது கடமை தவறிய அரசூழியருக்குக், குற்றவாளிக்கு விதிக்கும் அதிகபட்சத் தண்டனையில், பாதித் தண்டனையை கட்டாயம் விதிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது.
(மேற்கண்ட விதியினை குறிப்பிட்டு ஒவ்வொரு மேல்நிலை ஊழியருக்கும் மனுவை சமர்ப்பிக்கலாம்)

அரசூழியர்களுக்கும், நிதிபதிகளுக்கும் இதனை எடுத்துச் சொன்னாலே, நமக்கெதற்கு வீண்வம்பு என அவரவர்களும் சட்டப்படிச் செய்யவேண்டிய வேலையைச் செய்து விடுவார்கள். இப்படியும் பற்பல ஊழியர்களை, வேலையைச் செய்ய வைத்திருக்கிறேன்.

ஆனால், எனக்குத் தெரிய இச்சட்டப்பிரிவின்படி, ஓர் அரசூழியருக்குக் கூடத் தண்டனை விதிக்கப்பட்டதில்லை என்பதற்கு தவறான தொழில் செய்யும் பொய்யர்களே மூலக்காரணம், எப்படி?

பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய அரசூழியர்களை வழக்கில் சேர்த்துத் தண்டிக்க ஆரம்பித்து விட்டால், பின் பிரச்சினையே இல்லாமல் தமக்கு வருமானம் போய் விடுமே. பின் நம் நாறிய பிழைப்புக்கு எங்கே போவது என்பதற்காகவேதான், திட்டமிட்டு அரசூழியர்களை வழக்கு நடவடிக்கையில் சேர்க்காமலும், தீர்வு காணாமலும் வழக்கை வாழ்நாள் முழுவதும் இழுத்தடித்து, கூறிய ஈனப்பிறவிகள் தங்கள் நாறியப் பிழைப்பை நடத்துகிறார்கள்.

அரசூழியர்கள், சில பொய்யர்கள் மற்றும் நிதிபதிகள் என்றாலே, அசுரபலம் வாய்ந்தவர்கள் என்கிற அற்ப எண்ணம் சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாத ஒவ்வொரு மக்களிடமும் நிறைந்திருக்கிறது.

இதனால், சட்டமென்பது நமக்குக் கட்டாயமன்று மக்களுக்கு மட்டுமே கட்டாயமென்று நினைக்கும் சில பொய்யர்கள், அரசு மற்றும் பொது ஊழியர்களைப் போல, மக்களாகிய நீங்களும் நினைக்கிறீர்கள்.

உங்களது பிரச்சினையைத் தூண்டி விட்டு, குற்றத்தைத் தடுக்க முயலாத மற்றும் பிரச்சினையைத் தீர்த்து வைக்காத ஊழியர்களை வழக்கு நடவடிக்கையில் சேர்க்காமலும், சிறையில் தள்ளி வேலையை இழக்கச் செய்யாமலும் விடுவதே மடத்தனம் என்றால்,

ஊழியத்தில் கடமை தவறி அரசூழியர்கள் செய்யும் குற்றங்களுக்கு, அவர்கள் மீது உயரிய தண்டனைச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளாமல், அயோக்கிய ஊழியர்களைக் காக்க, கண்துடைப்புக்காகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோராமல், இவ்வெற்றுச் சம்பிரதாய நடவடிக்கையைத் துவக்குவதற்கு முன்பாகவே, தற்காலிகப் பணிநீக்கம் அல்லது பணிநீக்கம் செய்ய வேண்டுமென்று, சமூக ஆர்வலர் என்கிற பெயரில் வெத்துவேட்டு ஆர்வக்கோளாருகள் சிலர் ஆதரவுக்குரல் எழுப்புவது மடத்தனத்தின் உச்சகட்டம்.
நீங்க எப்படி?

இதையெல்லாம் உங்க நலன் விரும்பிகள் யாரும் சொல்லித்தரவும் மாட்டாங்க, செஞ்சித்தரவும் மாட்டாங்க.. நீங்க கேட்டாலும் அது அப்படி, இது இப்படின்னு உங்களையே குழப்புவாங்க. சந்தேகமிருந்தா முயற்ச்சிபண்ணி பாருங்க.

நிறைய விளக்கம் வேணும்னா மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியோட வெளிவந்த

நீ வாழ நீயே வாதாடு
நீதியைத்தேடி
ஏழு நூல்களையும் உங்க ஊர்
அரசு பொது நூலகத்துல
எடுத்து படிச்சி பாருங்க. வாரண்ட் பாலா..

19/01/2024

*பிடியாணை (Warrant) என்றால் என்ன*

குற்றம் செய்த ஒருவரை அல்லது குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படுகின்ற ஒருவரை எங்கு பார்த்தாலும் கைது செய்து தன் முன்னால் ஆஜர் படுத்துவதற்கு காவல்துறைக்கு நீதிமன்றம் இடுகின்ற ஆணை பிடியாணை (Warrant) ஆகும்.

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-70 ஒரு பிடியாணை என்பது எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டு, நீதிமன்றத்தில் தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற அலுவலரால் கையெழுத்து போடப்பட்டு, அந்த நீதிமன்றத்தின் முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பிடியாணை அதனை பிறப்பித்த நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுகின்ற வரையிலோ அல்லது உரிய காவல்துறை அதிகாரியால் நிறைவேற்றப்படுகின்ற வரையிலோ அமுலில் இருக்கும்.

பிடியாணைகள் ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை, ஜாமீனில் விடமுடியாத பிடியாணை என்று இரண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

*ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை* *(Cr.P.C:71 - Bailable Warrant)*

ஒருவர் பிடியாணையின் மூலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால் அவரிடமிருந்து தக்க பிணையத்தை (Surity)பெற்றுக்கொண்டு அவரை காவல்துறை பாதுகாப்பில் இருந்து விடுவிக்கலாம் என்று அந்தப் பிடியாணையில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை ஆகும்.

*ஜாமீனில் விட முடியாத பிடியாணை* *(Non-Bailable Warrant)*

ஒருவர் பிடியாணையின் மூலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால், அவரை பிணையில் விடுவிக்க அந்த பிடியாணையில் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றால் அது ஜாமீனில் விடமுடியாத பிடியாணை ஆகும். இருந்த போதிலும், கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சமயத்தில், அவருக்கு அந்த நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கலாம்.

*பிடியாணையின் சாராம்சம் (Cr.P.C:75)*

பிடியாணையினை நிறைவேற்றுகின்ற காவல்துறை அலுவலர் அல்லது வேறு நபர் அதில் கூறப்பட்டுள்ள சாராம்சத்தை கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு அறிவிக்க வேண்டும். அவர் பிடியாணையை பார்க்க வேண்டும் என்று கேட்டால் அதனை அவருக்கு காண்பிக்க வேண்டும்.

*24 மணி நேரத்திற்குள் ...(Cr.P.C:76)*

பிடியாணையின்படி கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடாத பட்சத்தில் அவரை 24 மணி நேரத்திற்குள் காவல்துறை அலுவலர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும்.

*பிடியாணையை நிறைவேற்றும் இடம்* *(Cr.P.C:77)*

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஒரு பிடியாணையை இந்தியாவின் எந்த ஒரு இடத்திலும் நிறைவேற்றலாம்.

*குற்ற விசாரணை முறைச் சட்டம்* *பிரிவு-78*

ஒருவரை அல்லது பலரை கைது செய்யுமாறு ஒரு பிடியாணையை பிறப்பிக்கும் நீதிமன்றம், அதன் அதிகார வரம்பிற்கு வெளியே அந்த பிடியாணையானது நிறைவேற்றப்பட வேண்டியதிருக்கும்போது, அந்த மாவட்ட நீதித்துறை நடுவர் அல்லது காவல் ஆணையர் அல்லது மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியவர்களில் ஒருவருக்கு தபால் மூலமாகவோ, அதனை அனுப்பி அதனை நிறைவேற்றச் செய்யவேண்டும்.

*குற்ற விசாரணை முறைச் சட்டம்* *பிரிவு-79*

ஒருவரை அல்லது பலரை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையானது, அதனை பிறப்பித்துள்ள நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே நிறைவேற்றப்பட வேண்டியதிருந்தால், அந்தப் பகுதிக்குரிய நீதிமன்ற நடுவரிடமோ, தகுதி வாய்ந்த காவல்துறை அதிகாரியிடமோ ஒப்புதல் கையொப்பம் பெறுவதற்கு அந்த பிடியாணை கடிதம் காவல்துறை அலுவலர் ஒருவரால் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அப்பிடியாணையில் மேற்கண்ட அதிகாரிகளால் ஒப்புதல் செய்யப்பட்டால் அந்த காவல்துறை அலுவலர் அந்த பிடியாணையை நிரைவேற்றும் அதிகாரத்தை பெற்றவர் ஆவார்.

*குற்ற விசாரணை முறைச் சட்டம்* *பிரிவு-80*

சரி, பிடியாணையின்படி அதனை பிறப்பித்துள்ள நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே நியமிக்கப்பட்ட காவல்துறை அலுவலர் ஒருவரை கைது செய்து விட்டார். அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்?

பிடியாணையை பிறப்பித்த நீதிமன்றமானது (பிடியாணை கைதி) கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இல்லை என்றால், அந்த வட்டார எல்லைக்குள் அதிகாரமுடைய காவல்துறை அதிகாரி முன்னால் கைதியை ஆஜர் படுத்த வேண்டும்.

கைது செய்யப்பட்ட நபர் பிடியாணையில் குறிப்பிட்டுள்ளவர்தான் என்று தங்களுக்கு தோன்றினால், நீதித்துறை நடுவர் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது காவல் ஆணையர் அந்த கைதியை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட வேண்டும். பிணையம் கொடுக்கக்கூடிய குற்றம் என்றால் பிணையம் கொடுக்கலாம். அந்த பிணைய பத்திரத்தை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

*குற்ற விசாரணை முறைச் சட்டம்* *பிரிவு-81*

பிணையில் விட முடியாத குற்றமாக இருந்தால், எந்த மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதோ அந்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அல்லது செஷன்ஸ் கோர்ட் நீதிபதியோ தக்க பரிசீலணை செய்து அந்த கைதியை பிணையில் விட உத்தரவிடலாம்.

19/01/2024

*வணிக வழக்குகளில் பதில் உரை தாக்கல் செய்வதற்காக பிரதிவாதிக்கு கொடுக்கப்பட்டுள்ள 120 நாள் கால அவகாசமானது மேற்படி வழக்குகளில் எதிரிடை கோரிக்கைகளுக்காக வாதிகள் தாக்கல் செய்ய வேண்டிய பதில் உரைக்கும் பொருந்துமா?*

*வழக்கு விபரம்:*

வணிக வழக்குகளில் பிரதிவாதி தரப்பில் எதிரிடை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மேற்படி எதிரடி கோரிக்கைகளுக்கு வாதிகள் தரப்பில் பதில் உரை தாக்கல் செய்வதற்கு கால அவகாசமானது பிரதிவாதிக்கு தாக்கல் செய்ய குறிப்பிடப்பட்டுள்ள அதே 120 நாட்கள் பொருந்துமா அல்லது மேற்படி வழக்கானது உயர் நீதிமன்றத்தில் அதன் அசல் ஆள்வரை கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் உயர்நீதிமன்றத்தின் அசல் ஆள்வரை விதிகள் படி பொருந்துமா என்ற கேள்வியினை ஆராய்ந்த சென்னை உயர்நீதிமன்றம் *மரியா ஆல்பெர்ட் ஸ்டான்லி எதிர் டைமண்ட் ஹாஸ்பிடல் எக்யூப்மென்ட்ஸ்* என்ற வழக்கினில் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எதிரிடை கோரிக்கையானது தாவாவாகவே கருத வேண்டும் என்றும் ஏனெனில் மேற்படி தாவாவையும், எதிரிடை கோரிக்கையும் முறையாக தனித்தனியாக தீர்மானிக்க வேண்டியதாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தின் பல வழக்குகள் மேற்கோள் காட்டுகின்றன என்றும் அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது வாதியானவர் மேற்படி எதிரிடை கோரிக்கைக்காண அவருடைய பதில் உரையை உரிய காலத்திற்குள் அளிக்க வேண்டும் என்றும் மேற்படி கால அளவானது பிரதிவாதிக்கு பதிலுரை தாக்கல் செய்ய எவ்வளவு கால அளவோ அதே அளவிற்கு தான் இதுவும் இருக்க வேண்டும் என்றும் எனவே வாதியும் 120 நாட்களுக்குள் அவருடைய பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அந்தக் காலம் கடந்து அவரால் பதிலுரை தாக்கல் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தக் காலமானது என்றைய தேதியில் இருந்து கணக்கிடப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் வாதி எதிரிடை கோரிக்கையின் மனு நகலினை பெற்ற தேதியிலிருந்து கணக்கிட வேண்டும் என்றும் இதனை கணக்கிடுவதற்காக உரிய நடைமுறைகள் ஏதும் இல்லாத காரணத்தினால் உயர்நீதிமன்றம் வழிமுறைகளை இந்த வழக்கில் வழி வகுத்து கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் வணிக நீதிமன்றங்கள் எதிரிடை கோரிக்கைகளை கோப்பிற்கு எடுத்துக் கொள்வதற்கு வழக்குரையை கோப்பிற்கு எடுப்பதற்கு என்ன நடைமுறையை பின்பற்றுகிறார்களோ அதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும், பிரதிவாதிகள் எதிரடை கோரிக்கை மனுவினை தாக்கல் செய்யும்பொழுது வாதிக்கு அல்லது அவரது வழக்கறிஞர்களுக்கு மனு மற்றும் ஆவணங்களின் நகலினை கொடுக்க வேண்டும் என்றும், அதனை அவர்கள் பெற்றுக் கொண்ட தேதியிலிருந்து அவர்களுக்கான கால அவகாசம் தொடங்குகிறது என்றும் குறிப்பிட்டு உத்தரவிட்டுள்ளது.

*சென்னை உயர்நீதிமன்றம்*

C S. No.s 1&48/2023

*Maria Albert Stanley -Vs- Diamond hospital equipments*

Dt. 22.12.2023

#2024(1)CTC113

19/01/2024

சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை பெறும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர், அதனை ஒரு மனுவாக கருதி, சமுதாய சேவைப் பதிவேட்டில் அதனை பதிவு செய்து கொண்டு புகார்தாரருக்கு ஒப்புகை சீட்டினை வழங்க வேண்டும். மனுவை பெறும் காவல் அலுவலர், புகார் பெற்ற விபரத்தை உடனடியாக மூத்த அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து, மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காவல்துறையினருக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது.

சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை காவல்துறையினர் விசாரிக்க அதிகாரம் இல்லை என்றாலும், அவர் அதற்கான அதிகாரத்தை குவிமுச சட்டப் பிரிவு 149 ன் மூலம், அதாவது ஒரு காவல் அலுவலர், பிடியாணை வேண்டாக் குற்றத்தை தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின் மூலம் அத்தகைய அதிகாரத்தை பெறுகிறார். குவிமுச சட்டப் பிரிவு 149 ஆனது ஒவ்வொரு காவல் அலுவலரும் ஏதாவதொரு பிடியாணை வேண்டாக் குற்றம் புரியப்படுவதை தடுக்கும் நோக்கத்திற்காக அதில் குறுக்கிடலாம் என்று கூறுகிறது. ஆனால் சிவில் மனுக்களை பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து செய்வது சட்ட விரோதமானது.

ஏற்கனவே நீதிபதி இரகுபதி அவர்கள் CRL. OP. NO - 5426/2009 என்ற வழக்கில், காவல்துறையினர் கட்டப் பஞ்சாயத்து செய்வது தவறு என்றும், அது கடுமையாக தண்டிக்க பட வேண்டிய குற்றம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை விசாரிக்க வேண்டும் என்றால் எதிர் தரப்புக்கு குவிமுச சட்டப் பிரிவு 160 ன் கீழ் அழைப்பாணை அனுப்பி விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

W. P. No - 6453/2010 என்ற வழக்கில் நீதிபதி திரு. பால் வசந்தகுமார் அவர்கள் போலீசார் சிவில் வழக்குகளில் தலையிட்டு சட்ட விரோதமாக கட்டப் பஞ்சாயத்து செய்வதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

2004 - 1 - CTC - 130 என்ற வழக்கில் காவல்துறையினர் சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை காவல்துறையினர் ஒரு புகார் மனுவாக கருதி விசாரிக்கலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

ஆக சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை காவல்துறையினர் விசாரிக்க தடை ஏதுமில்லை. ஆனால் அந்த விசாரணை சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர் (officer - in - charge of the police station) காவலர் என்ற பதவி நிலைக்கு மேலான அலுவலர், குவிமுச சட்டப் பிரிவு 154(1) ன்படி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அதிகாரம் படைத்தவராவார். இரண்டாம் நிலை காவலர்களுக்கு பிடியாணை வேண்டாக் குற்றங்கள் (cognizable offence) பதிவு செய்யும் அதிகாரம் தமிழ்நாட்டில் கிடையாது. புறங்காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் தலைமைக் காவலருக்கு, குவிமுச சட்டப் பிரிவு 174 ன் கீழ் வழக்கை பதிவு செய்யவும், அதன் புலன்விசாரணையை தமிழ்நாடு காவல் நிலை ஆணை எண் 585 ன்படியும், சென்னை குற்றவியல் நடைமுறை விதிகளின் பிரிவு 21(40) ன்படியும் நடத்திட அதிகாரம் உண்டு.

1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 36 ன் கீழ், எந்தவொரு உயர் அலுவலரும் வழக்கை பதிவு செய்து புலன்விசாரணை செய்யும் அதிகாரம் பெற்றவராவார். தமிழ்நாடு காவல் சட்டம் பிரிவு 35 மூத்த காவல் அலுவலர், சார்நிலை காவல் அலுவலரின் அதிகாரங்களை கையாள அவர்களுக்கு அதிகாரம் வழங்குகிறது.

FIR பதிவு செய்வதற்கான அலுவலர், காவல் நிலைய பொறுப்பு அலுவலராக இருத்தல் வேண்டும். அந்த காவல் நிலையத்தில் பணிபுரியாத, வேறு பிற காவல் அலுவலர்களுக்கு FIR பதிவு செய்ய அதிகாரம் கிடையாது.

எடுத்துக்காட்டாக தனிப்பிரிவு, குற்ற புலனாய்வுத்துறை, நுண்ணறிவு பிரிவு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கண்காணிப்பு பிரிவு, ஆவின், முனிசிபல் கார்ப்பரேஷன், போக்குவரத்து கழகங்கள், காவலர் பயிற்சி பள்ளி, ஆயுதப்படை பிரிவுகள், கணிணிப்பிரிவு, குற்ற ஆவணக்கூடம் ஆகியவற்றில் பணிபுரியும் காவல் அலுவலர்களுக்கு, அவர்களது அந்தந்த பிரிவுகள் காவல் நிலையங்களாக அறிவிக்கப்படாததால் அவர்களுக்கு Fir பதிவு செய்ய அதிகாரம் கிடையாது.

குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுகள் காவல் நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த பிரிவுகளில் பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு வழக்கை பதிவு செய்து புலன்விசாரணை செய்ய அதிகாரம் உண்டு.

06/04/2023

*பத்திரங்களில் குறிப்பிடப்படும் சொற்களுக்கான விளக்கங்கள்*

பொதுவாக வீடுகள், மனைகள் அல்லது இதர வகை நிலங்கள் ஆகியவற்றை வாங்குபவர்கள் அதற்கான ஆவணங்களை பிறரிடம் படிப்பதற்காக தந்து சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்கின்றனர்.

ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் சொற்கள் அல்லது வாசகங்கள் பலருக்கும் எளிதில் புரிவதில்லை. ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளுக்கான விளக்கங்கள் வருமாறு :

கிராம நத்தம்:

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதி.

கிராம தானம்:

கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலம் ஒதுக்கப்படுவது.

தேவதானம்:

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலம் தானமாக அளிக்கப்படுவது.

இனாம்தார்:

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்:

நிலத்தின் பரப்பளவு மற்றும் எல்லைகளை குறிப்பது.

பட்டா:

சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வருவாய்த்துறை சான்றிதழ்.

சிட்டா:

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் கொண்ட வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்:

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, பயன்பாடு, கிராமம் அல்லது சம்பந்தப்பட்ட ஊரில் உள்ள மொத்த நிலப்பரப்பில் அந்த நிலம் எங்கு அமைந்துள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை சான்று.

நன்செய்நிலம்:

அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்:

பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை:

ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

‌ஷரத்து:

பிரிவு.

இலாகா:

துறை.

கிரயம்:

நிலம் அல்லது வீட்டை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்தும் சொல்.

வில்லங்க சான்று:

குறிப்பிட்ட ஒரு வீடு மனையின் மீது ஒருவருக்கு உள்ள உரிமை மற்றும் அந்த சொத்து சம்பந்தமாக அவர் மேற்கொண்ட வெவ்வேறு நடவடிக்கைகள் உள்ளிட்ட சகல விதமான வி‌ஷயங்களையும் அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்:

நில அளவை எண்.

இறங்குரிமை:

வாரிசுரிமை.

தாய்ப்பத்திரம்:

ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தைய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்:

குறிப்பிட்ட ஒரு பொறுப்பை நிறைவேற்ற அளிக்கப்படும் உறுதி.

அனுபவ பாத்தியம்:

குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியை நீண்ட காலம் பயன்படுத்தி வந்ததன் அடிப்படையில் பெறப்படும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு:

நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி:

வருவாய் தீர்வாயம்.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுறையினர் தெரிவித்தனர்....

06/04/2023

*சட்டம்அறிவோம்*

ஐபிசிபிரிவு = பொருள்
பிரிவு 307 = கொலை முயற்சி
பிரிவு 302 = கொலைக்கான தண்டனை
பிரிவு 376 = கற்பழிப்பு
பிரிவு 395 = கொள்ளை
பிரிவு 377 = இயற்கைக்கு மாறான செயல்
பிரிவு 396 = கொலை செய்யும் போது கொலை
பிரிவு 120 = சதி
பிரிவு 365 = கடத்தல்
பிரிவு 201 = ஆதாரங்களை அழித்தல்
பிரிவு 34 = பொதுவான நோக்கம்
பிரிவு 412 = ஊர்சுற்றுவது
பிரிவு 378 = திருட்டு
பிரிவு 141 = சட்டவிரோத சட்டசபை
பிரிவு 191 = தவறான ஆதாரங்களை அளித்தல்
பிரிவு 300 = கொலை
பிரிவு 309 = தற்கொலை முயற்சி
பிரிவு 310 = மோசடி
பிரிவு 312 = கருக்கலைப்பு
பிரிவு 351 = தாக்குதல்
பிரிவு 354 = பெண் அவமானம்
பிரிவு 362 = கடத்தல்
பிரிவு 415 = மோசடி
பிரிவு 445 = வீடு உடைத்தல்
பிரிவு 494 = வாழ்க்கைத் துணையின் வாழ்நாளில் மறுமணம்
பிரிவு 499 = அவதூறு
பிரிவு 511 = ஆயுள் தண்டனையுடன் தண்டிக்கக்கூடிய குற்றங்களைச் செய்ய முயற்சித்ததற்கான தண்டனை.
▫▪▫▪▫▪▫▪

(1) மாலையில் பெண்களை கைது செய்ய முடியாது -

குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 46 ன் கீழ், இந்திய காவல்துறை எந்தவொரு பெண்ணையும் மாலை 6 மணிக்குப் பிறகு, காலை 6 மணிக்கு முன்னதாக கைது செய்ய முடியாது. காவல்துறையினர் அவ்வாறு செய்தால், கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி மீது புகார் (வழக்கு) பதிவு செய்யப்படலாம். இது அந்த காவல்துறை அதிகாரியின் வேலையை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.

(2.) சிலிண்டர் வெடித்ததால் உயிர் மற்றும் சொத்து இழப்பு குறித்து ரூ .40 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையை கோரலாம்

பொது பொறுப்புக் கொள்கையின் கீழ், எந்தவொரு காரணத்திற்காகவும் உங்கள் வீட்டில் ஒரு சிலிண்டர் வெடித்து, நீங்கள் உயிர் மற்றும் சொத்துக்களை இழக்க நேரிட்டால், நீங்கள் உடனடியாக எரிவாயு நிறுவனத்திடமிருந்து காப்பீட்டுத் தொகையை கோரலாம். எரிவாயு நிறுவனத்திடமிருந்து ரூ .40 லட்சம் வரை காப்பீட்டுக் கோரலாம் என்று உங்களுக்குச் சொல்வோம். நிறுவனம் உங்கள் கோரிக்கையை மறுத்துவிட்டால் அல்லது ஒத்திவைத்தால், அதைப் புகார் செய்யலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், எரிவாயு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யலாம்.

(3) எந்த ஹோட்டலும் 5 நட்சத்திரங்களாக இருந்தாலும்… நீங்கள் இலவசமாக தண்ணீர் குடிக்கலாம் மற்றும் கழுவும் அறையைப் பயன்படுத்தலாம்

இந்திய தொடர் சட்டம், 1887 இன் படி, நீங்கள் நாட்டின் எந்த ஹோட்டலுக்கும் சென்று தண்ணீர் கேட்கலாம், மேலும் அந்த ஹோட்டலின் கழுவும் அறையையும் பயன்படுத்தலாம். ஹோட்டல் சிறியது அல்லது 5 நட்சத்திரங்கள், அவர்களால் உங்களைத் தடுக்க முடியாது. ஹோட்டல் உரிமையாளர் அல்லது எந்தவொரு ஊழியரும் உங்களை குடிநீர் அல்லது கழுவும் அறையைப் பயன்படுத்துவதைத் தடுத்தால், நீங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். உங்கள் புகார் அந்த ஹோட்டலின் உரிமத்தை ரத்து செய்யக்கூடும்.

(4) கர்ப்பிணிப் பெண்களை வெளியேற்ற முடியாது-

மகப்பேறு நலச் சட்டம் 1961 இன் படி, கர்ப்பிணிப் பெண்களை திடீரென நீக்க முடியாது. உரிமையாளர் முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு அறிவிப்பைக் கொடுக்க வேண்டும், மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் செலவுகளில் சிலவற்றைச் செலுத்த வேண்டும். அவர் இதைச் செய்யாவிட்டால், அவர் மீது அரசு வேலைவாய்ப்பு சங்கத்தில் புகார் அளிக்க முடியும். இந்த புகாரின் காரணமாக, நிறுவனம் மூடப்படலாம் அல்லது நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

(5) உங்கள் புகாரை எழுத காவல்துறை அதிகாரி மறுக்க முடியாது

ஐபிசியின் பிரிவு 166 ஏ படி, எந்தவொரு போலீஸ் அதிகாரியும் உங்கள் புகார்களை பதிவு செய்ய மறுக்க முடியாது. அவர் இதைச் செய்தால், அவர் மீது மூத்த போலீஸ் அலுவலகத்தில் புகார் அளிக்க முடியும். அந்த காவல்துறை அதிகாரி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் குறைந்தது (6) மாதம் முதல் 1 வருடம் வரை சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அவர் வேலையை இழக்க நேரிடும்...

29/03/2023

பெற்றோர்களுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை. உயில் எழுதும்போது இதை மறந்துடாதீங்க!

, 2007

::::::::::::::::::*::::::::::::::::*:::::::::::::::::*::::::::::::::::::::

பெற்றோர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்துச் சம்பாதித்துச் சிறுகச் சிறுக சேமித்து வாங்கிய சொத்துக்களைக் குழந்தைகளுக்குப் பரிசாக அளிக்கும் போது பெற்றோர்கள், முதுமை காலத்தில் தங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையைக் கட்டாயம் சொத்துக்களைத் தானமாகக் கொடுக்கும் பத்திரத்தில் எழுதி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொதுவாகச் சொத்துக்களை ஒருவரின் பெயரில் இருந்து மாற்றுவதற்கு அதிகப்படியான பத்திர செலவுகள் ஆகும். அதைப் பெற்றோர்கள் - குழந்தைகள், தாத்தா பாட்டி - பேரன் பேத்தி, குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் gift deed அதாவது பரிசாக அளிப்பதாகப் பத்திர பதிவு செய்யலாம்.

இதற்குக் கட்டணம் மற்றும் பதிவு கட்டணங்கள் குறைவு என்பதால் பெரும்பாலானோர் இதைப் பயன்படுத்தும் நிலையில் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.

பெற்றோர்கள் - பிள்ளைகள்
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் கடைசிக் காலம் வரையில் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் தங்களுடைய சொத்துக்களைக் குழந்தைகளுக்குப் பரிசாக gift deed மூலம் அளிக்கின்றனர். ஆனால் பல பிள்ளைகள் தங்களது பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ளாத பிரச்சனைகள் சமீபத்தில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

சட்டம்
முதுமையில் தங்கள் குழந்தைகளால் புறக்கணிக்கப்படும் அனைத்து பெற்றோருக்கும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007ன் படி நீதிமன்றத்திற்குச் சென்று கொடுத்த சொத்துக்களைப் பெறுவதற்கு உரிமை அளிக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
ஆனால் தற்போது வெளியாகியுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, குழந்தைகளுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட சொத்துக்களைத் திரும்பப் பெறும் உரிமையை ரத்துச் செய்ய வாய்ப்பு உள்ளதை இந்திய பெற்றோர்களுக்கு எச்சரித்துள்ளது. இதனால் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கையைப் பெற்றோர்கள் கண்டிப்பாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குருகிராமை சேர்ந்த பெண் (தாயார்) ஒருவர் தனது குழந்தைகளுக்குச் சில சொத்துக்களைப் பரிசாக அளித்துள்ளார். பின்னர் குழந்தைகள் தன்னைக் கவனித்துக் கொள்ளவில்லை என்று கூறி பரிசு பத்திரத்தை அதாவது gift deed-ஐ பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007ன் படி ரத்து செய்யுமாறு பராமரிப்புத் தீர்ப்பாயத்தை நாடினார்.

தீர்ப்பாயம் குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறிந்து மே 2018 இல் பரிசுப் பத்திரத்தை ரத்து செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுப் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பை திரும்பப் பெற்றுக்கொண்டு உள்ளது.

மேல் முறையீடு
இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கவுல் மற்றும் ஓகா புதன்கிழமை முந்தைய தீர்ப்பை மாற்றியமைத்தனர், பரிசுப் பத்திரத்தில் அவரது மூன்று குழந்தைகள் (2 மகள்கள் மற்றும் 1 மகன்) அவரது சொத்தை பரிசாக வழங்குவதற்குப் பதிலாக வயதான தாயாரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற வெளிப்படையான விதிகள் எதுவும் பத்திரத்தில் குறிப்பிடவில்லை. எனவே, பரிசுப் பத்திரத்தை ரத்துச் செய்ய முடியாது என்று பெஞ்ச் கூறியது.

மூத்த குடிமக்கள் உஷார்
மூத்த குடிமக்கள் தங்களது சொத்துக்களைப் பிரித்துத் தங்களுடைய அன்பானவர்களுக்கும் ஆதரவானவர்களுக்கும் கொடுக்கும் போது மூத்த குடிமக்களைப் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை கட்டாயம் எதுவும் இல்லை, ஆனால் நீதிமன்றத்திற்கு வரும் போது இத்தகைய நிபந்தனை கட்டாயம் என நீதிபதிகள் சஞ்சய் கே கவுல் மற்றும் ஏஎஸ் ஓகா தெரிவித்துள்ளனர்.

புரிதல், நம்பிக்கை, எதிர்பார்ப்பு
நீதிபதிகள் சஞ்சய் கே கவுல் மற்றும் ஏஎஸ் ஓகா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் புதன்கிழமை, மூத்த குடிமக்கள் பொதுவாகத் தங்கள் குழந்தைகளுக்குச் சுயமாகச் சம்பாதித்த சொத்துக்களை முதுமை காலத்தில் பிள்ளைகள் அவர்களை நன்கு கவனிப்பார்கள் என்ற புரிதல், நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு உடன் தான் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள்.

கட்டாயம் தேவை
இப்படிச் சொத்துக்களைப் பிரித்துக்கொடுக்கும் போது முதுமை காலத்தில் தங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையைக் கட்டாயம் சொத்துக்களைத் தானமாகக் கொடுக்கும் பத்திரத்தில் எழுதி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெற்றோர் மற்றும் முதியோர் பாதுகாப்பு சட்டம் பிரிவு 23 இன் கீழ் பெற்றோர் தாங்கள் தான செட்டில்மெண்டாக எழுதிக் கொடுத்த ஆவணத்தை #ரத்து செய்ய வேண்டுமெனில் "தனது ஜீவன் உள்ளவரை தன்னைக் காப்பாற்ற வேண்டும்" என #நிபந்தனை இருந்தால் மட்டுமே அதனை ரத்து செய்ய முடியும்.

#பெற்றோர் எழுதிக் கொடுத்த absolute & unconditional செட்டில்மெண்ட் ஆவணத்தை ( ) ரத்து செய்து Tribunal ( ) பிறப்பித்த உத்தரவை செல்லாது என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ( )

CIVIL APPEAL NO. 174 OF 2021
Sudesh Chhikara
v.
Ramti Devi & Anr
Judgment date;: 06-12-2022

*M.M Law Associates Chennai
N.Marimuthu.BA.BL

16/03/2023

சென்னையில் உள்ள காவல் நிலையத்தின் தொலைபே‌சி எண்கள்...
*******************
*Chennai Police Stations Contact No.*
================
C1. Flower Bazaar 044-23452464/465
C2. Elephant Gate 044-23452467/468
C3. Seven Wells 044-23452471/472
C4 Govt.Hospital 044-23452473
B2 Esplanade 044-23452458/459
B4 High Court 044-23452462
B5. Harbour 044-23452500/501
B1. North Beach 044-23452457/457
B3. Fort 044-23452460/461
N3. Muthialpet 044-23452514/515
C5 Kothavalchavadi 044-23452474/474
Port Marine B 6 Port Marine 044-23452502
H 1. Washermenpet 044-23452481/481
H 3. Tondiarpet 044-23452485/486
H 4. Korukkupet 044-23452488/489
H6 R.K. Nagar 044-23452493/494
H2 Stanley Hospital 044-25281347
H8. Thiruvottiyur 044-23452496/497
H7. Peripheral Hospital 044-23452495
H5. New Washermenpet 044-23452490/491
N1. Royapuram 044-23452504/505
N2. Kasimedu 044-23452511/510
N4. Fishing Harbour 044-23452517/518
M1 Madhavaram 044-23452783
M2 Milk Colony 044–2555085
M3 Puzhal 044-26590989
M4 Redhills 044-26418296
M5 Ennore 044–25750237
M6 Manali 044-23452788
M7 Manali New Town 044–25931299
M8 Sathangadu 044-23452790
P1. Pulianthope 044-23452520/521
P2. Otteri 044-23452524/525
P4. Basin Bridge 044-26670948
P5 MKB Nagar 044-23452531/532
P6. Kodungaiyur 044-25546241
P3 Vyasarpadi 044-23452527/526
K1.Sembium 044-23452710/711
K5.Peravallur 044-23452727/728
K9.Thiru .Vi.Ka. Nagar 044-23452736/737
K3. Aminjikarai 044-23452716/717
K4. Anna Nagar 044-23452719/720
K8. Arumbakkam 044-23452733
V3. J.J. Nagar 044-23452748/749
V5. Thirumangalam 044-23452753/754
V7 Nolambur 9940596447
K10. Koyambedu 044-23452739
T4 Maduravoyal 044-23452766
CMBT 9677099958
V1. Villivakkam 044-23452744/745
V4. Rajamangalam 044-23452750/751
V6. Kolathur 044-23452758
T1 Ambattur 044-23452797
T2 Ambattur Estate 044-23452798
T3 Korattur 044-23452799
T6 Avadi 044-26554750
T7 Tank Factory 044-23452771
T10 Thirumullaivoyal 044 - 23452772
T 11 Thirunindravur 044 - 26390293
T 8 Muthapudupet 044 -26841795
T 9 Pattabiram 044 - 26851632
T12 Poonamallee 044-26272082
T16 Nasaratpet 044-26271414
T5 Thiruverkadu 044-26800091
T15 SRMC 044-23452767
T14 Mangadu 044-26791102
T13 Kunrathur 044-24780039
K 6 TP Chathiram 044-23452729/730
G3 Kilpauk 044-23452699/700
G7 Chetpet 044-23452686
G6 KMC Hospital 044-23452709
G1 Vepery 044-23452690/691
G2 Periamet 044-23452696/6 97
K2 Ayanavaram 044-23452714/715
K7 ICF 044-23452731/732
G4 Mental Hospital
G5 Secretariat Colony 044-23452704/706
D1.Triplicane 044-23452655/656
D8. K.G. Hospital 044-23452672
D2. Annasalai 044-23452661/662
D4. Zam Bazaar 044-23452665/666
D6. Anna Square 044-23452667/668
F1. Chintadaripet 044-23452673/674
F2. Egmore 044-23452677/678
F7. Maternity Hospital 044-23452689
F3 Nungambakkam 044-23452680/681
F4 Thousand Lights 044-23452684/683
R5 Choolaimedu 044-23452742/743
E1. Mylapore 044-23452562
E5. Foreshore Estate 044-23452575
D5. Marina 044-23452558/559
E4. Abiramapuram 044-23452571/572
J2 Kotturpuram 044-23452595/596
E2 Royapettah 044-23452567/565
D3 Ice House 044-23452556/555
E-6 Govt. Royapettah
Hosp
044-23452576
S1 St. Thomas Mount 044-23452763
S4 Nandampakkam 044-23452765
S9 Palavanthangal 044-22241950
S2 Airport 044-22564284
S3 Meenambakkam 044-22561261
S5 Pallavaram 044-22640880
S6 Sankar Nagar 044-22484094
S11 Tambaram 044-23452769
S13 Chrompet 044-23452770
S 15 Selaiyur 044 - 22396003
S12 Chitlapakkam 044 - 22232005
S14 Peerkankaranai 044 - 22398018
S7 Madipakkam 044 - 23452774
S 8 Adambakkam 044 - 23452777
S 10 Pallikaranai 044 - 23452775
J2. Adyar 044-23452583/584
J5. Sastri Nagar 044-23452598/599
J1. Saidapet 044-23452577/578
R6 Kumaran Nagar 044-23452629/628
J3. Guindy 044-23452590/591
J7. Velachery 044-23452605/606
J6. Thiruvanmiyur 044-23452602/603
J13 Taramani 044-22541636
J9. Thoraipakkam 044-23452776
J10 Chemmanchery 044-24500707
J11Kannagi Nagar 97910 90918
J 8 Neelangari 044-24491196
J 12 Kannathur 044-27472182
R1. Mambalam 044-23452608/609
R4 Soundarapandiyanar
angadi (Pondi bazaar) 044-23452624/625
R8 Vadapalani 044-23452635/634
R5 Virugambakkam 044-23452637/638
R9 Valasaravakkam 044-23452649
R11Royala nagar 044-23452649(R9.No)
R3. Ashok Nagar 044-23452617/618
R7 K.K. Nagar 044-23452630/631
R10 MGR Nagar 044-23452560/561
E3 Teynampet 044-23452569/568
R2 Kodambakkam 044-23452615/616
👮🏻‍♂️🤝👮🏻‍♀️

*ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்தது GOOD NEWS*தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற விரும்புவோர், புது தகவல்கள் சேர்க்கை மற்ற...
11/03/2023

*ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்தது GOOD NEWS*

தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற விரும்புவோர், புது தகவல்கள் சேர்க்கை மற்றும் நீக்கம் செய்ய விரும்புவோர் இனி தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியதில்லை.

உணவு வழங்கல் துறையின், https://www.tnpds.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

புது ரேஷன் கார்டு கிடைக்கும் வரை ஒரு மாற்று கார்டு உங்கள் வீட்டுக்கே உடனடியாக அனுப்பப் படும். இதற்கு அஞ்சல் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

*• The Seithikathir News Service!*
*• Telegram:* https://t.me/Seithikathir

The goal of the Public Distribution System in Tamil Nadu is to ensure food security to all citizens, particularly poor people, by making available essential commodities of good quality at affordable prices every month, through fair price shops which are easily accessible.

26/12/2022

Salary: Rs. 20,000 - 25,000/- Per Month

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியிலிருந்து போலி பத்திரப்பதிவு ரத்து அதிகாரம் அமலுக்கு வந்துள்ளது
26/12/2022

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியிலிருந்து போலி பத்திரப்பதிவு ரத்து அதிகாரம் அமலுக்கு வந்துள்ளது

Address

Ezhil Nagar
Chennai
600118

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919087212222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocates Groups posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocates Groups:

Share