Sai Associates Legal Firm

Sai Associates Legal Firm Sai Associates is a full service law firm in India that provides legal advisory, transactional legal services.

provides legal advisory, transnational legal services. Everyone comes across certain situations once in a while where normal modes for overcoming problems are not a viable option. Whether it is a normal business transaction or a simple dispute, a legal professional array of expecost-effective remedy to complications.

17/09/2021
13/10/2018

வக்கீல்
=======
அட்வகேட்:
---------------
இந்த வார்த்தையானது லத்தீன் மொழி வார்த்தை. லத்தீன் மொழியில், "உதவிக்கு வருபவர்" என்று நேரடி அர்த்தமாம்.

இதற்கு முன், பாரிஸ்டர் படிப்பு படிக்காமல் கீழ்கோர்ட்டுகளில் சிறிய பிரச்சனையுள்ள வழக்குகளைநடத்தும் வக்கீலை மட்டுமே 'வக்கீல்' என்பர். நம்ஊர்களில், பழங்காலத்தில், அவரைத்தான் 'நாட்டு வக்கீல்' என்று சொல்வர்.

1961ல் வக்கீல்கள் சட்டம் வந்தது. அதன்பின், எந்த வக்கீலாக இருந்தாலும், அட்வகேட், பாரிஸ்டர், லாயர் என்ற எல்லாப் பெயர்களையும் விட்டுவிட்டு, ஒரே பெயரில் 'அட்வகேட்' (Advocate) என்றே அழைக்க வேண்டும் என்று அந்த சட்டம் சொல்கிறது.

அடுத்தவர் பிரச்சனைக்கு வக்காலத்து வாங்கி வாதாட வருபவரே வக்கீல். சமுதாயத்தில், அட்வகேட் என்னும் வக்கீல் என்பவர்கள் "படித்த, அநியாயத்தை தட்டிக் கேட்கும் துணிச்சலான போர்வீரன் போன்ற, நட்புள்ள, ஜென்டில்மேன்" என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது.

ஒரு வக்கீலுக்குறிய குணங்கள்:
--------------------------------------------------
1. கோர்ட்டில் எந்த சூழ்நிலையிலும் தன் உணர்வை இழக்காமல் இருக்கவேண்டும். கோபமே படக்கூடாது. தனக்கு சாதகமாக தீர்ப்பு இருந்தாலும், தனக்கு எதிராக இருந்தாலும் கோபமே காண்பிக்கக் கூடாது.

2.கோர்ட் அறையை ஒரு புனித இடமாகவே கருத வேண்டும்.

3. நீதிபதியை மிகவும் மதிக்க வேண்டும், மரியாதை கொடுக்க வேண்டும்.

4. நீதிபதி அந்த இருக்கையில் (சீட்டில்) இருப்பதால் மட்டுமே அந்த இடத்துக்கு மதிப்பை கொண்டு வருகிறவர். எனவே அந்த பதவிக்குறிய மதிப்பை வக்கீல் கொடுக்க வேண்டும்.

இவ்வளவு கண்ணியம் வாய்ந்த அந்த தொழிலை அதைச் செய்யும் வக்கீலே காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது.

கண்ணியமுள்ள வக்கீல் என்பது பயப்படும் வக்கீல் என்பதல்ல. தரக்குறைவான காரியங்களை செய்யாமல், நீதியை நிலைநாட்ட சட்டபூர்வமான அனைத்து செயல்களையும் செய்யும் துணிச்சல் இருக்க வேண்டும்.

26/06/2015

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக !!!
1.உரிமம் இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine.
2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine.
3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine.
4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine.
5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine.
6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine
மற்றும் செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine.
7.குடிபோதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court fee
8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine.
9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine
10.அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine.
11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine.
12.காற்று ஒலிப்பான் .பல்லிசை ஒலிப்பான் section 190 (2) .Rs.50 fine.
13.பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine.
14.அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடையுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine.
15.காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine.
16.வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine.
17.போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் section 201 .Rs.50 fine
சமூக ஆர்வலர்களுக்கு சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வும் அவசியமான ஒன்றாகும்.
மேலும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் (Right to Information) குறித்தும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

14/10/2014

இந்திய தண்டனைச் சட்டங்கள்

இந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்:
இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம்
இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள்
இ.பி.கோ. 53 முதல் 75 வரை தண்டனைகள்
இ.பி.கோ. 76 முதல் 106 வரை தனியார் பாது காப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்
இ.பி.கோ. 107 முதல் 120 வரை உடந்தை
இ.பி.கோ. 120எ முதல் 120பி வரை குற்றவியல் சதி
இ.பி.கோ. 131 முதல் 140 வரை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதி ரான குற்றங்கள்
இ.பி.கோ. 161 முதல் 171 வரை அரசு ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 172 முதல் 190 வரை அரசாங்க ஊழியர்களின் சட்டப் பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்
இ.பி.கோ. 191 முதல் 229 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 230 முதல் 263 வரை நாணயம் மற்றும் அரசு அஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 264 முதல் 267 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யானஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 268 முதல் 294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்
இ.பி.கோ. 295 முதல் 298 வரை பொது மதம் தொடர்பான குற்றங் கள்
இ.பி.கோ. 299 முதல் 377 வரை 1. கொலை குற்றத்துக்குரிய படுகொலை
(பிரிவு 299 முதல் 311) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச் செய்கின்ற குற்றங்களை
2. கருத்சிதைவு தொடர்பான குற்றங்;கள் (பிரிவு 312 முதல் 318)
3.காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை(பிரிவு 339 முதல் 348)
5.குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)
6.கடத்தல் அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் வலியுறுத் தல் (பிரிவு 359 முதல் 374)
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு 375 முதல் 376)
இ.பி.கோ. பிரிவு 299 முதல் 377 மனித உடல் பாதிக்கும் குற்றங்கள்:
1. மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் அதாவது கொலை, குற்றத்துக் குரிய படுகொலை உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்ற ங்களுக்கு (பிரிவு 299 முதல் 311)
2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்களுக்கு (பிரிவு 312 முதல் 318)
3. ஒருவரை காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை (பிரிவு 339 348 போன்ற)
5. குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)
6. கடத்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் செய்ய வலியுறுத்தல் (பிரிவு 359 முதல் 374)
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு 375 முதல் 376)
8. செயற்கை குற்றங்களுக்கு (பிரிவு 377)
இ.பி.கோ. பிரிவு 378 முதல் 462 சொத்து தொடர்பான குற்றங்கள்:
1. திருட்டு (பிரிவு 378 முதல் 382)
2. பலாத்காரம் (பிரிவு 383 முதல் 389)
3. திருட்டு மற்றும் கொள்ளை (பிரிவு 390 முதல் 402)
4. சொத்து குற்றவியல் மோசடி (பிரிவு 403 முதல் 404)
5. குற்றவியல் நம்பிக்கை துரோகம் (பிரிவு 405 முதல் 409)
6.திருடிய சொத்து பெறுவது (பிரிவு 410 முதல் 414)
7. ஏமாற்றுதல் (பிரிவு 415 முதல் 420)
8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல் (பிரிவு 421 முதல் 424)
9. குறும்புகள் (பிரிவு 425 முதல் 440)
10. குற்ற மீறல் பற்றிய செயல்கள் (பிரிவு 441 முதல் 464)
ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள் (பிரிவு 463 முதல் 489 வரை)
சொத்து (பிரிவு 478 முதல் 489)
நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை (பிரிவு 489எ வேண்டும் 489இ)
இ.பி.கோ. பிரிவு 490 முதல் 492 வரை சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்:
கணவன் அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தப்படுதல் (பிரிவு 498 (a) (குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்ு)
மான நஷ்ட வழக்குகள் (பிரிவு 499 முதல்502 வரை)
சட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு (பிரிவு 503 முதல் 510 வரை)
குற்றம் செய்ய முயல்வது. (பிரிவு 511)
சட்ட சீர்திருத்தங்கள்
1, பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினர் நியாயமான உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அந்த பகுதியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரியதடையாக இருந்து வந்தது. ஆனால் ஜூலை 2 2009 முதல் டில்லி உயர் நீதி மன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கா ன விளக்கம் கொடுத்தது. இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரஸ்ப்பர ஒப்புதலுள்ள பாலியல் உடலுறவு சட்டம் தண்டிக்க பயன்படுத்த முடியாது என்றது.
2. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனை வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து.
3 பிரிவு 497ன் கீழ் மற்றொரு நபர்கள் மனைவியுடன் ஒபபுதலுள்ள உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.

13/10/2014

Sai Associates is a full service law firm in India that provides legal advisory, transactional legal services. provides legal advisory, transnational legal services.

Address

Chennai
600069

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Sai Associates Legal Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share