Ranga Associates

Ranga Associates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ranga Associates, Lawyer & Law Firm, Chennai.

25/07/2022

வைரமுத்துவுக்கு ஏதும் மனநல பாதிப்பா? அல்லது வெளியில் இருந்து தமிழக புனிதமான இலக்கிய பிம்பங்களை உடைக்க சொல்லி நல்ல காசுக்கு உத்தரவா என்பது தெரியவில்லை தொடர்ந்து சர்ச்சையில் சிக்குகின்றார்

ஆண்டாளை பற்றி பெரும் சலசலப்பை ஏற்படுத்திய வைரமுத்து இப்பொழுது கபிலர் இந்து அல்ல என தன் தமிழறாற்றுபடை நூலில் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன‌

நாம் அந்நூலை படிக்கவில்லை எனினும் கபிலர் பற்றி சில விளக்கங்களை சொல்வது நம் கடமையாகின்றது

ஒரே ஒரு கபிலர் மட்டும் வரலாற்றில் இல்லை, கபிலமுனி என்றொருவர் வேதங்களுக்கு பொருள் சொன்ன பெருமை கொண்டவர், இவர் மிக பழமையான ரிஷி

கபில என்பது மாந்தளிர் நிறத்தை குறிக்கும் சொல், இந்த கபில முனிவர் மிக மூத்தவர், இமயமலை பக்கம் வாழ்ந்தவர்

தமிழத்தில் கபிலர், கபிலதேவ நாயானார் என பலர் கபிலர் எனும் பெயரில் இருந்தார்கள், கபிலநாயனார் ஒரு சிவபக்தர் அவர் இலக்கியங்கள் பெரிதும் பாடவில்லை பக்திவழி ஒன்றே பாடினார்

நாம் எடுத்துகொள்ளும் அதாவது வைரமுத்து சுட்டிகாட்டிய கபிலர், ஒளவையார் காலத்தில் அதியமானின் தோழராக இருந்தவர்

கபிலர், நக்கீரர், பரணர் எனும் பெரு வரிசையில் கபிலருக்கே முதலிடம் உண்டு. இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை மூவருமே சிவபக்தர்கள் என்பது

நக்கீரனார், பெருங்குன்றூர் கிழார், பொருந்தில் இளங்கீரனார், மாறோக்கத்து நப்பசலையார் என எல்லோருமே இந்த கபிலரை போற்றியிருகின்றார்கள்

எப்படி கபிலர் கொண்டாடபட்டார் என்றால் "செட்டுவன் குடகடலில் பொன்னைக் கொண்டுவரும் நாவாய் ஓட்டியபோது பிற கலங்கள் கடலில் செல்ல அஞ்சியது போல கபிலர் பாடும்போது பிற புலவர்கள் பாடுவதில்லை என மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பிடுகிறார். '

நிலமிசைப் பரந்த மக்கட்டு எல்லாம் புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் இரந்து சென் மாக்கட்கு இனி இடன் இன்றிப் பரந்து இசை நிறகப் பாடினன்(புறநாநூறு 126)

பொய்யா கவிஞன் எனவும் அவனுக்கு பெயர் உண்டு , "பொய்யா நாவிற் கபிலன் பாடிய மையணி நெடுவரை’ (புறநானூறு 174) என்பது அவ்வரி

இந்த வரியினைத்தான் கபிலரை குறிப்பிட்டு தன் பாடலில் சுந்தரரும் பாடியிருப்பார்,அதாவது கபிலர் ஒரு சிவனடியார் என்பது சுந்தரரின் கருத்து

கபிலர் குறிஞ்சிதினை பாடுவதில் வல்லவர், இன்று பாரிவள்ளலை பற்றியும் அவனின் பறம்புமலை பற்றியும் அவன் மேல் மூவேந்தர் போரிட்டது பற்றியும், அவனின் மகளான அங்கவை சங்கவை பற்றியும் இன்று அறியவரும் அனைத்து தகவலும் கபிலரும் ஒளவையும் கொடுத்தது

கபிலர் பாரிவள்ளலை விட்டு அகலாமல் கூட இருந்தவர், ஒளவை எல்லா இடமும் சுற்றி வந்தவர்

அப்படிபட்ட கபிலர் எவ்வளவோ பாடல்களை பாடினார், இலக்கியத்தில் அவருக்கு அழியா பெரும் இடம் உண்டு, குறிஞ்சிதினையில் அவரையன்றி யாரும் முத்திரை பதித்ததில்லை

அவர் ஒரு இந்து என்பதை விளக்க, அதாவது வைரமுத்துவின் குழப்பத்தை நொறுக்க சில காட்சிகளை காண வேண்டும்

அந்த கபிலர் நக்கீரருக்கு இணையாக மதிக்கபட்டவர், இதனால் மதுரை தமிழ்சங்கத்தின் முக்கிய கவிஞராக இருந்தார், அந்த சபைக்கு சிவனே தலைவர் என்பதால் கபிலர் ஒரு இந்துவழி என்பதில் மாற்றுகருத்தே இல்லை

கபிலர் தன்னை அந்தணர் என்று கூறுகிறார், இந்துக்களை தவிர யாரும் அந்தணர் என தன்னை அடையாளபடுத்தமாட்டார்கள்

கபிலர் பாரிமகளிருக்காக இருங்கோவேளிடம் பாடிய பாடலில் தன் அடையாளமாக முறையே ‘அந்தணன், புலவன்’ என்று குறிப்பிடுகிறார். ’யானே தந்தை தோழன், இவர் என் மகளிர். அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே ‘(புறநானூறு 201). மாறோக்கத்து நப்பசலையார் ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’ என்று கபிலரை பாராட்டியிருக்கிறார் (புறம் 126) .

சங்கப்பாடல்களின் சொல்லாட்சிமுறையை கொண்டு நோக்கினால் கபிலர் பிறப்பால் அந்தணர் என்று தெரியவருகிறது, அந்தணர் என்றால் இந்து

கபிலர் சிவனையும் உமையையும், திருமாலையும் திருமகளையும், கண்ணனையும் பலராமனையும் உணர்ந்துள்ளார். மேருவை வில்லாக வளைத்து திரிபுரத்தை எரித்த சிவன் கதை, இமையமலையை உமை அஞ்ச தோள்கொடுத்து அசைத்த ராவணனின் கதை, துரியோதனின் தொடை கிழித்து உயிர்போக்கிய பீமன் கதை, மல்லரைக் கொன்ற கண்ணன் கதை ஆகியவற்றை கபிலர் பாடியுள்ளார்

ஆதாரம் கொட்டி கிடக்கின்றது

அப்படியே திருமாலின் கருநிறத்தையும், பலராமனின் வெண்ணிறத்தையும், இருபுறமும் யானைகள் நின்று நீர் சொரிய தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகளின் காட்சியையும் கூறுகிறார்’ என்று தன் நூலில் குறிப்பிடுகிறார்.

மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் ளருவி" என்பது கபிலரின் புகழ்பெற்ற வரி

கபிலர் தேவருலகை பாடினார். (இனிதெனப்படும் புத்தேள் நாடு ) அருந்ததியைப் பற்றிய குறிப்பு அவர் பாடல்களில் வருகிறது. வடமீன் புரையும் கற்பு வேள்வி பற்றிய குறிப்புகள் அவர் பாடல்களில் உள்ளன ( அழல்புறந்தரும் அந்தணர் , நெய் பெருந்தீ ) தெய்வங்களை மலரிட்டு பூசை செய்தல் பற்றிச் சொல்கிறார்( நல்லவும் தீயவும் அல்ல குவியிணர் புல்லிலை எருக்கமாயினும் உடையவை கடவுள் பேணாம் என்னா- புறநாநூற்ய் 106)

கபிலரை ஆய்வு செய்த வையாபுரி பிள்ளை போன்ற மேதைகள் அந்த கபிலர் ஓர் இந்து என அழுத்தமாக சொன்னார்கள்

இன்னும் கபிலர் ஓர் இந்து என்பதற்கு ஆதாரம் நிரம்ப உண்டு என்றாலும் சிலவற்றை சொல்லலாம்

கபிலர் ஒளவையாரின் நண்பர், ஒளவையார் எழுதிய பிரசித்தியான "விநாயகர் அகவல்" போலவே கபிலரும் "கபிலர் அகவல்" என ஒன்றை எழுதியுள்ளார்

இது முழுக்க முழுக்க இந்து தெய்வங்களை போற்றும் பாடல், அதை எந்த கொம்பனும் மறுக்க முடியாது

கபிலர் எப்படிபட்ட முழு இந்து என்பதற்கு எல்லோரும் அறிந்த வரி ஒன்று போதும்

எல்லா இந்துக்களும் பாடலில் சரஸ்வதி அல்லது விநாயகரை வணங்கிவிட்டுத்தான் பாடுவார்கள், அவ்வகையில் கபிலர் இன்றுவரை பாடபடும் பாடலை கொடுத்தார்

ஒளவை போலவே விநாயக பக்தியில் சிறந்திருந்த கபிலர் அந்த பாடலை கொடுத்தார், இன்றும் நாம் பாடும் பாடல் அது

"விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணி விப்பான்-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து."

ஆம், இப்படி பட்டவர்த்தனமாக ஒரு பாடலை கபிலர் எழுதியிருக்கும் பொழுதும் கபிலர் ஒர் இந்து அல்ல என வைரமுத்து சொல்லவருவது மிக கடுமையாக கருதபடும் விஷயம்

கருணாநிதி கல்லறை முன் கடலில் பேனா சிலை வைக்கபோகின்றார்களாம், அந்த கடற்கரையில் வைரமுத்துவின் இந்த பிதற்றல் புத்தகத்தையும் புதைப்பது மிக மிக நல்லது

இதெல்லாம் தமிழறிஞகள், இந்து பெருமக்கள் நிரம்பிய சபையில் இருந்து கண்டிக்க வேண்டும் விஷயங்கள், தமிழர்களை குழப்பி மதமாற்றத்துக்கும் தமிழ் பெருமைகளை அழிக்கும் பெரும் பாவ செயலுக்கும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயங்கள்

இங்கு இந்து தலைவர்கள் குழுவோ, இந்துதமிழ் அறிஞர் கழகமோ இல்லை என்பதுதான் இம்மாதிரி கொடுமைக்கெல்லாம் ஒரே காரணம்

இருந்துபாருங்கள், விரைவில் நாயன்மார்களே சிவனடியார்கள் அல்ல, ஆழ்வார்கள் பெருமாள் பக்தர்கள் அல்ல எனும் பெரும் ஆய்வு முடிவுக்கு வருவார் அந்த வைரமுத்து
படித்ததில் பிடித்தது

25/12/2019

Good night

11/09/2019

Onam wishes to all my malayalee brothers.

27/05/2018

Good morning

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Ranga Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ranga Associates:

Share