Tamil makkal katchi - தம்பி .தேவேந்திரன்.

  • Home
  • India
  • Chennai
  • Tamil makkal katchi - தம்பி .தேவேந்திரன்.

Tamil makkal katchi  - தம்பி .தேவேந்திரன். Founder -president. - advocate -Highcourt.
நிறுவனர் -தலைவர் -வழக்கறிஞர்.உயர்நீதி மன்றம் .

09/09/2022

எத்தனை மரணம் :
அத்தனையும் தற்கொலை தான்..! என முடிச்சு போடுகிறது

மர்மம் அவிழ்த்து "கொலை"என சொல்ல மறுக்கிறது...!

நீட் "தேர்வு உயிரை பறிக்கிறது..!

நீட்"பயிற்சி மையம் பணம் பறிக்கிறது...!

நீட்"தேர்வு மையம் "மானத்தை பறிக்கிறது..!

அன்று "சாதிய வன்கொடுமை" உரிமையை பறித்தது..!

இன்று "பாலியல் வன்கொடுமை "உயிரையும் சேர்த்து பறிக்கிறது..!

இத்தனை "டோல்கேட்"(Tollgate) கடந்தால் தான் மருத்துவம் ..!

இவண்
வழக்கறிஞர்
தம்பி,ச,தேவேந்திரன்
B,com,,Dip,BM.,MSW,BL..
நிறுவனர்-தலைவர்
தமிழ் மக்கள் கட்சி

05/09/2022

மாநகராட்சியும் - மக்கள் பேச்சும் :

தோண்டும் பணியில் -சுருட்டும் அதிகாரிகள் ...!

சென்னையை -குப்பை இல்லாத நகரம் ஆக்குவோம் -மாநகராட்சி ..!

குப்பை தொட்டியில்லாத -தெருகள் ஆக்குங்கள் - மக்கள் பேச்சு ..!

சென்னை முழுவதும் தோண்டி போட்டு ,,,
சாலைகள் சேதாரம் ,,,
ஆம்,,அதனால் தான் ,,
காசோலை ஆதாயம் ...!

விளைவு ,,,
இம்முறை மழை வெள்ளம் கொல்வதைவிட,,

மழைநீர் வடிகால்வாய் பள்ளம் அதிகம் கொல்லும் ..!

இவண்
வழக்கறிஞர்
தம்பி.ச.தேவேந்திரன்
B,com,,Dip,B.M,,MSW,BL,,
நிறுவனர்-தலைவர்
தமிழ் மக்கள் கட்சி

02/09/2022

அரசு ஆசிரியர்களின் அதிகப்படி ஊழியம் தான் ...! -

அனைத்து அட்டுழியத்திற்கு காரணம் ..!

ஆசிரியர்களின் ஊதிய உயர்வு மட்டும் ,,
கல்வி தரத்தை உயர்த்தி விடாது ..!

ஒழுக்கம் கற்றுத் தர வேண்டிய ஆசிரியர்களிடத்தில்
-அது ,,,
ஒரு விழுக்காடுகூட இல்லை ..!

அகவிலைப்படி வாங்கும் ஆசிரியர்கள் மத்தியில் ,,

அன்றாட கூலியாக திண்டாடும் "
தொகுப்பு ஊதிய "ஆசிரியர்கள் இருப்பதை ,,,

கருத்தில் கொள் ..!
அரசே ,,!

இவண்
வழக்கறிஞர்
தம்பி .ச.தேவேந்திரன்
B,com,,Dip,BM,,MSW,BL,,
நிறுவனர்-தலைவர்
தமிழ் மக்கள் கட்சி

28/08/2022

ஏழை மாணவர்களின் கண்ணீர் வற்றாத தொப்பக்குளம் ....!
வருந்தப்படாத வாலிபர் சங்கம் ..,..!

பத்திரிகைகளே ஃபெயிலாகி -பல ஆண்டாகிறது..!

இதில் அமைச்சர் பெயில் "அட்டை படம் ...!
அடுத்து அமைச்சர் அரியர் -என வரும் -இது ஒரு வசூல் ..!

நம் ஆதங்கம் ,,
மிதிவண்டி,கணிணி -காலணி -இலவச கல்வி உபகரணங்கள் உரிய நேரத்தில் வழங்க வேண்டும் ..!

அரசு பள்ளிக்கூடம் -நாட்டின் பெருமையென முழங்கிய அமைச்சரின் பொன்மொழி--
பொய்யாமொழி"ஆக காக்க வேண்டும் ...!

இவண்
வழக்கறிஞர்
தம்பி,ச,தேவேந்திரன்
B,com,,Dip,BM,MSW,BL,,
நிறுவனர்-தலைவர்
தமிழ் மக்கள் கட்சி

25/08/2022

கள்ளக்குறிச்சியில்-
காலி பாத்திரமும் - காவி பாத்திரமும் ,,,
காண கூடாத காட்சியும் ...!

ஆம் ,,,,
கள்ளக்குறிச்சி- கல்வராயன்மலை அரசுப்பள்ளியில் மதிய உணவின்றி "காலி பாத்திர"காட்சி ..!

கள்ளக்குறிச்சி -கனியாமூர் தனியார் பள்ளியில் - மாணவியின் மரணத்திற்கு நீதியின்றி "காவி பாத்திர"காட்சி ..!

காமராசரின் மதிய உணவு :
எம்.ஜி,ஆரின் சத்து உணவு :

குறிஞ்சி மலர் ஆட்சியில் பஞ்ச உணவு -நெஞ்சம் பதறுகிறது...!

இவண்
வழக்கறிஞர்
தம்பி.ச.தேவேந்திரன்.
B,com,,Dip,BM,,MSW,BL,,
நிறுவனர்- தலைவர்
தமிழ் மக்கள் கட்சி

18/08/2022

வேலியே பயிரை மேய்கிறது

அன்று :
காஞ்சிபுரம் நகை வங்கி -பொருளதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ..!

இன்று :
அரும்பாக்கம் நகை வங்கி கொள்ளையில் அச்சரபாக்கம் ஆய்வாளர் : தொடர்பு :

காக்கி சீருடை - கறுப்பு சீருடை -பள்ளி சீருடை- எல்லாம் ,,
சாதி ஆடையாகி - அதுவே அடையாளமாகி ,,,

இயற்கை நீதிக்கு இரங்கல் பாடுகிறது..!

ஏழைகளுக்கு கல்வி கூடாது என்கிறது - அரசு நிர்வாகம் ..!

ஏழையாக பிறந்த மாணவிகளுக்கு கற்புக் கூடாது என்கிறது -தனியார் பள்ளி நிர்வாகம் ...!

இரண்டுமே கர்வம் தான் :

இவண்
வழக்கறிஞர்
தம்பி.ச,தேவேந்திரன்
B.com,,Dip,BM,,MSW,,BL,,
நிறுவனர்-தலைவர்
தமிழ் மக்கள் கட்சி

16/08/2022

குடிசையிலும் கொடி ஏற்றுங்கள் :
ஆனால் ,
சென்னையில் குடிசைகள் இருக்க விடமாட்டோம் ..!

விவசாய நிலத்திலும் கொடி ஏற்றுங்கள் :
ஆனால் ,,
விளைநிலம் - வீட்டு மனையாவதை தடுக்க மாட்டோம் ..!

பெட்ரோல் -டீசல் -எரிவாயு விலை ஏற்றுவோம் :
விலைவாசியும் ஏற்றுவோம் ..!

ஆனால் ,,விளையும் நெல்லுக்கு விலை ஏற்ற மாட்டோம் ..!

விருப்பம் போல் சந்தையில் விற்கவும் விட மாட்டோம் :

கோவனம் தான் விவசாயின் சொத்து ..!
இருந்தாலும் கொடி ஏற்றினால் தான் -தேசப்பற்று..!

இவண்
வழக்கறிஞர்
தம்பி .ச.தேவேந்திரன்
B,com,,Dip,BM,,MSW,BL
நிறுவனர்-தலைவர்
தமிழ் மக்கள் கட்சி

11/08/2022

பரந்தூரும் -பறக்கும் ஊர்தியும் ,,,

புதிய விமான நிலையம் அமையும் ஊர் :

இருண்ட வாழ்வு என,,
திரண்ட மக்கள் ,,,

குண்டு போட்டு கொல்வது மட்டுமல்ல ,,
இதுபோன்ற ,,,
திட்டம் போட்டு விரட்டுவதும் ,,படுகொலை தான் ..!

சாலை விரிவாக்கம் -புதிய உருவாக்கம் ,,
ஏதுவாகிலும்,,
முதலில் கையாகப்படுத்துவது
விவசாயிகளின் விளைநிலம் தான் ..!

தரிசு நிலம் எல்லாம் - கல்வி தந்தைகளுக்கு பரிசு ..!

வான் ஊர்தி எதிர்க்கும் ,-ஊர்க்கு அமரர் ஊர்தி தான் பரிசு ..!

இவண்
வழக்கறிஞர்
தம்பி.ச.தேவேந்திரன்
B,com,,Dip,BM,,MSW,,BL,,
நிறுவனர்-தலைவர்
தமிழ் மக்கள் கட்சி

06/08/2022

நெல் மூட்டையும் - கரு முட்டையும் ,,,

இரண்டுக்கும்
கார்ப்பரேட்டுகள் தான் -விலை நிர்ணயிப்பு,,,

நெல் மூட்டைகள்,,,
வெயிலிலும் - மழையிலும்,,
கிடங்கின்றி - அடக்க விலையின்றி ,,,

திறந்தவெளி சந்தையில் கிடக்கிறது .,,!

கருமுட்டை ,,,
மருத்துவ சந்தையில் ,,
விலைப் பற்றி கவலையின்றி விற்பனையாகிறது..!

கள்ள சந்தையில் ,,,
கத்தை கத்தையாக பணம் எண்ணுகிறார்கள்..!

உழவர் சந்தையில் ,,,
உழவன் கந்தை துணியால் ,,கண்ணீர் துடைக்கிறான்..!

இது தான் -நவீன விஞ்ஞானத்தின் விபரீதம்..!

இவண்
வழக்கறிஞர்
தம்பி.ச.தேவேந்திரன்.
B.com,,Dip.BM,,MSW,,BL.,
நிறுவனர்-தலைவ
தமிழ் மக்கள் கட்சி

03/08/2022

தண்டோரா முறை ஒழிப்பு - வரவேற்பு தான் ..!

அதுபோல ,
சாலையோர -தெருவோர கடைகளில் "தண்டல் "வசூலிக்கும் முறையும் ஒழிக்க வேண்டும் ..!

அன்று ,
காவலர்கள் மட்டும் தான் -கையேந்துவார்கள்,,,

இன்று ,
கவுன்சிலர்களும் -அதில்
அடக்கம் ..!

முதலில் ,,,
இந்த "தண்டம் "ஒழிக்க வேண்டும் ..!

கண்டம் விட்டு ,,,கண்டம் துரத்தினாலும்.,
கவுன்சிலர்கள் -
மாற மாட்டார்கள்..!

கார்ப்பரேசன் அதிகாரிகள் மாற விட மாட்டார்கள் ..!

இவர்களுக்கு" தண்டோரா போடு,,,,
இல்லையேல் "கைவிலங்கு போடு..!

இவண்
வழக்கறிஞர்
தம்பி.ச.தேவேந்திரன்
B,com,,Dip,B,M,,MSW, B,L,,
நிறுவனர்-தலைவர்
தமிழ் மக்கள் கட்சி

Address

Chennai
600094

Telephone

+919962658388

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil makkal katchi - தம்பி .தேவேந்திரன். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share