The Satta Sudar

The Satta Sudar a legal monthly megazine

16/08/2012

சட்டவிரோத துப்பாக்கி விற்பனை: அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி, ஜூலை 24:÷சட்டவிரோதமாக ராணுவத் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை அளிக்கும்படி மத்திய அரசுக்கும், ராஜஸ்தான் மாநில அரசுக்கும் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராஜஸ்தானின் கங்காநகர் பகுதியில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமங்கள், முறையாக பரிசீலிக்கப்படாமல் தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள், சமூகவிரோதிகளுக்கு அளிக்கப்பட்டதாக 2007-ம் ஆண்டு தெரியவந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், இந்த முறைகேட்டில் ராணுவ அதிகாரிகளுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
ஆயுதக் கிடங்கிலிருந்து ராணுவ அதிகாரிகளுக்கு, அவர்களது சொந்தப் பாதுகாப்புக்காக துப்பாக்கிகள் வழங்கப்படும். இந்த ஆயுதங்களைத்தான் சட்டவிரோதமாக சமூக விரோதிகளுக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக துப்பாக்கி உரிமம் பெற்ற 284 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து சட்டவிரோத ஆயுத விற்பனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.நிஜ்ஜார், எச்.எல்.கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது, சட்டவிரோத ஆயுத விற்பனை தொடர்பான விசராணை விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், ராஜஸ்தான் மாநில அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

16/08/2012

சென்னை - நித்யானந்தா அறக்கட்டளை பொருளாதார மோசடிக் குற்றம் புரிந்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவில் வேதிக் பல்கலைக்கழகம் துவங்க நித்யானந்தா அறக்கட்டளை தொடங்குவதற்கு பொபத்லால் சாவ்லா என்பவர் 1.57 மில்லியன் டாலர் நன்கொடையாக அளித்துள்ளார். ஆனால் அவ்வாறு எந்தப் பல்கலைக்கழகத்தையும் அறக்கட்டளை துவங்கவில்லை. பெற்ற பணத்தினையும் திரும்பக் கொடுக்கவில்லை. இது சம்பந்தமாக பொபத்லால் சாவ்லா கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், நித்யானந்தா அறக்கட்டளை மோசடிக் குற்றம் செய்துள்ளதாக தீர்ப்பு அளித்துள்ளது. பெற்ற 1.57 மில்லியன் டாலரை பொபத்லால் சாவ்லாவுக்கு, அறக்கட்டளை திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கான தண்டனையை 19.07.2012 அறிவிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

16/08/2012

வன்முறை‌யி‌ல் ஈடுப‌ட்டா‌ல் கட்சிகளின் அங்கீகார‌ம் ரத்து - ப‌தி‌ல் அளிக‌க்க ௦மத்திய அரசுக்கு உச்ாச ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்ிதரவு
புதன், 18 ஜூலை 2012( 10:31 IST )

வன்முறை‌யி‌ல் ஈடுபடு‌ம் க‌ட்‌சி‌க‌ளி‌ன் ‌அங்்‌கீகார‌த்தை ர‌த்து செ‌ய்யலாமா என்மபது கு‌றி‌த்து ஒரு வார‌த்‌தி‌ல் ப‌தி‌ல் அளிு‌க்க ம‌த்‌திய அரசு‌க்கு உச்யச ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்ாதர‌வி‌ட்டு‌ள்ளது.

உச்மச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி பிரகாஷ் சிங் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளபொது நல மனு‌வி‌ல், அரசியல் கட்சிகள்வன்முறை போராட்டத்தில் இறங்கி,பொதுச்சொத்துக்களுக்கு சேதாரம்விளைவிப்பதை தடுக்க வழிமுறைகளைவகுக்க வேண்டும் என்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, எஸ்.கே. முகோபாத்யா ஆகியோர்கொ‌ண்ட அம‌ர்வு மு‌ன்பு ‌விசாரணை‌க்கு வ‌ந்தது.

அப்போது, "வன்முறை போராட்டத்தில் இறங்கி பொதுச்சொத்துக்களுக்குசேதம் விளைவிக்கிற அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்யலாமா? தற்போது இருக்கிற சட்டங்களைக் கொண்டே இந்த நடவடிக்கைஎடுக்க முடியுமா?'' என்பது குறித்து மத்திய அரசு தனது பதிலை ஒருவாரத்தில் தெரிவிக்கும்படி ‌‌நீ‌திப‌திக‌ள் உத்தரவிட்டனர்.

16/08/2012

ஆசிட் விற்பனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புது தில்லி, ஜூலை 2: ஆசிட் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் புது தில்லியில் லக்ஷ்மி என்ற சிறுமி மீது ஆசிட் வீசப்பட்டது. ஆசிட் வீசிய இளைஞர், அவரது நண்பர்கள் இருவர் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டு இந்த வழக்கு நிலுவையில்
உள்ளது.
தனது முகம் உள்பட உடலின் பல பாகத்திலும் காயம் பட்ட லக்ஷ்மி, 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுத்தார். ஆசிட் வீச்சினால் பாதிப்படைந்தோருக்குத் தகுந்த நிவாரண உதவி அளிக்கப்பட வேண்டுமென்றும் ஆசிட் வீசியவரைத் தண்டிக்கும் வகையிலும் உரிய சட்டத் திருத்தங்கள் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பல்வேறு மாநிலங்களில் பெண்கள் மீது ஆசிட் வீசுவது அதிகரித்து வருகின்றது. ஆசிட் ஒரு ஆயுதமாகி வருவதால், அதிலும் குறிப்பாகப் பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அதன் விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று லக்ஷ்மியின் வழக்கறிஞர் அபர்ணா பட் கூறியுள்ளார்.
இந்த மனு மீது ஏற்கெனவே 2011-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆசிட் விற்பனையைக் கட்டுப்படுத்துவது, ஆசிட் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்வது குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மீண்டும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி, ஆசிட் விற்பனைக் கட்டுப்பாடு குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு திட்டத்தை வகுக்க இயலுமா என்று உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.
ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு உதவித் தொகை, இதர நிவாரணம், மறுவாழ்வு ஆகியவற்றை வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
சட்ட கமிஷன் இது பற்றி அளித்த அறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் தரப்பட்டது என்றும் தேசிய மகளிர் ஆணையம் ஒரு வரைவு மசோதாவைத் தயாரித்திருக்கிறது என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களுக்குத் தகுந்த நிவாரணமும் உரிய நிதி உதவியும் அளிக்கும் விதமாக ஒவ்வொரு மாநிலமும் சட்டமியற்ற வேண்டும். இந்த சட்டத் திருத்தம் 2009 டிசம்பர் 31-ம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளபோதிலும் எந்த மாநிலமும் இதுவரை எந்த நிவாரணத் திட்டத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை லக்ஷ்மியின் மனு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிட் எளிதில் கிடைக்காத வகையில் அதன் விற்பனையைக் கட்டுபடுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஏ.ஆர்.தவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.

16/08/2012

ஜல்லிக்கட்டு கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

புது தில்லி, ஜூலை 24: தமிழகத்தில் ஜல்லிக்கட்டின்போது நடந்த கொலை தொடர்பானவழக்கில் கொலையாளிக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
கடந்த 2000-ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டின்போது, சங்கர் என்பவர் காளையை அடக்கி பரிசை வென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளையின் சொந்தக்காரர் ஆறுமுகம் 5 நபர்களுடன் சேர்ந்து சங்கரை கொலை செய்துள்ளார்.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம், ஆறுமுகம் மற்றும் சக்திவேல் ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், சக்திவேலை விடுதலை செய்தது.
எனினும், ஆறுமுகத்துக்கான தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகம் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த, ஸ்வதந்தர் குமார் மற்றும் இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆறுமுகத்தின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது.
தான் கொலை செய்யவில்லை என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கொலைக்கான ஆதாரம் தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், ஆறுமுகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை உறுதி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வீரர்களின் உயிருக்கும் காளைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்குத் தேவையான கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

16/08/2012

பள்ளி மாணவிகள் பலாத்காரம்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி, ஜூலை 16: மத்தியப் பிரதேசத்தில் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இரண்டு பள்ளி மாணவிகளுக்கு நஷ்ட ஈடு அளிப்பது தொடர்பாக அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள பேட்மா நகரில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த இரண்டு மாணவிகளை 18 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இந்த கொடூரமான குற்றம் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு, சி.டி.யாக வெளியிடப்பட்டது. பின்னர் இணையதளத்திலும் இது பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்தச் செய்தியை ஊடகங்கள் வாயிலாக அறிந்த சத்யபால் ஆனந்த் என்ற முதியவர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.7.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடுமாறு கோரி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக அரசுக்கு உத்தரவிட மறுத்து விட்டது.
இதை எதிர்த்து, சத்யபால் ஆனந்த், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதை நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி.லோகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் திங்கள்கிழமை விசாரித்தது. இது தொடர்பாகப் பதிலளிக்குமாறு மத்தியப் பிரதேச அரசு, இந்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸýக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

16/08/2012

போதைப்பொருள் சோதனை: விதிமுறைகளை பின்பற்ற உச்ச நீதிமன்றம் அறிவுரை

புது தில்லி, ஜூன் 28: போதைப் பொருள் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுவோரிடம் மாஜிஸ்திரேட் அல்லது அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரி முன்னிலையில்தான் போலீஸôர் சோதனை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கஞ்சா வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஃப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை வழங்கியது.ஆந்திரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு, ராம்பாபு, முரளிகிருஷ்ணா ஆகியோர் கஞ்சா வைத்திருந்ததாக போலீஸôர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த முதன்மை நீதிமன்றம், அவர்களுக்கு 6 மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதித்தது. இதை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து வெங்கடேஸ்வரலு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில், தன்னை கைது செய்தபோது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:÷போதைப் பொருள் தடுப்புச் சட்டம் பிரிவு 50-ஐ போலீஸôர் பின்பற்ற வேண்டும். வெங்கடேஸ்வரலு உள்ளிட்ட 3 பேர் விஷயத்தில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படாததால், அவர்களை விடுதலை செய்து உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

16/08/2012

பாட்னா:தன்னிடம் சிகிச்சை பெற வந்த நோயாளியின் விதைப்பையை, அவரின் சம்மதம் இல்லாமல் நீக்கிய டாக்டர், 1 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என, பீகார் மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம், பிக்தா பகுதியைச் சேர்ந்த ஒருவர், அம்மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது: என் விதைப்பையில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக, பிக்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில், 2010ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி சேர்ந்தேன். அதே நாளில், எனக்கு விதை வீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, மருத்துவமனையின் டாக்டர் வலியுறுத்தினார். அதற்கு நானும் சம்மதித்தேன். அறுவை சிகிச்சையின் போது, என்னுடைய சம்மதம் இல்லாமல், என் விதைப்பையை டாக்டர் நீக்கிவிட்டார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்ற பின்னரே எனக்கு இந்த விவரம் தெரியவந்தது. பின்னர், பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, அதிக பொருட்செலவில் வேறு சீரமைப்பு சிகிச்சைகளை மேற்கொண்டேன்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை பரிசீலித்த பீகார் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் எஸ்.என்.ஜா பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:
மனுதாரரின் குழந்தை பெறும் உரிமையைப் பறிக்கும் வகையில் டாக்டர், அவரின் சம்மதம் இல்லாமல் விதைப்பையை நீக்கியுள்ளார். இது, மனித உரிமைகளை மீறிய செயலாகும். இதன் மூலம் மனுதாரருக்கு மிகுந்த மன உளைச்சலையும் டாக்டர் ஏற்படுத்தியுள்ளார். அதனால், மனுதாரருக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாயை, ஒரு மாத காலத்திற்குள் டாக்டர் வழங்க வேண்டும் என்றார்.

16/07/2012

Address

11/123, Bye-Pass Road
Chennai
601201

Telephone

9629413013

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Satta Sudar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share