Advocate C.Samy

Advocate C.Samy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate C.Samy, Lawyer & Law Firm, Chennai.

நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான,~~~PASSPORT~~~DRIVING LICENCE,~~~PAN CARD,~~~VOTER ID,~~~RATION CA...
21/03/2021

நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான,
~~~PASSPORT
~~~DRIVING LICENCE,
~~~PAN CARD,
~~~VOTER ID,
~~~RATION CARD,
~~~BANK PASSBOOK,
~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.
உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...
ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திடவேண்டாம்...!

வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி ? பொது நல வழக்கு போடுவது எப்படி ?பொதுவாக இரண்டு இடங்களில் பொத...
21/03/2021

வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல்

செய்வது எப்படி ? பொது நல வழக்கு போடுவது எப்படி ?
பொதுவாக இரண்டு இடங்களில் பொது நல வழக்கு போடலாம்.

ஒன்று, கீழ் நீதிமன்றம். இது, மாவட்ட நீதிமன்றம் ஆகும்.
இரண்டு, உயர்நீதிமன்றம்.

இப்போது, கீழ் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போடுவது எப்படி என்று பார்க்கலாம்.

பொதுவாக சார்பு நீதிமன்றத்திலேயே, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

பத்து நபர்கள் இணைந்து வழக்கு போடுவது நல்லது.
இதற்கு முதலில், லீவ் மனு போட வேண்டும். இது, வழக்குடன் இணைந்தது.

முதலில் சிவில் வழக்கு போட, பிராது தயாரிக்க வேண்டும்.

முதலில், நீதிமன்றத்தின் பெயர், அதன் கீழ், ஊர், அதன் கீழ், முதலேற்பு வழக்கு எண் என போட்டு, இடம்விட்டு, எந்த வருடம் தாக்கல் செய்கிறோமோ, அந்த வருடத்தை போட வேண்டும்.

அதன் பின்பு, பத்து பேர் வழக்கு போடுவதாக இருந்தால் அவர்கள் பெயரை, ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள்.
அதற்கு நேராக, வாதிகள் என்று காண்பியுங்கள்.

அதன் பின்பு, எதிரிடை என்று போட்டு, எதிர் பார்ட்டி நபர்கள் பெயரை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள்.
அதற்கு நேராக, பிரதிவாதிகள் என்று காண்பியுங்கள்.
இதன் பெயர், short cause title எனப்படும்.

சிவில் வழக்கில், பிராதை, ஆர்டர் 7, விதி 1 இன் கீழேயே தாக்கல் செய்ய முடியும்.

ஆகையால், இப்போது, வாதி தரப்பில் சமர்ப்பிக்கும், பிராது, ஆர்டர் 7, விதி 1 என்று, நடு மையத்தில் எழுதுங்கள்.

அதன் பின்பு, வாதிகளின் விலாசம் என்று, தலைப்பிட்டு, வாதி வசிக்கும் மாவட்டம், ஊர், தெரு, கதவு இலக்கம், மற்றும், ஹிந்து என்றால், ஹிந்து என்றும், அப்பா பெயர், வயது, அதன் பின்பு, வாதியின் பெயர் என எழுதுங்கள்.
பல பேர் இருந்தால், வரிசையாக ஒன்று, இரண்டு என எழுதுங்கள்.

அதன் பின்பு, வாதிக்கு summon, நோட்டீஸ் அனுப்ப மேலே சொன்ன முகவரி போதுமானது என்று எழுதுங்கள்.

அதன் பின்பு, பிரதிவாதிகளின் விலாசம் என்று தலைப்பிட்டு, மேலே சொன்னது போல, வாதிகளின் முகவரி போலவே, எழுதி கொள்ளுங்கள்.

அதன் கீழ், பிரதிவாதிகளுக்கு summon, நோட்டீஸ் அனுப்ப மேலே சொன்ன முகவரி போதுமானது என்று குறிப்பிடுங்கள்.

இதன் பெயர் லாங் cause டைட்டில் ஆகும்.
இப்போது, அடுத்த பாராவாக, நீதிமன்ற jurisdiction குறிக்க வேண்டும்.

நீங்கள் வழக்கு போடும்ஊர், தாவா நீதிமன்ற எல்லைக்குட்பட்டதால், இந்த வழக்கு இங்கு தாக்கல் செய்யபடுகிறது என்று எழுதுங்கள்.

ஒவ்வொன்றும் ஒரு பாரா ஆகும். இப்போது மூன்று பாரா முடிந்திர்க்கும்.

வழக்கு போடுபவர், வாதி என்று நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

வழக்கின் எதிராளி, பிரதிவாதி ஆவார்.
யார் மேல் பரிகாரம் கோருகிறீர்களோ, அவர்கள் அனைவரையும் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும்.
அடுத்த பாரா, வழக்கு விவரங்களை ஆரம்பியுங்கள்.
வாதியானவர், இந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இப்படி, வழக்கின் சாராம்சத்தை, சுருக்கமாக, பல பாராக்களாக பிரித்து எழுதுங்கள்.

உதாரணமாக, பொது பாதை, இவ்வளவு நாளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது, இன்ன நபர், அதை ஆக்கிரமித்துள்ளார். இதனை தெரிவித்து, எதிர் மனுதாருக்கு, இந்த தேதியில் வாதியால் மனு, பதிவு தபாலில் அனுப்ப பட்டது. அதை பெற்று கொண்டு, இன்று வரை, பிரதிவாதிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காமல், காலம் கடத்தி வருகின்றனர்.

இவ்வாறாக, உங்கள் கரு பொருளை மையபடுத்தி, பிராது விவரங்களை சொல்லுங்கள்.

நீங்கள் அனுப்பிய மனுவின் நகலை தாக்கல் செய்தால், ஒன்றாம் பிரதிவாதிக்கு அனுப்பிய மனு, தபால் ரசீது ஆகியவை வாதி தரப்பு ஒன்றாவது சான்றாவணம் ஆகும் என்று குறிப்பிடுங்கள்.

சட்ட பாயிண்ட் களையும், குறிப்பிடுங்கள்.
அதன் பின்பு, அடுத்த பாராவாக, உங்கள் வழக்கின் வியாச்சிய மூலத்தை எழுதுங்கள்.
அதாவது, எந்த தேதியில் ஆக்கிரமிப்புதாரர்ஆக்கிரமித்தார், எப்போது பிரதிவாதிகளுக்கு மனு செய்யப்பட்டது, இன்று வரை பிரதிவாதிகள் வீண் காலம் கடத்தி வருகிறார்கள், மற்றும், வாதி இருக்கும் ஊர், பிரதிவாதி இருக்கும் ஊர், வழக்கு சொத்து இருக்கும் ஊர் ஆகியவற்றை சொல்லி, இதில் உற்பத்தி என்று காண்பியுங்கள். இது தனி பாரா.
அடுத்து, வாதி, நீதிமன்ற கட்டணமாக TAMILNADU COURT FEES AND SUITS VALUATION ACT பிரிவு, இன் படி, இவ்வளவு பணம் செலுத்துகிறார் என்று எழுதுங்கள்.
அதன் பின்பு, prayer. இதில், நீங்கள் என்ன பரிகாரம் கூறுகிறீர்கள், யார்மீது கூறுகிறீர்கள் என்று சொல்லுங்கள்.

உதாரணமாக, ஒன்றாம் பிரதிவாதி, பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தால், ஒன்றாம் பிரதிவாதியை, இரண்டு, மூன்று பிரதிவாதிகள் தாவா பொது இடத்தில் இருந்து அகற்ற, உத்தரவிடும் படிக்கும்.அதன் பின்பு, வாதிக்கு, பிரதிவாதிகள் வழக்கிடை செலவை தரும்படிக்கும், மற்றும், நீதிமன்றம் கருதும் இன்ன பிற பரிகாரங்களை வழங்கும்படிக்கும், பிரார்திக்கபடுகிறது என்று முடியுங்கள்.

இதில், அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பதால், பிரிவு என்பது, சிவில் procedure code படி, வழக்கு தொடுப்பதற்கு தொண்ணூறு நாட்களுக்கு முன் அறிக்கை அனுப்ப வேண்டும்.
அவசரமாக, இந்த வழக்கை தாக்கல் செய்தால், exemption மனு, பிரிவு, 80(2), civil procedurecode படி, தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த மனு, இந்த பிராதுடன் தாக்கல் செய்திருப்பதாக, பிராதில், சொல்லுங்கள்.
இப்போது, இடது பக்கம் வழக்கறிஞர் கையொப்பமும், வலது பக்கம் வாதிகள் கையொப்பமும் போட வேண்டும்.
அதன் பின்பு, பிராதை எப்படி மதிப்பிடுகிறீர்கள் என்று, particulars ஒப் valuation என்று தலைப்பிட்டு, சொத்து மார்க்கெட் மதிப்பு காட்டுங்கள்.

அதன் பின்பு,TAMILNADU COURT FEES AND SUITS VALUATION ACT பிரிவு, இன் படி, இவ்வளவு பணம் செலுத்துகிறார் என்று எழுதுங்கள்.

அதன் பின்பு, சரி பார்த்தல் என்று தலைப்பிட்டு, மேலே கண்ட சங்கதிகள் எல்லாம் என் அறிவிற்கு எட்டிய வரை உண்மை என சொல்லி, மதுரையில அல்லது எந்த ஊரில் வைத்து, தேதியில் கை எழுத்திட்டேன் என சொல்லுங்கள்.

அதன் பின்பு, சொத்து விவரம் எழுதுங்கள்.
கிரைய பத்திரத்தில் சொத்து விவரம் கொடுத்திருப்பார்களே, அந்த மாதிரி. அதன் பின்பு, மீண்டும், சரி பார்த்தல்என்று மேலே சொன்னவாறு, எழுதுங்கள்.

அதன் பின்பு, மேலே சொன்ன short cause title எழுதி, வாதி தரப்பில் சமர்ப்பிக்கும் ஆவணங்கள், ஆர்டர் ஏழு, விதி பதினான்கின் படி என்று தலைப்பிட்டு, நான்கு column கட்டமிட்டு கொள்ளுங்கள் முதல் column இல், வரிசை என், அடுத்த column இல் ஆவன தேதி, அடுத்த column இல் ஆவன விவரம், அடுத்த column இல் ஆவன தன்மை, அது நகலா அல்லது அசலா என்று காண்பியுங்கள்.

இப்போது, உங்கள் கைவசம் உள்ளல ஆவனங்களை, வரிசையாக ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள்.
அதன் கீழ், இடது பக்கம், ஊர், தேதியும், வலது பக்கம், வழக்கறிஞர் என்று காண்பியுங்கள்.
வழக்கறிஞர் இல்லாவிட்டால்,வாதிகள் என்று காண்பித்து கொள்ளுங்கள்.

அசல் ஆவநங்கள் அனைத்தையும் தாக்கல் செய்யுங்கள். அது முடியாவிட்டால், சான்றிட்ட நகல் தாக்கல் செய்யலாம்.

அதுவும் இல்லாவிட்டால், நகலை தாக்கல் செய்யலாம்.
ஆனால், விசாரணை வரும்போது, அசல் அல்லது சான்றிட்ட நகலைத்தான் தாக்கல் செய்ய வேண்டும்.
அதை, பின்பு கொடுப்பதாக குறிப்பில் காண்பிக்கலாம்.
இந்த ஆவண பட்டியல் தனி தாளில் தயார் செய்து, பிராதுடன் இணைக்கலாம்.

இப்போது பிராது தயார். இதனுடன், நீங்கள் வழக்கறிஞர் வைத்தால், வக்காலத்து வைக்க வேண்டும்.
அதன் பின்பு, ஆவணங்களை, ஒரு தனி தாளில் டாக்கட் போட்டு, தைத்து, அசல ஆவணங்கள தவிர, மற்றவற்றிற்கு, ஐந்து ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்டி கொடுங்கள்.

பிராதின், முதல் பக்கத்தில், valuation சீட் வைக்க வேண்டும். அதன் பின்பு, நீதிமன்ற ஸ்டாம்ப் பேப்பர், அதன் கீழ் பிராது வைத்து தைத்து கொள்ளுங்கள்.
உள்ளே, வக்காலத்து, ஆவணங்கள் ஆகியவற்றை வைக்க வேண்டும்.

சில நீதிமன்றத்தில், வாதி, பிரதிவாதி விலாசம் தனி தாளில் அடித்து வைக்க வேண்டி உள்ளது.

முன்பே சொன்னது போல, shortcause title எழுதி, STATEMENT U/O. VI, RULE 14-A என்று, தலைப்பிட்டு அதன் கீழ், வாதி, பிரதிவாதி விலாசங்கள் எழுத வேண்டும்.
அதன் பின்பு, supporting affidavit. இதுவும், short cause title எழுதி, SUPPORTING AFFIDAVIT FILED BY THE 1st PLAINTIFF ABOVENAMED U/O VI, R. 15(4) OF C.P.C. என்று தலைப்பிட்டு, அதன்கீழ், வாதியின் விலாசத்தை தலை கீழாக எழுதி, பிராதில் வாதியின் விலாசம் எழுதுவீர்களே, அது போல, ஆகிய நான், சத்திய பிரமாணத்தின் பேரில் எழுதி வைத்த அப்பிடவிட் என்று எழுதி கொள்ளுங்கள்.

அதன் பின்பு, நான் வழக்கின் வாதி ஆவேன். எனக்கு வழக்கு விவரங்கள் பூராவும் நன்கு தெரியும் என்று சொல்லி, அடுத்த பாராவில், சுருக்கமாக பிராதின் விவரத்தை சொல்லுங்கள்.

பல வாதிகள் இருந்தால், பிற வாதிகளுக்காக, இந்த அப்பிடவிட் தை தாக்கல் செய்வதாக கூறி கொள்ளுங்கள்.

இறுதியாக, தனி பாராவாக, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள் பிராதுபடி தீர்ப்பளிக்க வேண்டும் என்று முடியுங்கள்.

அதன் பின்பு, இடது பக்கம், மேலே சொன்ன சங்கதிகள் யாவும் உண்மை என சொல்லி, தேதியில், என் முன்பாக, ஊரில் வைத்து கை எழுத்திட்டார் என எழுதுங்கள்.
வலது பக்கம், வாதியின் கையொப்பம் இடுங்கள். அதன் நடுவில், ஒரு வழக்கறிஞரின் attestation வாங்கி கொள்ளுங்கள்.

இப்போது supporting அப்பிடவிட் ரெடி. பிராதின் ஒவ்வொரு பக்கத்திலும், supporting affidavit ஒவ்வொரு பக்கத்திலும், வாதி கையெழுத்து வாங்க வேண்டும்.
அடுத்து, அரசு ஊழியர்கள் மேல் வழக்கு தொடுக்கும் முன், உரிய அறிவிப்பு அனுப்பாவிட்டால், அதற்கும் ஒரு அப்பிடவிட், மனு தாக்கல் செய்ய வேண்டும்.

வழக்கம் போல, short cause டைட்டில் எழுதுங்கள்.
இது தனி இடை நிலை மனு ஆகும். எனவே, லேசாக மாற்றி, நீதிமன்ற பெயர், ஊர் எழுதி, அதன் கீழ், இடைநிலை மனு எண் எனஎழுதி, இடம் விட்டு, பார் போட்டு, 2018என வருடத்தை போட்டு கொள்ளுங்கள்.
இதில், வாதிகள் மனுதாரர்கள் ஆவார்கள். எனவே, வாதிகள் பெயரை எழுதி, மனுதார்கள் / வாதிகள் என்று காண்பித்து கொள்ளுங்கள்.

அதே போல, கீழே, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகள் என்று, அரசு அலுவலர்களை மட்டும் சேர்க்க வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் பொது நல வழக்கு போடும்போது, முதல் பார்ட்டி ஆக, ஆக்கிரமிப்புதாரரை காண்பித்து இருந்தால், இரண்டாம் பார்ட்டிஆக, அரசு அதிகாரிகளை காண்பித்து இருப்பீர்கள்.

இங்கு, அரசு அலுவலர்கள் மட்டும் வருவதால், அவர்களை, இம்மனுவில், எதிர்மனுதார்களாக காண்பிக்கும்போது, வரிசையாக காண்பித்து, அவர்கள் முக்கிய வழக்கில் எந்த cadre ஒ, அந்த cadre காண்பியுங்கள். உதாரணமாக, மாவட்ட ஆட்சியர், முக்கிய வழக்கில் இரண்டாம் பிரதிவாதி என்றால், இங்கு, முதல் எதிர்மனுதாராக காண்பித்து இருந்தால், முதல் எதிர்மனுதார் / இரண்டாம் பிரதிவாதி என்று காண்பியுங்கள்.

இப்போது, அப்பிடவிட் க்கு வருவோம். முதல் மனுதார் / முதல் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யும் அப்பிடவிட்என்று தலைப்பிட்டு கொள்ளுங்கள்.
அல்லது, எந்த மனுதார் வேண்டுமானாலும் அப்பிடவிட் தாக்கல் செய்யலாம்.

வழக்கம் போல, sworn செய்து கொள்ளுங்கள்.
அதாவது, விலாசத்தை தலை கீழாக எழுதி, ஆகிய நான் சமர்ப்பிக்கும் அப்பிடவிட் என்று காண்பியுங்கள்.
அடுத்து. முதல் பாரா, supporting அப்பிடவிட் இல் சொன்னது போல எழுதி கொள்ளுங்கள்.

அதன் பின்பு, ஒவ்வொரு சிறு பாராவாக, வழக்கு இந்த அரசு அதிகாரிகள் மீது உடனே தாக்கல் செய்ய வேண்டி உள்ளதால், அவர்களுக்கு அனுப்ப வேண்டிய அறிவிப்பை, அனுப்ப முடியவில்லை என்று பொருத்தமான காரணத்தை காண்பியுங்கள்.

இறுதியாக, தனி பாராவில், இம்மனுவை அனுமதிக்காது போனால், எனக்கு பெருத்த இழப்பு ஏற்படும். ஆனால், எதிர்மனுதாருக்கு எவ்வித ஆட்சேபனையும் இம்மனு தாக்கல் செய்ய இருக்க போவதில்லை என்று எழுதி கொள்ளுங்கள்.

prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள் கிருபை செய்து, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகளுக்கு அனுப்ப வேண்டிய பிரிவு 80(2) cpc அறிவிப்பை, dispense செய்ய வேணுமாய் பிரார்த்திக்கபடுகிறது என்று முடியுங்கள்.
இங்கும், supportingஅப்பிடவிட் இல் இருப்பது போல முடித்து கொள்ளுங்கள்.

அப்பிடவிட் ரெடி.

இப்போது மனு. இத்துடன் இணைத்துள்ள அப்பிடவிட் short cause title அதே போல எழுதி கொள்ளுங்கள்.
மனுதார் / வாதி தரப்பு மனு பிரிவு 80(2) c.p.c. படி என்று எழுதி கொள்ளுங்கள்.

இத்துடன் இணைத்துள்ள அப்பிடவிட்டில் கண்டுள்ள காரணங்ளால், கணம் கோர்ட்டார் அவர்கள் கிருபை செய்து, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகளுக்கு அனுப்ப வேண்டிய பிரிவு 80(2) cpc அறிவிப்பை, dispense செய்ய வேணுமாய் பிரார்த்திக்கபடுகிறது என்று முடியுங்கள்.
அதாவது, அப்பிடவிட் prayer உம, மனு prayer உம, ஒன்றாக இருக்க வேண்டும்.

நீங்கள் இந்த வழக்கை உடனடியாக தாக்கல் செய்ய, அரசு ஊழியர்களுக்கு உரிய அறிவிப்பைகொடுக்க exemption செய்ய முறையான காரணங்களை சொல்லாவிட்டால், நீதிமன்றம் உங்கள் வழக்கை உடனடியாக கோப்பிற்கு எடுக்காது.

நோட்டீஸ் அனுப்பி விட்டு, மூன்று மாதம் கழித்து தாக்கல் செய்ய சொல்லுவார்கள்.

அடுத்து, லீவ் மனு. அதாவது, நீங்கள் பொது நல மனு தாக்கல் செய்ய, நீதிமன்றந்தில் லீவ் வாங்க வேண்டும்.
இது ஒரு விதமான், அனுமதி ஆகும். இதுவும், இடை நிலை மனுதான். இதற்கும் அப்பிடவிட், மனு வைக்க வேண்டும்.

அப்பிடவிட், ஒருமையில் இருக்க வேண்டும்.
அதாவது, நான், கேட்கிறேன் என்று வர வேண்டும். ஆனால், பிராதோ, வாதி, வாதி கோருகிறார் என்று அந்த நடையில் வர வேண்டும்.

ஒரு பொதுவான நலத்திற்கு எல்லா நபர்களுக்கும் ஒரே நபரே வழக்கு நடத்த, நீதிமன்றம் அனுமதி கொடுக்க வேண்டும்.

அதற்குதான், இந்த மனு. வழக்கம் போல, அப்பிடவிட், இதில் நீங்கள் ஏன் ஒரு நபரே இந்த வழக்கை நடத்த வேண்டும் என்று காரணம் கூற வேண்டும.
அதே போல மனுவை, ஆர்டர் 1, விதி 8 இன் படி தாக்கல் செய்ய வேண்டும்.

prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள், இவ்வழக்கில் ஒன்றாம் வாதியே, பிற வாதிகளுக்காக, இந்த வழக்கை நடத்த, உத்தரவிட வேண்டியது, அவசியமாயும், நியாயமான்யும் உள்ளது எனமுடியுங்கள்.

ஒவ்வொரு இடை நிலை மனுவில் இரண்டு ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்டுங்கள்.

இதன் கீழே, படி மெமோ. அதாவது, பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் வைக்க வேண்டும். பிராது copy, நோட்டீஸ், படி மெமோ, போஸ்டல் கவர் மற்றும், அஞ்சல் ஒப்புதல் அட்டை ஆகியவற்றை வைக்க வேண்டும்.
ஒரு எதிர்பார்ட்டி க்கு உள்ளூர் என்றால் ஐந்து ரூபாய் மற்றும் போஸ்டல் ஸ்டாம்ப் முப்பத்தைந்து ருபாய் ஒட்டுங்கள்.

பிரதிவாதி குடி இருப்பது வேறு நீதிமன்றம் மூலம் போகும் என்றால், கூடுதலாக பத்து ரூபாய், ஒரு நபருக்கு ஓட்டுவது நல்லது, நீதிமன்ற வில்லை. பிராதுக்கு ஒரு டாக்கட் வாங்கி வைத்து, கூடுதலாக நான்கு பச்சை காகிதங்கள் பிராதின் அடியில் வைத்து, பிராது டாக்கட், அதன் மேல் நான்கு கூடுதல் ஷீட்ஸ், அதன் மேல் பிராது, அதன் மேல் கோர்ட் பீஸ், அதன் மேல் valuation சீட் வைத்துதைத்து கொள்ளுங்கள்.

இப்போது, எல்லாம் தயார்.

இனி, இந்த வழக்கை இன்றே, நீதிமன்றம் கோப்பிற்கு எடுக்க வேண்டுமானால், emergent மனு மற்றும் அப்பிடவிட் வைக்க வேண்டும்.

இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் மனுவில் ஒட்டுங்கள். இதை மேலே வைத்து, காலை பத்து முப்பதுக்கு நீதிபதியிடம் சமர்ப்பியுங்கள். இதில், வழக்கு முடியும்வரை, உருத்து கட்டளை வேண்டும் என்றால், அதற்கு தனி அப்பிடவிட், மனு.

மனு ஆர்டர் 39, விதி 1 இன் படி. அப்பிடவிட், வழக்கம் போலதான். அதில் கூடுதலாக, இம்மனுவை அனுமதிக்காது போனால், எனக்கு இழப்பு ஏற்படும். எனக்கு prima facie case and balance of convenience உள்ளது என சேர்த்து கொள்ளுங்கள்.

prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள், எதிர்மனுதார் / பிரதிவாதி, வழக்கு முடியும்வரை, தாவா சொத்தை பயன்படுத்தக்கூடாது என இடைக்கால உருத்து கட்டளை வழங்கும்படிக்கும்,அதன் தொடர்ச்சியாக, இன்று, ஒரு exparte ad-interim injunction இம்மனு முடியும்வரை தரும்படிக்கும், பிரார்த்திக்கபடுகிறது.
இதில் ஒவ்வொரு இடை நிலை மனுவுக்கும், படி மெமோ வைக்க வேண்டும்.

dispense வித் மனுவுக்கு மட்டும் தேவை இல்லை. படி, பிராதில் சொன்ன படிதான்.

ஒரு நபருக்கு ஐந்து ரூபாய். முடிந்தால், ஒரு வழக்கறிஞரிடம் ரெடி செய்து வாங்கி கொள்ளுங்கள். அல்லது நீங்கள் தயார் செய்து, ஒரு வழக்கறிஞரிடம் காண்பித்து கொள்ளுங்கள்.
அதன் பின்பு, file செய்வது நல்லது.
இது ஒரு மாதிரியே.
இதில் நீங்கள் வழக்கை நன்றாக சட்டப்படி எழுதினால்தான், வழக்கு வெற்றி பெற வாய்ப்பு உண்டு.
ஒரே நாளில்நம்பர் ஆகி விடும், சரியாக இருந்தால். இடைக்கால உறுத்து கட்டளையும், அன்றே கிடைக்க வாய்ப்பு உண்டு.

அசல் ஆவணங்களை வைத்தால், அன்றே கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு அப்பிடவிட், மனு ஆகியவற்றுக்கும் டாக்கட் போட்டு கொள்ளுங்கள்.

குண்டர் சட்டம் என்றால் என்ன?சமிப காலங்களில் குண்டர் சட்ட கைதுகள் தொடரும் இந்த நேரத்தில் இதை பற்றி சற்று தெரிந்து கொள்வது...
21/03/2021

குண்டர் சட்டம் என்றால் என்ன?

சமிப காலங்களில் குண்டர் சட்ட கைதுகள் தொடரும் இந்த நேரத்தில் இதை பற்றி சற்று தெரிந்து கொள்வது நல்லது நண்பர்களே

தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், வனக்குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், கள்ளச்சாராயம், போதைப்பொ ருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்து அதன் மூலம் அமைதியை நிலைநாட்டுவதற்கு என்றுக் கூறி 1982-இல் தமிழக அரசால் இயற்றப்பட்டது குண்டர் தடுப்புச் சட்டம் எனப்படும் தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம்.

தமிழகத்தில் நிகழும் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடியவர் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்படுவார்.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவருக்கு எவ்வித நீதிமன்ற விசாரணையுமில்லை என்பதால், கைது செய்யப்பட்டவர் தனது கைது நடவடிக்கைக்கு எதிராக, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுப் பெற்ற நீதிபதி மற்றும் ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட நிர்வாக விசாரணைக் குழு மட்டுமே அணுக முடியும்.
கைதுக்கு எதிரான முறையீடு நிர்வாக விசாரணைக்குழுவால் தள்ளுபடி செய்யப்பட்டால் பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.

திருட்டு வீடியோ, சி.டி குற்றம் ஆகியவை 2004ம் ஆண்டும், மணல் கடத்தல் மற்றும் குடிசை நில அபகரிப்பு ஆகியவை 2006ம் ஆண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.

பின்னர், மேற்கொள்ளப்பட்ட இரண்டு திருத்தங்களில் தொடர் குற்றவாளி என்ற வரையறை நீக்கப்பட்டதுடன், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி கைது செய்யும் வாய்ப்பையும் வழங்குகிறது.

நான் வேலை செய்த நிறுவனத்தில் எனது ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கிக்கொண்டார்கள். இப்போது அதை திரும்ப தர என்னை அழைகழிக்...
21/03/2021

நான் வேலை செய்த நிறுவனத்தில் எனது ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கிக்கொண்டார்கள்.

இப்போது அதை திரும்ப தர என்னை அழைகழிக்கறார்கள். இது சட்டப்படி சரியான செயலா? இதற்கு சட்டத் தீர்வு என்ன?

நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு அவர்களை கட்டாயப்படுத்தியோ அல்லது மிரட்டியோ வேலை செய்ய வைப்பது இந்திய தண்டனை சட்டப்படி கிரிமினல் குற்றமாகும்.

மேலும் இது தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது.

இது போன்ற குற்றச் செயல்களுக்கு கீழ்காணும் பிரிவின் கீழ் வழக்கு பதிவும் செய்ய முடியும்.

IPC-374 : சட்டப்பூர்வமற்ற கட்டாய உழைப்பு
IPC-370 : அடிமையாக வகை செய்தல்
IPC-503 : குற்றமுறு மிரட்டல்
IPC-405 : குற்றமுறு நம்பிக்கை மோசடி.,

மற்றும் பல

நீங்கள் தற்சமயம் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டால் வழக்கறிஞர் மூலம் அந்த நிறுவனத்திற்கு உங்கள் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும் படி நோட்டீஸ் அனுப்பி உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

உச்சநீதி மன்றத்தில் வழக்காட "3" தகுதிகள் தேவை********************************************1) 4 ஆண்டுகளுக்கு குறையாமல் ஏதா...
21/03/2021

உச்சநீதி மன்றத்தில் வழக்காட "3" தகுதிகள் தேவை
********************************************
1) 4 ஆண்டுகளுக்கு குறையாமல் ஏதாவது மாநில பார் கவுன்சிலில் பெயர் பதிவு செய்யப்பட்டு வழக்குரைஞர் தொழில் செய்தவராக இருக்க வேண்டும்.

2) .இந்த 4 ஆண்டுகளோடு சேர்த்து கூடுதலாக ஒரு ஆண்டு, ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பதிவு பெற்ற 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள வழக்குரைஞரிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

3) மேலே கூறப்பட்ட இரண்டு தகுதிகளையும் பெற்ற பின்னர் உச்சநீதி மன்றத்தால் நடத்தப்படும் "Advocate on Record" என்று சொல்லப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

"Advocate on Record"
****************

இந்த தேர்வில் மொத்தம் 4 பாடங்கள் உள்ளது. அவை பின்வருமாறு,..

(100 மதிப்பெண்கள் )1.SUPREME COURT RULES OF PRACTICE & PROCEDURE.

(100 மதிப்பெண்கள்) 2. DRAFTING & PLEADING...

(100 மதிப்பெண்கள்) 3 ACCOUNTANCY FOR LAWYERS.

(100 மதிப்பெண்கள்) 4.LEADING CASES.

தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது "50" மதிப்பெண்கள் பெற வேண்டும்.
4 பாடத்திலும் சேர்த்து குறைந்தது 60% அதாவது 400 க்கு 240 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

இவ்வாறாக தேர்ச்சி பெற்ற வழக்குரைஞர்கள் உச்சநீதி மன்றத்தில் "Advocate on Record" ஆக அங்கீகாரம் வழங்கப்படும்.

உடனே உச்சநீதிமன்ற பெயர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

இதன் பிறகு மட்டுமே உச்சநீதி மன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்ய முடியும்.

அன்றிலிருந்து அவர் "உச்சநீதிமன்ற வழக்குரைஞர்" என அழைக்கபடுவார்..

கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் பத்திரத்தின் 20 தகவல்கள்:1. பத்திரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வா...
21/03/2021

கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் பத்திரத்தின் 20 தகவல்கள்:

1. பத்திரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம் ( RECTIFICATION DEED) என்பர்.

2. கிரயம், செடில்மெண்ட், பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம் அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.

3. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழைத்திருத்தல் இருக்கிறது.

4. திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள்.

5. பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றால் சொத்தை வாங்கப் பலர் தயங்குவர். அதனால் இந்தச் சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் போடப்படுகிறது.

6. செக்குப் பந்தியில் இன்னார் வீட்டுக்கு வடக்கே என எழுதுவதை இன்னார் வீட்டுக்கு கிழக்கே என எழுதுவது. பட்டா எண்ணைப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிடுவது, முன்புள்ள பத்திரங்களில் எண்களைத் தற்போது எழுதும்போதும் தவறாக எழுதுவது, இன்சியல், தந்தை பெயர் தவறாக எழுதிவிடுவது. கதவு எண்கள், ஊர்ப் பெயர், தன் பெயர் ஆகியவற்றைத் தவறாக எழுதுவது.

7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள் தவறுதல்கள் எல்லாம், சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தி விடலாம்.

8. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரத்திற்கு முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 1௦௦/- மொத்த செலவும், 5௦௦க்குள் முடியும்.

9. உரிமை மாற்றம் பிழைத்திருத்தலில் 2ஏக்கர் 1 சென்ட் என்பதை 1 ஏக்கர் 2 சென்ட் என்று எழுதி விடுவது ஆனால் 2 ஏக்கர் 1 சென்ட்டுக்கு பணம் கொடுத்து இருப்பார்கள், ஆனால் இந்தப் பிழையால் பட்டா மாறுவது தடையாகி விடும். இதனைத் திருத்துவதற்கு உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட வேண்டும்.

10. மேற்படி பிழைத்திருத்தல் பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு அதற்கு உண்டான அன்றைய சந்தை வால்யூவை வைத்து அதற்குண்டான கட்டணம் செலுத்தினால்தான் இந்த உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட முடியும்.

11. குறைவான சதுரஅடி நிலத்தை அதிக சதுரஅடியாக எழுதினால் அதனை தற்பொழுது திருத்தம் செய்யும்போது ஏற்கனவே சார்பதிவகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையை திரும்பிப் பெற்று கொள்ள முடியாது.

12. சொத்து விற்ற நபர் பிழைத்திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்துப் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.

13. விற்ற நபருக்கு, வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாம் வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம், பிழைத்திருத்தல் போடலாம். அதற்கும் வழி இல்லை என்றால் நீதிமன்றம் தான் நாட வேண்டும்.

14. சொத்தை விற்ற நபர் உயிருடன் இருக்கிறார், பிழைத்திருத்தல் போட வர மறுக்கிறார் என்றாலும், நீதிமன்றம் நாடி அதனைத் தீர்க்க வேண்டும்.

15. சர்வே எண், விஸ்தீரணம் , நீள அகல அளவுகள், என அனைத்துமே பிழையாக இருந்தால் , பிழை திருத்தம் பத்திரத்திற்குப் பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும்.

16. சில ஆவணங்களில் ஏற்படும் சிறு சிறு தவறுகளை உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிசியல் தவறுகளை பத்திரபதிவு செய்துவிட்ட பிறகு கண்டுப் பிடித்தால் அதனை அமிலம் வைத்தோ ஒயிட்னர் போட்டோ நீங்ளே திருத்தி விடுவது முற்றிலும் தவறு.

17. மனை எண் 10 யை மனை எண் 11 என்று தவறாக டைப் ஆகி இருந்தால், தாங்கள் பத்திர பதிவுக்கு பிறகு பத்திரத்தில் 10 என்று பேனாவில் போட்டாலும் பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில்11 என்றே இருக்கும்
18. இது போன்ற திருத்தம் சட்ட விரோத திருத்தமே இதனால் எந்தவித உரிமை மாற்றமும் வாரது. எவே நிச்சயம் பிழை திருத்தல் பத்திரம் போட வேண்டும்.

19. ஆவணங்களில் எழுதப்பட்ட ஷரத்துக்களில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருப்பின் அடித்தல் திருத்தல் வரி பிளவுக்கு நேராகவோ , குறுக்காகவோ இரண்டு நபர்களும் சான்று கையொப்பம் இட வேண்டும்.

20. சொத்து விபரம், சர்வே எண்ணில், வரிபிளப்பு ஏற்படுத்தி திருத்தி இருந்து அட்டேஸ்டேசன் வாங்காமல் இருந்தால் அந்த பதிவு நீதி மன்றம் செல்லாது என்றே தீர்ப்பளித்து இருக்கிறது.

தகவல் கோரும் மனு மாதிரி படிவம் Format for RTI Applicationதகவல் உரிமை சட்டத்தில் தகவல் கோர இப்படி தான் கட்டாயம் விண்ணப்பி...
21/03/2021

தகவல் கோரும் மனு மாதிரி படிவம் Format for RTI Application

தகவல் உரிமை சட்டத்தில் தகவல் கோர இப்படி தான் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாதிரிப் படிவம் ஏதும் கிடையாது.

சாதாரனமாக வெள்ளை பேப்பரில் எழுதி தகவல் கேட்டு விண்ணப்பிதால் போதும் தகவல் கேட்கின்றோம் என்ற விபரமும் கேட்கும் தகவல் என்ன என்ற விபரமும் தகவல் கேட்பவர் பெயர் முழு அஞ்சல் முகவரியும் இருந்தால் மட்டுமே போதும்.

தகவல் உரிமை சட்ட (கட்டணம்) விதிகள் விதி 3-ல் படிவம் அ -ல் ஒரு மாதிரி படிவம் பொதுமக்கள் வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.

படிவம் - அ

(விதி 3 தகவல் உரிமை சட்ட (கட்டணம்) விதிகள்)
ரூ 10 க்கு உரிய நீதிமன்ற கட்டண ஒட்டு வில்லை
பெறுதல்:

பொது தகவல் அலுவலர் மற்றும்

1. விண்ணப்பதாரர் பெயர்:

2. விண்ணப்பதாரர் முகவரி:

3. தகவல் பற்றிய விபரம்:

(அ) சம்மந்தபட்ட துறை:

(ஆ) தேவைபடும் தகவல் பற்றிய விவரங்கள்:

4. நான் கோரும் தகவல் இச்சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்த வரையில் அது தங்கள் அது தங்கள் அலுவலகம் சம்மந்தப்பட்டது என தெரிவிக்கிறேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ.10/- க்கு நீதிமன்றகட்டண வில்லைகள் செலுத்தியுள்ளேன்.
(விண்ணப்பதாரர் கையொப்பம்)

இடம்:

நாள் :

BAIL பற்றிய முழு விபரங்கள்:குற்றம் புரிந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குத் தொடுத்து, அவர்களை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத...
21/03/2021

BAIL பற்றிய முழு விபரங்கள்:

குற்றம் புரிந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குத் தொடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்து அவர்களால்தான் அந்தக் குற்றம் செய்யப்பட்டது என்பதை நிரூபித்து குற்றவாளிகளுக்குத் தண்டணை பெற்றுத் தருகிறார்கள்.

இது போன்ற வழக்குகளானது அதில் செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்ற குற்றங்களைப் பொறுத்து, பெயிலில்விடக்கூடிய வழக்கு’ மற்றும் ‘பெயிலில் விட முடியாத வழக்கு’ என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

பெயிலில் விடக்கூடிய வழக்குகள் (Bailable Offence)
இவை பெரும்பாலும் சிறு சிறு குற்றங்களாகும். இது போன்ற குற்றங்களில் காவல்துறை அதிகாரியே கைது செய்யப்பட்டவரை பெயிலில் விடுவிக்கலாம்.

ஜாமீன் தருவோர்கூட தேவையில்லை. கைது செய்யப்பட்டவரிடமே ஜாமீன் பெற்று கொண்டு அவரை காவல்துறை அதிகாரி பெயிலில் விடலாம்.

பெயிலில் விட முடியாத வழக்குகள் (Non Bailable Offence)
இவை இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத் தண்டணை விதிக்கும் அளவிற்கு உள்ள பெரிய குற்றங்களாகும்.

இதுபோன்ற குற்றங்களைச் செய்தவர்களை காவல்துறை அதிகாரியால் கைது செய்யத்தான் முடியும். பெயிலில் விட முடியாது. எனவே இது போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உரிய நீதிமன்றத்தில்தான் பெயில் பெற முடியும்.

அவ்வாறு பெயிலில் விட முடியாத வழக்கு ஒன்றில் காவல்துறையினரால் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒருவர் நீதிமன்றத்தில் பெயில் கேட்டால், அவருக்கு எதிராக வாதாடக்கூடிய, அரசு தரப்பு வழக்கறிஞர் அந்த குற்றவாளிக்கு பெயில் கொடுக்கக் கூடாது என்று ஆட்சேபணை செய்வார்.

எதனால் ஆட்சேபணை செய்கிறீர்கள்? என்று நீதிபதி கேட்டால், கீழ்க்கண்ட காரணங்களைக் கூறுவார்.

1. குற்றவாளி விசாரணையின் போது முறையாக ஆஜராக மாட்டார்
2. சாட்சிகளை கலைத்துவிடுவார்.
3. பெயிலில் வந்த பிறகு அவர் மேலும் வேறு குற்றங்களைப் புரிவார்
4. காவல்துறையின் விசாரணை இன்னும் முடியவில்லை
5. திருட்டுபோன பொருட்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை
6. குற்றம் புரிய பயன்படுத்திய ஆவணங்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை
7. சக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
8. சாட்சிகளின் உயிருக்கு ஆபத்து.

குற்றம் சாட்டப்பட்டவர் அரசு தரப்பு / எதிர் தரப்பு வழக்கறிஞர் கூறும் இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்து பதிலளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் பெயில் கிடைக்காது.

பெயிலில் வர மனு எப்படிப் போடுவது?
குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறையில் இருக்கும்போது தன்னுடைய உறவினர்களின் மூலமாகவோ அல்லது நண்பர்களின் மூலமாகவோ பெயிலில் வருவதற்கு தகுந்த வழக்கறிஞரின் உதவியை நாடலாம்.

இலவசமாக பெயில் எடுப்பதற்கு, வாரம் ஒருமுறை நேரடியாக ஜெயிலுக்கே வந்து, ஜெயிலில் உள்ளவர்களை இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞர் ஒருவர் சந்திப்பார்.

அவர் மூலமாகவும் உறவினர்களை அல்லது நண்பர்களை தொடர்பு கொண்டு முயற்சி செய்யலாம்.
குற்றஞ்சாட்டப்பட்டவர் சட்டநுணுக்கங்கள் தெரிந்தவராக இருந்தால் நேரடியாகவே ஜெயில் அதிகாரி மூலமாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.

அந்த மனுவில் பெயில் பெறுவதற்காக கீழ்க்கண்ட தகுந்த காரணங்களை குற்றஞ்சாட்டப்பட்டவர் குறிப்பிட வேண்டும்.

1. பெயிலில் செல்லாவிட்டால் தனது வேலையை இழக்க நேரிடும்.

2. குடும்பத்தில் தான் மட்டுமே சம்பாதிக்கும் நபர் என்பதால், தனது குடும்பம் வருமானம் இன்றி பாதிக்கப்படுகிறது.

3. தனக்கு உடல் நலமில்லை, வெளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால்தான் குணமாக முடியும்.

4. மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது தண்டனை கைதியை தொடர்ந்து சிறையில் வைப்பது என்பது நீதிக்கு எதிரானது.

ஜாமீன்'

குற்றஞ்சாட்டப்பட்டவரை பெயிலில் எடுப்பதற்கு அது சிறிய குற்றம் என்றால், ரூ.50,000/- மதிப்புள்ள அசையா சொத்து வைத்திருக்கும் இரண்டு நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும்.

வழக்கறிஞர் குறிப்பிடும் நாளில் ஜாமீன்தாரர்கள். நீதிமன்றத்திற்கு அசல் குடும்ப அட்டையுடன் செல்ல வேண்டும்.

நீதிபதி அவர்களிடம், குற்றம் சாட்டப்பட்டவரை உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் பெயர் என்ன? அவரது தந்தையின் பெயர் என்ன? அவர் எந்த ஊரில் வசித்து வருகிறார்? அவரது மனைவி பெயர் என்ன? என்ன குற்றம் செய்துள்ளார்? உங்கள் பெயர் என்ன? உங்கள் தந்தையின் பெயர் என்ன? உங்கள் சொத்து எந்த ஊரில் உள்ளது? அதன் மதிப்பு என்ன? என்ற கேள்விகளை கேட்பார்.

அவற்றிற்கு தகுந்த பதில்களை ஜாமீன் அளிப்பவர் சொல்ல வேண்டும்.

குறிப்பிடும் நிபந்தனைகளின்படி குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் அல்லது காவல் நிலையத்தில் ஆஜராகாவிட்டால் உங்களை கைது செய்ய நேரிடும்! என்பதையும் நீதிபதி ஜாமீன்தாரர்களிடம் தெரிவிப்பார்.

பின்பு ஜாமீந்தாரர்களின் குடும்ப அட்டையில் நீதிமன்ற முத்திரை வைத்து பெயில் வழங்கப்படும்.

பெயில் மறுப்பு மற்றும் மேல் முறையீடு
குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை பெயிலில்விட நீதிபதி மறுத்தால் அதற்கான காரணங்களை அவர் தனது தீர்ப்பில் கூறவேண்டும்.

அதனை வைத்துதான் குற்றம் சாட்டப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.

ஒருவரது பெயில்மனு தள்ளுபடி ஆனால் அதே நீதிமன்றத்தில் சில காலம் கழித்து மீண்டும் மனு போடலாம் அல்லது உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்

முன் ஜாமீன் (Anticipatory Bail)'

தன் எதிராளிகளால் பொய்யான வழக்கு தன்மீது போடப்பட்டு சில நாட்களாவது தன்னை சிறை வைக்க முயலக்கூடும் என ஒருவர் எண்ணினால் முன் ஜாமீன் கேட்டு மனு செய்ய சட்டத்தில் இடமுண்டு
இதற்கான மனுவை அவர் மாவட்ட நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.

வாரன்ட் இல்லாமல் போலிசாரால் கைது செய்யப்பட்டால் , அவர் ஜாமீன் தர தயார் என்றால் அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று இந்த முன் ஜாமீன் மூலம் நீதிமன்றம் உறுதி செய்கிறது.

குறிப்பு:
உச்சநீதிமன்றத்தில் பெயில் ஆர்டர் பெற்றிருந்தால்கூட, தண்டனை கொடுத்தவர்களே பெயில் கொடுக்க வேண்டும் என்பதால் தண்டணை வழங்கப்பட்ட நீதிமன்றத்தில்தான் அந்த பெயில் ஆர்டரை கொடுத்து பெயில் பெற வேண்டும் என்பது சட்டமாகும்..........

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைச...
21/03/2021

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம்.
அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

#இன்ஷூரன்ஸ்_பாலிசி!

யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

#மதிப்பெண்_பட்டியல்!
யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.
கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும்.
அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.
தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

#ரேஷன்_கார்டு!
யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

#டிரைவிங்_லைசென்ஸ்!
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

#பான்_கார்டு!
யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.
எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

#பங்குச்_சந்தை_ஆவணம்!
யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.
எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும்.
பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும்.
சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

#கிரயப்_பத்திரம்!
யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்.
தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

#டெபிட்_கார்டு!
யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.
அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

#மனைப்_பட்டா!
யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

#பாஸ்போர்ட்!
யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும்.
20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

#கிரெடிட்_கார்டு!
யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை: 15 வேலை நாட்கள்.
நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.
தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

Address

Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate C.Samy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share