Prem Law firms

Prem Law firms Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prem Law firms, Chennai.

In Villupuram
14/04/2026

In Villupuram

07/02/2026
04/02/2026

#அரசு_ஊழியர்களுக்கு_எதிராக_வழக்கு_போடுவது

அரசு ஊழியருக்கு எதிராக வழக்கு போடுவது எப்படி? | BNSS 175(3), 175(4) – Supreme Court தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள்..

SP-ஐ அணுகாமல் Magistrate-க்கு போகலாமா? | Affidavit கட்டாயமா? | அரசு ஊழியர் மீது புகார் – புதிய Rule Explained

அரசு ஊழியர் மீது புகார் கொடுக்க நினைக்கிறீர்களா? Magistrate-க்கு நேரடியாக மனு கொடுக்க முடியுமா? SP (Superintendent of Police)-ஐ அணுகாமல் வழக்கு தொடர்ந்தால் என்ன ஆகும்?

Supreme Court வழங்கிய சமீபத்திய தீர்ப்பில், BNSS Section 175(3) & 175(4) கீழ் அரசு ஊழியருக்கு எதிராக புகார் கொடுக்கும் போது பின்பற்ற வேண்டிய கட்டாய சட்ட நடைமுறைகளை தெளிவாக விளக்கியுள்ளது.

🔹 அரசு ஊழியர் மீது புகார் கொடுக்க Affidavit கட்டாயமா?
🔹 SP-ஐ அணுகாமல் Magistrate-க்கு போனால் Case Cancel ஆகுமா?
🔹 Magistrate வாய்மொழி புகாரின் அடிப்படையில் விசாரணை உத்தரவிட முடியுமா?
🔹 BNSS 175(4) – மக்கள் அறியாத முக்கிய சட்ட உண்மை
🔹 அரசு அதிகாரி மீது வழக்கு போட Supreme Court வகுத்த வழிகாட்டு நெறிமுறைகள்

⚠️ சட்ட நடைமுறையை தவற விட்டால் உங்கள் புகார் தள்ளுபடி ஆகலாம்!

IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 4629 OF 2025
[ARISING OUT OF SLP (CRIMINAL) NO. 5175 OF 2025]

04/02/2026

காவல் நிலையத்தில் புகைப்படம் & வீடியோ எடுத்த நபர் மீது Official Secrets Act, 1923 Sec.3 இல் போடப்பட்ட FIR ஐ ரத்து செய்தது மும்பை ஐகோர்ட்...

பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.25,000/- நிவாரணம் வழங்க காவலர்களுக்கு உத்தரவு ..

IN THE HIGH COURT OF JUDICATURE AT BOMBAY
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL WRIT PETITION NO.3894 OF 2022

04/02/2026

உஷார்! DTCP அப்ரூவல் இருந்தாலும் இனி நிலம் வாங்க முடியாது? இதோ தமிழக அரசின் சூப்பர் 'லாக்' சிஸ்டம்

நில வகைப்பாடு குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழகம் முழுவதும் உள்ள நிலங்களின் பயன்பாட்டை முறைப்படுத்தவும், நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களைப் பாதுகாக்கவும் விரிவான "நில வகைப்பாடு தகவல் அமைப்பு" ஒன்றை உருவாக்க திட்டக்குழு பரிந்துரைத்துள்ளது. இதுதான் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. என்ன காரணம்?

முதலில் நில வகைப்பாடு என்றால் என்ன என்பதை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.. நில வகைப்பாடு தகவல் தொகுப்பு என்பது ஒரு நிலத்தின் சட்டப்பூர்வமான தன்மை மற்றும் அதன் தற்போதைய பயன்பாட்டை துல்லியமாக வரையறுக்கும் ஒரு டிஜிட்டல் ஆவணமாகும்.

நில வகைப்பாடு தகவல் அமைப்பு

இது வெறும் நில அளவீடு மட்டுமல்லாமல், அந்த நிலம் நன்செய் அல்லது புன்செய் விவசாய நிலமா, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலமா, நீர்நிலையா அல்லது வனப்பகுதியா போன்ற விவரங்களை எல்லாவற்றையும் உள்ளடக்கியது...

இந்தத் டேட்டாபேஸ் உருவாக்கப்படுவதால் நில நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுவதுடன், பொதுமக்கள் நிலம் வாங்கும்போது ஏற்படும் ஏமாற்றங்கள் மற்றும் சட்ட சிக்கல்கள் தவிர்க்கப்படும்.. குறிப்பாக, ஒரு நிலம் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற "மண்டல வகைப்பாடு" இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

நில வகைப்பாடு - புதிய வசதிகள்

கடந்த 2024ல் இது பற்றின ஒரு அறிவிப்பு வெளியானது.. அதாவது, தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் 56 நகரங்களில் நில வகைப்பாடு குறித்த தகவல்களை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் புதிய வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

நகரமயமாக்கல் தீவிரமடைந்து வரும் நிலையில், விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதை கண்காணிக்கவும், அங்கீகரிக்கப்படாத மனைகளை மக்கள் வாங்குவதை தடுக்கவும் இந்தத் தகவல் தொகுப்பு ஒரு கேடயமாகவே செயல்பட்டது என்று சொல்லலாம்..

இது நிர்வாக ரீதியாக பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்ததோடு, நிலப் பயன்பாட்டு மாற்றங்களுக்கான விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்கவும் அரசுக்கு உதவியதை இங்கு நாம் நினைவூட்ட வேண்டி உள்ளது..

திட்டக்குழு - தரமான சம்பவம்

இப்படிப்பட்ட சூழலில்தான் அடுத்த குட்நியூஸ் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.. அதாவது தமிழகம் முழுவதும் உள்ள நிலங்களின் பயன்பாட்டை முறைப்படுத்தவும், நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களைப் பாதுகாக்கவும் விரிவான "நில வகைப்பாடு தகவல் அமைப்பு" ஒன்றை உருவாக்க திட்டக்குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த அமைப்பு வெறும் தரவுத்தளமாகச் செயல்படாமல், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களை ஒருங்கிணைத்து செயல்படுமாம்,.. இதன் மூலம் மாநிலத்தின் எந்த பகுதியில் நிலப் பயன்பாடு மாறினாலும் அதை உடனுக்குடன் கண்டறிய முடியும்.

நீர்நிலைகள் பாதுகாப்பு - பயன்கள்

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன தெரியுமா? நீர்நிலைகளை பாதுகாப்பதாகும். பல இடங்களில் ஏரிகள் மற்றும் குளங்கள் நில ஆவணங்களில் மறைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்படுகின்றன.,.. ஆனால் ,இந்த புதிய தகவல் அமைப்பு அமலுக்கு வரும்போது, நீர்நிலைகளின் எல்லைகள் டிஜிட்டல் முறையில் உறுதிப்படுத்தப்படும்.. இதனால் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும்.

அதுமட்டுமல்ல, தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான நிலங்கள் எங்குள்ளன, அவை எந்த வகைப்பாட்டில் உள்ளன என்பதை இந்த ஒற்றைச் சாளர முறை மூலம் உடனே அறிந்து கொள்ள முடியும்...

400 சொற்கள்

சுமார் 400 சொற்களில் அமையவுள்ள இந்த விரிவான திட்ட அறிக்கையானது, தமிழகத்தின் எதிர்கால கட்டுமானத் திட்டங்களுக்கு ஒரு வரைபடமாக அமையும். நகர வளர்ச்சி திட்டங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி திட்டங்களை ஒருங்கிணைக்க இது பெரிதும் உதவும் என்றும் நம்பப்படுகிறது...

இதன் மூலம் பொதுமக்கள் வாங்கப்போகும் நிலம் எத்தகையது என்பதை எந்தவித அலைச்சலுமில்லாமல் தெரிந்துகொள்ள முடிவதுடன், அரசின் திட்டமிடல் பணிகளும் வேகம் பெறும்..

ஆக மொத்தம் மாநில திட்டக் குழுவின் இந்த முன்னெடுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது..!!!..

🚀 Take Control of Your IT Career – From Villupuram!Upgrade your skills and step confidently into the IT industry with Sk...
22/12/2025

🚀 Take Control of Your IT Career – From Villupuram!

Upgrade your skills and step confidently into the IT industry with SkillmeUp 💻✨

🎉 Limited-Time Offer: Get 20% OFF on Course Fees
📌 Offer valid for a limited number of bookings only!

🔍 Courses Available:
✅ Full-Stack Development
✅ UI/UX Design
✅ Digital Marketing
✅ AWS Cloud
✅ Graphic Design
✅ Video Editing

🏆 100% Job Placement Assistance
📚 Learn in English & Tamil
📍 Training from Villupuram

👉 Book your spot now and start building your future today!
📞 WhatsApp: +91 79042 27849

04/06/2025

#விற்ற_வாகனம்_இன்னும்_உங்கள் பெயரில்_இருந்தால்_என்ன_செய்வது

நீங்கள் விற்ற வாகனம் இன்னும் உங்கள் பெயரில் இருந்தால், அது உங்களுக்கு சட்டபூர்வமான ஆபத்தை ஏற்படுத்தும். அந்த வாகனத்துடன் தொடர்புடைய விபத்து, சட்டவிரோத செயல், போக்குவரத்து அபராதம் அல்லது வேறு எந்த வழக்குகள் வந்தாலும், அந்த வாகன உரிமர் என உங்களையே பொறுப்பாக்கலாம்.

🔴 வாகனம் மாற்றப்படாமல் இருந்தால் ஏற்படும் பிரச்சினைகள்:

✅ போக்குவரத்து விதிமுறைகள் மீறினால்: உங்கள் பெயரில் அபராதம் விதிக்கப்படும்.
✅ விபத்து நடந்தால்: பாதிக்கப்பட்ட நபர் உங்கள் மீது நீதிமன்ற வழக்கு தொடரலாம்.
✅ குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டால்: போலீசார் விசாரணைக்கு உங்களை அழைக்கலாம்.
✅ புதுக் கிரயதாரர் வாகனத்தை மேலும் விற்றுவிட்டால்: வாகன உரிமை மாற்றமில்லாததால், பின்னர் பலருக்கும் உரிமை மாறியிருந்தாலும் உங்களின் பெயரே அதிகாரப்பூர்வமாக பதிவாக இருக்கும்.

🔎 தீர்வுகள் – நீங்கள் உடனே செய்ய வேண்டியவை

1️⃣ வாகன உரிமை மாற்றம் செய்யுமாறு விற்பவரை வலியுறுத்துங்கள்

நீங்கள் விற்றவரிடம் தொடர்பு கொண்டு உடனே RTO-வில் உரிமை மாற்றம் செய்யுமாறு கோருங்கள்.

அவர்கள் தயங்கினால், உங்கள் பாதுகாப்பிற்காக கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றுங்கள்.

2️⃣ “பசிங் ஓவர்ஷிப் ஸ்டேட்மெண்ட்” மூலம் தகவல் தெரிவிக்கலாம்

நீங்கள் வாகனம் விற்று விட்டதாக RTO அலுவலகத்திற்கு ஒரு எழுத்து மூலம் (Form 28, 29 & 30) தெரிவிக்கலாம்.

இது "Sale Intimation Letter" என அழைக்கப்படுகிறது, இது வாகனம் உங்கள் கையிலிருந்து சென்றுவிட்டது என்பதை அரசு பதிவில் கொண்டுவரும்.

சில மாநிலங்களில் "Non-User Declaration" கொடுத்தால், நீங்கள் அந்த வாகனத்திற்குப் பொறுப்பாக இருக்க மாட்டீர்கள்.

3️⃣ போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம்

வாகன உரிமை மாற்றம் செய்யப்படவில்லை என்றால், நீங்கள் ஒரு எழுத்து மூலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

புகார் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட புகாரின் நகலை (Acknowledgement Copy) பாதுகாக்கவும்.

இது எதிர்காலத்தில் உங்கள் மீது எந்த குற்றப்பத்திரிகையும் வராமல் பாதுகாக்கும்.

4️⃣ வாகன பதிவு ரத்து செய்யலாம் (RC Cancellation)

கடைசி முயற்சியாக, வாகனம் இன்னும் உங்கள் பெயரில் இருந்தால், RTO-வில் உரிமை ரத்து செய்யலாம்.

நீங்கள் அந்த வாகனத்தை இன்னும் பயன்படுத்தவில்லை என்பதற்காக "RC Cancellation" செய்யலாம்.

இதனால், வாகனம் பின்னர் எந்தவொரு சட்டப்பிரச்சினையிலும் பயன்படுத்தப்பட்டாலும், அது உங்கள் மீது பொறுப்பாக இருக்காது.

💡 எதிர்காலத்தில் பாதுகாப்பாக வாகனம் விற்பது எப்படி?

✅ RTO உரிமை மாற்றம் நடந்த பிறகே வாகனத்தை ஒப்படைக்கவும்.
✅ கிரயதாரர் பெயரில் RC (Registration Certificate) மாற்றப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் பெறவும்.
✅ வாகனத்தை விற்பதற்கான கான்ட்ராக்ட் (Sale Agreement) தயார் செய்யவும்.
✅ புரோக்கர் மூலமாக விற்பதை தவிர்க்கவும் – நேரடியாக RTO வாகன உரிமை மாற்றத்தை உறுதி செய்யவும்.

📌 முக்கிய குறிப்பு:

நீங்கள் வாகனம் விற்ற பிறகும், உங்கள் பெயரில் இருந்தால், அது எந்தவிதமான சட்டப்பிரச்சினையிலும் உங்களை துன்புறுத்தக்கூடும். எனவே, உடனடியாக RTO, காவல்துறை, மற்றும் சட்ட வழிமுறைகளை பின்பற்றி உரிமை மாற்றத்தை உறுதி செய்யுங்கள்.

31/05/2025

#பெற்றோர்கள்_மற்றும்_மூத்த_குடிமக்களின்_பராமரிப்பு_மற்றும்நலச்சட்டம்2007

#இந்திய_உச்ச_நீதிமன்றம்

#பிரிவு39

இந்திய உச்ச நீதிமன்றம்

ஊர்மிளா தீட்சித் v/s சுனில் ஷரன்

02 ஜனவரி 2025 # சிவி. மேல்முறையீடு எண். 10927 இன் 2024

பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும்

நலச் சட்டம், 2007-பிரிவு 23-இந்திய அரசியலமைப்பு, 1949-பிரிவு 39-மூத்த குடிமக்களால் சொத்து பரிமாற்றம்- பரிசாக அளிக்கப்பட்ட/விற்ற சொத்தின் உடைமையை மீட்டெடுப்பதற்கான தீர்ப்பாயத்தின் அதிகாரம்-இதற்கான கடமை பெற்றோரைப் பராமரிப்பது என்பது மகன்கள் மற்றும் மகள்கள்-மூத்தவர்களுக்கு ஒரு சமூகக் கடமையாகும் குடிமக்கள்/பெற்றோர்கள் அன்பின் மூலம் சொத்துக்களை மாற்றலாம்-இத்தகைய இடமாற்றங்கள் பெரும்பாலும் அன்பினால் செய்யப்படுகின்றன, பரஸ்பர கடமைகள் பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாதது- புறக்கணிப்பு காரணமாக ஆதரவற்ற நிலையில் உள்ள மூத்த குடிமக்களைப் பாதுகாக்க தீர்ப்பாயம் தலையிடலாம்-இருப்பினும், சந்தர்ப்பங்களில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை, பரிசுப் பத்திரங்கள்/விற்பனைப் பத்திரங்கள் ரத்து செய்யப்படலாம். மூத்த குடிமக்கள்/பெற்றோர்களின் நலன்களைப் பாதுகாக்க, தேவைப்படும்போது வெளியேற்ற உத்தரவிடுவதற்கான அதிகாரம் தீர்ப்பாயங்களுக்கு உள்ளது..

Address

Chennai

Telephone

+919894536494

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prem Law firms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share