Chennai Advocates

Chennai Advocates We are Looking at all kinds of cases. if you need any legal explanation or requests to register case

Suresh Advocate Chennai...Hi my friends
13/02/2023

Suresh Advocate Chennai...
Hi my friends

Advocate cannot insist his client to pay his fees when client want to go discharge him.
25/02/2021

Advocate cannot insist his client to pay his fees when client want to go discharge him.

31/07/2020

★ _LIST Of 10 IMPORTANT LANDMARK JUDGMENTS :_

1. Women can be manager of a Joint Family [Shreya Vidyarthi vs. Ashok Vidyarthi]

2. Complete Departmental inquiries within six months [Prem Nath Bali vs. Registrar, High Court of Delhi]

3. RBI also under RTI [Reserve Bank of India vs. Jayantilal Mistry]

4. Acid Attack Victims in disability list [Parivartan Kendra vs. Union of India]

5. Writ petitions maintainable against ‘deemed Universities’. [Dr. Janet Jeyapaul vs. SRM University]

6. No politician photos in Govt Ads [Common cause vs. Union of India]

7. Age determination of r**e victim clarified [State of M.P. vs Anoop Singh]

8. Amendment in complaint can be done [S.R.Sukumar vs. S.Sunaad Raghuram]

9. Obscene language cannot be allowed against ‘Historically respected personalities’. [Devidas vs. State of Maharashtra]

10. Appointment of Archakas to be made in accordance with Agamas [Adi Saiva Sivachariyargal Nala Sanga vs. Government of Tamilnadu

Contact any Arbitration Cases in ChennaiI handle it...!!
19/06/2020

Contact any Arbitration Cases in Chennai
I handle it...!!

08/06/2020
காவல் நிலையத்தில் CSR பெற..(கொடுத்த புகாரினை பெற்றதற்கு காவல் நிலையத்தில் தரப்படும் பதிவு ஆவணம்) காவல்நிலையத்தில் CSR பெ...
08/06/2020

காவல் நிலையத்தில் CSR பெற..(கொடுத்த புகாரினை பெற்றதற்கு காவல் நிலையத்தில் தரப்படும் பதிவு ஆவணம்)

காவல்நிலையத்தில் CSR பெற என்ன செய்ய வேண்டும்?

இந்திய தண்டணைச் சட்டங்களிலுள்ள (சில) பிரிவுகளின்படி தண்டிப்பதற்கான குற்றம் ஏதாவது நடந்து இருந்தாலும், அல்லது நடக்கப் போவதை அறிந்தாலும் பொதுமக்களாகிய நாம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) பிரிவு 39ல் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆனால், பொதுமக்களாகிய நாம் நமக்கு சம்பந்தம் இருந்தால் மட்டுமே அல்லது நமக்கு துன்பம் நேர்ந்தால் மட்டுமே போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து வருகின்றோம். இது மிகவும் தவறு.

எந்தத் தவறு நடந்து இருந்தாலும் முதலில் போலீஸ் ஸ்டேஷனில்தான் புகார் அளிக்க வேண்டும் என்று நம் நாட்டில் சட்டம் வகுத்தவர்கள் ஒரு மரபை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நீங்கள் நேரடியாக சென்று புகார் அளித்தாலும், அந்தப் புகாரை பற்றி விசாரணை செய்யச் சொல்லி லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கே அவர் அனுப்பி வைப்பார்.

நீங்கள் நேரடியாக கோர்ட்டுக்கே சென்றால் கூட, அந்தப் புகார் பற்றி விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி, அந்தப் புகாரானது நீதிமன்றத்தால் காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆகவே, முதலிலேயே நாம் அருகிலுள்ள காவல்துறை அலுவலகத்தில் புகார் அளிப்பது நல்லது.

நாம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும்போது அந்தப் புகாரை ஏற்றுக் கொண்டதாக காவல்துறையினர் வழங்குகின்ற ஒப்புதல் சீட்டே புகார் மனு ஏற்புச் சான்றிதழ் (CSR - Community Service Register) என்று அழைக்கப்படுகிறது.

எந்த ஒரு புகாராக இருந்தாலும் அதனை பதிவுசெய்து அந்தப்புகாரை தந்தவர்களுக்கு புகார் மனு ஏற்புச் சான்றிதழ் தருவது காவல்துறையினரின் கடமை ஆகும்.

மேலும், புகார் மனு ஏற்புச் சான்றிதழ் அளித்தது பற்றி அது பற்றிய குறிப்புடன் காவல்நிலையத்தில் வைத்து பராமரித்து வருகின்ற பதிவேட்டில் பதிவு செய்யவும் வேண்டும்.

அந்தப் புகாரின்படி விசாரணை செய்து, கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கை தயார் செய்து, குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 154ன்படி குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

புகார் அளித்தவர்க்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்க வேண்டும்.

ஒரு வேளை கைது செய்ய முடியாத குற்றம் ஒன்று நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், , குற்ற விசாரணை முறைச் சட்டம், 1973 - (Cr.P.C) பிரிவு -155ன்படி புகாரையும், புகார் தந்தவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

ஆன்லைன் மூலமாகவும் புகார் செய்து புகார் மனு ஏற்புச் சான்றிதழ் பெற முடியும். ஆனால், நேரில் செல்வதே சிறந்தது.

புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்தாலோ அல்லது புகார் மனு ஏற்புச் சான்றிதழ் தர மறுத்தாலோ உங்கள் புகாரை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத்தபாலில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து புகார் செய்யப்பட்டதற்கான ஒரு ஆதாரத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.

எச்சரிக்கை:
பொய்யான புகாரைக் கொடுத்தால், புகார் கொடுத்தவர் இந்திய தண்டணைச் சட்ட்ம், பிரிவு - 211ன்படி இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டணை மற்றும் அபராதம் விதித்து தண்டிக்கப்படுவார்.

 #தமிழ்நாடு_சங்கங்கள்_பதிவுச்_சட்டம்  #சங்கத்தை_பதிவு_செய்வது_எப்படி? ஒரு சங்கத்தின் செயல்பாடுகள் என்பது அச்சங்கத்துக்கு...
30/05/2020

#தமிழ்நாடு_சங்கங்கள்_பதிவுச்_சட்டம்

#சங்கத்தை_பதிவு_செய்வது_எப்படி?
ஒரு சங்கத்தின் செயல்பாடுகள் என்பது அச்சங்கத்துக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இடையேயான உள்விவகாரம். எனவே நீதிமன்றங்கள் சங்கம் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளில் சாதாரணமாக தலையிடுவதில்லை. ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது சங்கத்தின் நடவடிக்கை அதற்குரிய வரம்புகளை மீறியும், சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கு முரண்பாடாகவும், உறுப்பினர்களின் தனிமனித உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்படுவதாக புகார் எழுமானால் நீதிமன்றங்கள் தலையிடக்கூடும்.

நம் தமிழ் நாட்டை பொறுத்தவரை சங்கங்களின் செயல்பாடுகள் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975 க்கு உட்பட்டிருக்க வேண்டும்.

1975 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், அதற்குரிய தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகளுடன் 22.4.1978 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது இச்சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பு மத்திய சட்டமான "1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டம்" அமலில் இருந்தது.

#சங்கத்தின்சட்டப்பூர்வஅங்கீகாரம் :

மேற்படி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம் சமுதாயத்தில் ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறுகிறது. ஒரு காலகட்டத்தில் சங்கங்களுக்கு அத்தகைய சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்கப்பட முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது ஏனென்றால் அக்காலங்களில் சட்டப்பூர்வ அங்கீகாரம் என்பது, தனி மனிதர்கள், கூட்டுத் தொழில் நிறுவனங்கள் (Partnerships) மற்றும் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் (Corporate Companies) ஆகியவைகளுக்கு மட்டுமே இருந்தன இந்த சட்டத்தை பொறுத்தவரை நிறுவனங்களுக்கும் (Companies) சங்கங்களுக்கும் (Societies) இடையே உள்ள வேறுபட்ட ஒரு அம்சம் என்னவென்றால், பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமானது கலைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் அதனுடைய உறுப்பினர்களிடையே பிரித்துக் கொடுக்கப்படும். ஆனால் ஒரு சங்கத்தை பொறுத்தவரை அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் அதனுடைய சொத்துக்களில் அதன் உறுப்பினர்கள் எவ்வித உரிமையும் கோர முடியாது.

பிரிவு - 42 : அதாவது மேற்படி சட்டப்பிரிவு 42 ன்படி பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம், கலைக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானால் அவ்வாறு கலைக்கப்பட பிறகு, அச்சங்கத்தால் கொடுக்கப்பட வேண்டிய தொகைகள் அனைத்தும் கொடுக்கப்பட்ட பிறகு, அச்சங்கத்திற்குரிய சொத்துக்கள் ஏதேனும் மீதம் இருக்குமானால், அச்சொத்து அச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட மாட்டாது மாறாக சங்கத்தின் ஒரு சிறப்பு தீர்மானம் மூலமோ அல்லது அவ்வாறு இயற்றப்பட இயலாவிட்டால் நீதிமன்ற ஆணைப்படியோ, அத்தகைய மீதமுள்ள சொத்துக்கள் அச்சங்கத்தை போன்ற குறிக்கோளுடன் செயல்படும் பதிவு செய்யப்பட்ட வேறு ஒரு சங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.

#சட்டத்தின்சிறப்புஅம்சங்கள் :

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975 இல் உள்ள ஒரு புதிய அம்சம் என்னவென்றால் சங்கங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டப் பிரிவு 4 ன்படி, எந்தவொரு சங்கத்தில் 20 க்கும் குறையாத உறுப்பினர்கள் உள்ளார்களோ அல்லது சங்கத்தின் ஆண்டு வரவு - செலவு ரூபாய் 10,000/-க்கு மேல் உள்ளதோ அச்சங்கம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டிய சங்கம் ஆகும்.

#பதிவுசெய்யும்இடம் :

புதிதாக துவக்கப்படும் சங்கம் அமைக்கப்பட இருக்கும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் அச்சங்கம் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஒரு சங்கத்தை தோற்றுவித்தலும், பதிவு செய்தலும் :

(அ) நோக்கங்கள் :

பிரிவு 3 மற்றும் விதி 3 இல் கூறப்பட்டுள்ள நோக்கங்களையும், பயனுள்ள குறிக்கோள்களையும் கொண்ட சங்கங்களை தோற்றுவித்து பதிவு செய்யலாம்.

உடல் ஊனமுற்றோரின் நலன், வேலை செய்யும் பெண்களின் நலன், வேலை வாய்ப்பற்றோர் நலன், சுற்றுலா மற்றும் ஆன்மீகப் பயணிகளின் நலன், கைவிடப்பட்டோர் நலன் மற்றும் பொருளாதார மற்றும் சமூக அளவில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டோர் நலன் போன்றவை விதி 3 இல் கூறப்பட்டுள்ள பயனுள்ள குறிக்கோள்களில் சிலவாகும்.

(ஆ) சங்கத்தை ஆரம்பிக்க தேவையான உறுப்பினர்கள் எண்ணிக்கை :

ஒரு சங்கத்தை தோற்றுவிப்பதற்கு குறைந்த பட்சம் 7 உறுப்பினர்கள் தேவை (பிரிவு 3(2))

பிரிவு 7 ன்படி பதிவு செய்யத் தாக்கல் செய்யப்படும் விவரக்குறிப்பிலும் (Memorandum) சங்கத் தனி நிலைச் சட்ட விதிகளிலும் (Bye - laws) குறைந்த பட்சம் 7 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும்.

சங்கத்தின் அலுவல்களை நடத்த குறைந்த பட்சம் 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவை (Committee) சங்க மொத்த உறுப்பினர்கள் சாதாரணப் பெரும்பான்மையில் ( Simple Majority) தேர்ந்தெடுக்க வேண்டும். இக்குழுவை நிர்வாக குழு அல்லது செயற்குழு (Executive Committee) என்றும் அழைக்கலாம்.

அதாவது நிர்வாக குழுவில் தலைவர், துணைத் தலைவர் அல்லது துணைத் தலைவர்கள், செயலாளர், துணை செயலாளர் அல்லது துணைச் செயலாளர்கள், பொருளாளர், நிர்வாககுழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளை கொண்டவர்கள் இருக்கலாம்.

(இ) சங்கத்தை பதிவு செய்ய தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

நிர்வாககுழு உறுப்பினர் ஒருவரால் அல்லது அக்குழுவினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஒருவரால், மாவட்ட பதிவாளர் முன்பு கீழ்க்கண்ட ஆவணங்களை தாக்கல் செய்து சங்கம் அமைக்கப்பட்ட தேதியிலிருந்து பிரிவு 4(1) இல் கூறப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றிய தேதியிலிருந்து 3 மாத காலத்திற்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

1. விதிகளின் பிற்சேர்க்கையில் (Schedule) கொடுக்கப்பட்டுள்ள பூர்த்தி செய்யப்பட்டுள்ள படிவ எண் 1

2. சங்க விவரக்குறிப்பு (Memorandum of Association)

3. சங்கத் தனி நிலைச் சட்ட விதிகள் (Bye - laws of the Society)

4. பூர்த்தி செய்யப்பட்ட படிவ எண் 5

5. பூர்த்தி செய்யப்பட்ட படிவ எண் 6

பதிவுக் கட்டணம் தற்போதுள்ள நிலவரப்படி ரூபாய் 500 செலுத்தப்பட வேண்டும்.

படிவ எண் 1 என்பது, மாவட்ட பதிவாளருக்கு சங்கத்தை பதிவு செய்யக் கோரும் விண்ணப்பம் ஆகும்.

படிவ எண் 5 என்பது, பதிவு செய்யப்பட்ட அலுவலகம் இருக்குமிடம் பற்றிய விபரத்தையும், மாற்றம் ஏற்பட்டால் அதைப்பற்றிய விபரத்தையும் தெரிவிக்கும் படிவம் ஆகும்.

படிவ எண் 6 என்பது, சங்க உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் கொண்ட பதிவேடு ஆகும்.

சங்க விவரக்குறிப்பு என்பது சங்கத்தின் பெயர், சங்கத்தின் குறிக்கோள் மற்றும் குழு உறுப்பினர்களின் பெயர்கள், முகவரிகள், அவர்கள் செய்யும் தொழில்கள் பற்றிய விபரங்களை கொண்ட விவரக்குறிப்பு ஆகும். இத்துடன் சங்கத்தின் தனி விதிகளையும் (Bye - laws) இணைப்பாக கொண்டதாகும்.

சங்கத்தின் தனி நிலைச் சட்ட விதிகள் (Bye - laws) விதி 6 இல் கூறப்பட்டுள்ள விபரங்களை கொண்டிருக்க வேண்டும்.

சங்கத்தின் பெயரும், பெயர்ப் பலகையும் :

சங்கத்தின் பெயர் சட்டப் பிரிவு 9 இல் கூறப்பட்டுள்ளதற்கு இணங்க இருக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிற ஒரு சங்கத்தின் பெயரையோ, கூட்டுறவு, நிலவளவங்கி, இந்திய மத்திய வங்கி போன பெயர்களையோ சேர்க்கக்கூடாது. பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் அவர்களது அலுவலகம் இருக்கும் இடத்தில் சங்கப் பெயர் பலகையை வைக்க வேண்டும். பெயர் பலகை எந்த மொழியில் இருந்தாலும் "தமிழிலும்" வைக்கப்பட வேண்டும். (பிரிவு 13)

சங்க உறுப்பினர்களும், உறுப்பினர் பதிவேடும் :

ஒரு சங்கத்தின் உறுப்பினர்கள், சாதாரண உறுப்பினர்கள் (Ordinary Members) ஆயுள் உறுப்பினர்கள் (Life Members) மற்றும் காப்பாளர்கள் (Custodians) என பல வகைகளால் இருக்கலாம். ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிய சந்தா தொகையினை சங்கம் நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு சங்கமும் படிவம் எண் 6 குறிப்பிட்டுள்ளபடி உறுப்பினர் பதிவேட்டை பராமரித்து வர வேண்டும். உறுப்பினர்கள் சேர்ந்த தேதி மற்றும் விலகிய தேதி போன்றவற்றை உடனுக்குடன் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.

சங்க பொதுக்குழுவும், செயற்குழுவும் :

சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்த அமைப்பு, சங்கத்தின் பொதுப் பேரவை (General Body) அல்லது பொதுக்குழு எனப்படும். பொதுக்குழு கூட்டம் ஆண்டுக் ஒருமுறையாவது கூட்டப்பட வேண்டும்.

சங்கத்தின் செயல்பாடுகளை கவனிக்க பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் குழு, நிர்வாக குழு (Executive Committee) அல்லது செயற்குழு எனப்படும்.

செயற்குழு எனப்படும் நிர்வாக குழுவில் குறைந்த பட்சம் 3 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் அதிகபட்ச உறுப்பினர்கள் பற்றி சட்டத்தில் குறிப்பிடப்படாததால், சங்கத்தின் தனிநிலைச் சட்ட விதியில் (Bye laws) கூறப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நிர்வாக குழு உறுப்பினர்களின் பதவிக் காலம், தேர்ந்தெடுக்கப்பட்ட / நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது.

ஒவ்வொரு ஆண்டிலும் நிர்வாக குழு எத்தனைமுறை கூட வேண்டும், எத்தனை நாட்களுக்கு முன்பாக கூட்டம் பற்றிய அறிவிப்பு கொடுக்க வேண்டும், அக்கூட்டத்துக்கான குறைவெண் வரம்பு (வர வேண்டியவர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை எவ்வளவு) போன்றவைகளுக்கு சங்கத்தின் துணை விதிகளில் (Bye laws) நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

சங்கம் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் :

சட்ட விதி 18 ன் படி (Rule 18) ரொக்கப் பதிவேடு (cash book), பற்றுச்சீட்டுப் புத்தகம் (receipt book), சான்று சீட்டு கோப்பு (voucher file), பேரேடு (ledger), மாதாந்திர பதிவேடு (monthly register), கடித போக்குவரத்து கோப்புகள், நிகழ்ச்சி குறிப்பு பதிவேடுகள் (Minutes book) போன்ற பதிவேடுகள் சங்கத்தால் பராமரிக்கப்பட வேண்டும்.

தணிக்கை :

பிரிவு 16 மற்றும் விதி 19 ன்படி ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை உள்ள ஒவ்வொரு நிதி ஆண்டு முடிந்ததும், சங்கத்தின் அந்த நிதி ஆண்டுக்கான கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வரவு - செலவு அற (income and expenditure statement), இருப்பு நிலை கணக்கு ஏடு (balance sheet) முதலியவை தணிக்கையாளரால் தயாரிக்கப்பட்டு, நிதி ஆண்டு முடிந்த 6 மாதத்திற்குள் பொதுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகாரம் (approval) பெறப்பட வேண்டும்.

ஆண்டுதோறும் பதிவாளருக்கு அனுப்ப வேண்டிய ஆவணங்கள் (பிரிவு 16& விதி 22):

நிதி ஆண்டு முடிந்த 6 மாதங்களுக்குள், சங்கம் தனது பொதுக்குழுவை கூட்டி தணிக்கையாளரின் அறிக்கையை தாக்கல் செய்து, பொதுக்குழுவின் அங்கீகாரத்தை பெற வேண்டும் அந்த பொதுக்குழு கூட்டம் முடிந்த 6 மாதங்களுக்குள் கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.

1. வரவு - செலவு கணக்கு மற்றும் இருப்பு நிலை அறிக்கை

2. தணிக்கையாளரின் அறிக்கை

3. கணக்கு ஆண்டு முடிந்த கடைசி நாளில், சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொழில் பற்றிய விபரங்களுடன் கூடிய பட்டியல்

4. சங்கம் பணியாற்றி வருவது பற்றிய உறுதிமொழி (பிரிவு 16(3)(b)(iii) இல் கண்டுள்ள படி)

5. தேர்தல் நடத்தப்படும் பொதுக்குழுவிற்கு பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் விவரம்

(குறிப்பு - தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 இல் கண்டுள்ள சில முக்கியமான விவரங்களை மட்டுமே இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. )

 #சட்டம்_அறிவோம் #ஒரு_குழந்தை_தாயிடம்  #வளரவேண்டுமா_தந்தை_பராமரிப்பில்_வளரவேண்டுமா... என்பது குறித்த  #உச்சநீதிமன்ற_தீர்...
29/05/2020

#சட்டம்_அறிவோம்

#ஒரு_குழந்தை_தாயிடம் #வளரவேண்டுமா_தந்தை_பராமரிப்பில்_வளரவேண்டுமா...
என்பது குறித்த #உச்சநீதிமன்ற_தீர்ப்பு.

உச்சநீதிமன்றத்தில் "விவேக் சிங் Vs ரொமணி சிங் (2017-2-CTC-69)(AIR-2017-SC-929)(2017-3-MLJ-184)" என்ற ஒரு வழக்கு நடந்தது.

அந்த வழக்கில் 21 மாதங்களேயான ஒரு பெண் குழந்தையை அதன் தாயாரிடமிருந்து அந்த குழந்தையின் தந்தை பறித்து சென்று விட்டார். அந்த சம்பவம் குறித்த வழக்கு இறுதியாக உச்சநீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த போது அந்த பெண் குழந்தைக்கு 8 வயதாகியிருந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குழந்தைக்கு ஆரம்பக்கட்ட பாதுகாப்பை வழங்குபவர் தாயார் என்றும் ஒரு இளவர் குழந்தைக்கு தாயின் பாசமும், அரவணைப்பும்தான் மிக முக்கியமான தேவை என்றும் தாய்க்கும், குழந்தைக்குமான உறவு குழந்தை பிறக்கும் போதே ஏற்பட்டு விடுகிறது என்றும் தாய்க்கு பதிலாக வேறு ஒருவர் குழந்தையை கவனித்தால் 2 மாதத்திலேயே குழந்தைக்கு அதிருப்தி ஏற்படும் என்றும் ஒரு குழந்தை 4 வாரங்களில் தனது தாயின் குரலை அடையாளம் கண்டு கொள்கிறது என்றும் குழந்தைகள் தாயுடன் 8 மாதங்கள் வரை இருக்க அடம் பிடிக்கும் என்றும் குழந்தைக்கு 1 வயதாகும் போது தாயுடன் ஒரு பாசப் பிணைப்பை ஏற்படுத்தி கொள்கிறது என்றும் #ஒரு_குழந்தையின்_சிறிய_உலகத்தில்_தாய்தான்_மிக_முக்கியமான_நபர்_என்றும் தாயுடனான இந்த பிணைப்பு குழந்தைக்கு எதிர்காலத்தில் தேவைப்படுபவற்றை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஒரு நம்பிக்கையை உருவாக்குகிறது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் #தாயுடனான_இந்த_பிணைப்பு_மற்றவர்களுடனும்_மனித_குலத்துடனும்_குழந்தை_தொடர்பை_ஏற்படுத்தி_கொள்வதற்கு #அடித்தளமாக_அமைகிறது என்றும்

#குழந்தைக்கு_தாயின்_அன்பும்_வழிகாட்டுதல்களும்_கிடைக்க_வேண்டியது_அவசியமா_ஒன்று என்றும்
#தீர்ப்பு_கூறியுள்ளது.
நன்றி சகோ .!!

ஏதேனும் சட்ட விளக்கம் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
S SURESH
Advocate
9500005764
perambur,Chennai-12

வாகனத்துக்குப் பதிவு எண் வாங்குவது எப்படி?CONTENTSவாகனப்பதிவு எண்ஃபேன்ஸி எண்களைப் பெறுவது எப்படி?விண்ணப்பிக்கும் முறைவிர...
28/05/2020

வாகனத்துக்குப் பதிவு எண் வாங்குவது எப்படி?
CONTENTS
வாகனப்பதிவு எண்
ஃபேன்ஸி எண்களைப் பெறுவது எப்படி?
விண்ணப்பிக்கும் முறை
விரும்பிய எண்ணைப் பதிவு எண்ணாகப் பெற எவ்வளவு கட்டணம்?
வாகனப்பதிவு எண்
மோட்டார் வாகனச் சட்டத்தில் செக்ஷன் 4(6)ன் படி ஒவ்வொரு மாநிலத்தின் மற்றும் யூனியன் பிரதேசத்தின் முதல் இரண்டு ஆங்கில எழுத்துகளைப் பதிவு எண்ணில் முதலில் குறிப்பிட வேண்டும். அதாவது, தமிழ்நாட்டுக்கு TN, ஆந்திராவுக்கு AP, அதே போல, மாநில அரசு ஒவ்வொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கும் (ஆர்.டி.ஓ.) ஒதுக்கியுள்ள குறிப்பிட்ட கோட் நம்பரையும் குறிப்பிட வேண்டும் (எ.கா: சென்னை அயனாவரம் - 01, திருநெல்வேலி - 72 மதுரை - 58, கிருஷ்ணகிரி - 24 நாகர்கோவில்– 74). அதற்கு அடுத்தாற்போல, நான்கு எண்களுக்கு மிகாமல் எண்கள் குறிப்பிட வேண்டும். அதாவது, ஒவ்வொரு ஆர்டிஒ அலுவலகத்திலும் 1 முதல் 9999 வரையான எண்களைக் கொடுக்க வேண்டும். 9999 என்ற எண் முடிந்தவுடன் அடுத்த சீரிஸ் ஆங்கில எழுத்து குறிப்பிடப்பட்டு 1 முதல் 9999 வரை பதிவு எண்களாகக் குறிப்பிடலாம்.

ஃபேன்ஸி எண்களைப் பெறுவது எப்படி?
சென்னை தவிர, தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஒ. அலுவலகங்களில் எந்த வரிசை ஆரம்பித்தாலும் 1 முதல் 9999 எண்களுக்கு குறிப்பிட்ட 97 பேன்சி எண்களை அரசே தனியாக ஒதுக்கி வைத்துக் கொள்ளும். இந்த எண்கள் எல்லாமே ஃபேன்னறி எண்கள். இந்த எண்களை முதலில் யாருக்கும் கம்ப்யூட்டர் ஒதுக்காதபடி வரிசையிலிருந்து தடுத்து நிறுத்திவிடுவார்கள். இந்த எண்களைப் பெற வேண்டுமெனில், நாம் சென்னையில் தமிழக அரசின் ஹோம் டிபார்ட்மென்ட் - டிரான்ஸ்போர்ட் செக்ஷனில், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான ஆர்.டி.ஒ. பணத்தைச் செலுத்தி இந்த ஃபேன்ஸி எண்களைப் பெற வேண்டும். மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பெற முடியாது.

விண்ணப்பிக்கும் முறை
குறிப்பிட்ட நாளில் கடைசியாக எந்த எண் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதிலிருந்து 1000 எண்களுக்குள் (அரசு ஒதுக்கியுள்ள சிறப்பு எண்களைத் தவிர்த்து) ஏதாவது ஒரு குறிப்பிட்ட எண்ணை நாம் தேர்வு செய்து மனு கொடுத்தால், அதை ஒதுக்கித் தரும். அதிகாரம் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலக அதிகாரிக்கு உண்டு. இதற்கு நம் வாகனத்தை உடனடியாக ஆர்டிஓ. அலுவலகத்தில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

வாகனம் வாங்காமலே ஆயிரம் எண்ணுக்குள் ஏதாவது ஓர் எண்ணை, விண்ணப்பித்து ரிசர்வ் செய்து கொள்ளலாம். நாம் ரிசர்வ் செய்த எண், ரெகுலர் ரெஜிஸ்ட்ரேஷனில் வருவதற்குள் நாம் வாகனத்தைப் பதிவு செய்து அந்த எண்னைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் ரிசர்வ் செய்துள்ள எண்ணுக்கு முந்தைய எண் ரெகுலர் ரெஜிஸ்ட்ரேஷனில் ஒதுக்கப்பட்டவுடன், ஆர்.டி.ஒ. அலுவலகத்திலிருந்து நமக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். 30 நாட்களுக்குள் நாம் சென்று புதிய வாகனத்தையும் பதிவுக்கான சான்றுகளையும் சமர்ப்பிக்காவிட்டால் நாம் ரிசர்வ் செய்த எண் நமக்கு கிடையாது. ரிசர்வ் செய்வதற்காக நாம் செலுத்திய பணமும் திரும்பக் கிடைக்காது.

விரும்பிய எண்ணைப் பதிவு எண்ணாகப் பெற எவ்வளவு கட்டணம்?
கடைசியாகப் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 1000 எண்களுக்கு உள்ள எண்ணை ரிசர்வ் செய்ய 50 சிசி-க்கு குறைவான வாகனங்களுக்கு ரூ.1000, 50 சிசி-க்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான (ஆட்டோ ரிக்ஷாவும் சேர்த்து) கட்டணம் ரூ.2000, நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமான விலை உள்ள வாகனங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு ரிசர்வ் செய்ய கட்டணம் ரூ.8000 மற்ற வாகனங்களுக்கு ரூ. 5000 ஆகும்.

இந்த கட்டணத்தைச் செலுத்திய பின், எந்த எண்ணை ரிசர்வ் செய்கிறார்களோ அந்த நபரின் பெயரில் வாங்கும் வாகனத்துக்குதான் இந்த எண் கொடுக்கப்படும். ஒரே எண்ணை இரண்டு பேர் கேட்டால். ஒரே எண் ரிசர்வ் செய்ய வேண்டும் என்று இரண்டு நபர்கள் ஒரே நாளில் மனு செய்தால், அதில் அரசுக்கு அதிக வரி கட்டும் வாகனத்துக்கு முன்னுரிமை தரப்படும். எடுத்துக்காட்டாக, ஒர் எண்ணை ஒருவர் தனது பைக்குக்கு வேண்டும் என்றும், அதே நாளில் வேறு நபர் தனது காருக்கு வேண்டும் என்றும் மனு செய்தால், கார் உரிமையாளர் அதிக வரி செலுத்துவதால், அவருக்கே முன்னுரிமை தரப்படும். ஒரே எண்ணைக் கேட்கும் நபர்கள் ஒரே மாதிரியான வாகனத்துக்கு வேண்டுமென்று செய்திருந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

சட்ட சிக்கல் பிரச்சனைக்கு அனுக வேண்டிய முகவரி
S.SURESH
(Advocate)
PERAMBUR
CHENNAI
9500005764

28/05/2020

இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவு 324 I P C பிரிவு குற்றவியல் நடைமுறைச்சட்டம் திருத்தத்தின் படி கடந்த 2006 ஆண்டிலிருந்து பிணையில் விடக்கூடாத (non bailable) குற்றமாக மாறிவிட்டதாக புதிய சட்டப்புத்தகத்தில் அச்சிடிக்கப்பட்டுள்ளது.

அது போன்றே சில நீதிபதிகளும் குற்றம் சாட்டப்பட்டவரை சிறைபடுத்தி விடுகின்றனர்.

உண்மையில்
கடந்த 21.6.2006 குற்றவியல் நடைமுறைச்சட்ட திருத்தத்தில் அது பிணையில் விடக்கூடாத குற்றம் என வெளிவந்த போதும். திருத்ததின் 42(f) பிரிவில் உள்ள இந்த பிரிவு பின்னிட்டு மத்திய உள் துறை அமைச்சகத்தின் மற்றொரு கெசட் அறிவிப்பின் படி நீக்கப்பட்டுள்ளது.

(except the provisions of Sections 16, 25, 28(a),
28(b), 38, 42(a), 42(b) 42(f) (iii) and (iv) and 44(a), shall come into force).ஆனால் இதனை அறியாது 324 இ.த.ச பிரிவினை பிணையில் விடமுடியாத குற்றம் என பார்ப்பது நமது அறியாமை. அந்த கெசட் வெளியீடு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

MINISTRY OF HOME AFFAIRS
Notification
New Delhi, the 21st June, 2006
S. O. 923(E).- In exercise of the powers conferred by sub-section (2) of section 1 of the Code of Criminal
Procedure (Amendment) Act, 2005 (No. 25 of 2005), the Central Government hereby appoints the 23rd June,
2006, as the date on which the provisions of the said Act, except the provisions of Sections 16, 25, 28(a),
28(b), 38, 42(a), 42(b) 42(f) (iii) and (iv) and 44(a), shall come into force.
[F. No. 2/5/90-Judl Cell (Vol VIII)]
Dr. P. K. SETH, Jt. Secy

சட்ட சிக்கல் பிரச்சனைக்கு அனுக வேண்டிய முகவரி
S.SURESH
(Advocate)
PERAMBUR
CHENNAI
9500005764

 ...?? சிபில் என்பது CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD என்பதன் சுருக்கம் ஆகும். இந்த அமைப்பானது நம் நாட்டில் கிரடிட்...
28/05/2020

...??

சிபில் என்பது CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD என்பதன் சுருக்கம் ஆகும். இந்த அமைப்பானது நம் நாட்டில் கிரடிட் கார்டு பயன்படுத்து பவர்களைப்பற்றியும்,கடன் வாங்குபவர்களைப் பற்றி்யும் தகவல்களை சேகரித்து பராமரிப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு அமைப்பாகும்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவர்கள் பற்றிய தகவலையும், அவர்கள் அதனை திருப்பிச் செலுத்துவது பற்றிய தகவலையும் இந்த அமைப்பிற்கு தெரிவிக்கும். இதனை இந்த சிபில் அமைப்பு சேகரித்து வைக்கும். இதனை வைத்து ஒருவர் வாங்கியுள்ள கடனைப்பற்றியும் அதனை திருப்பிச் செலுத்தும் அவரது திறனைப் பற்றியும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.

வீடு வாங்க ஹோம் லோன், கார் வாங்க கார் லோன், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க பெர்சனல் லோன் என்று கடன் வாங்குவதற்காக விண்ணப்பிக்கும்போது முதலில் கேட்கப்படுவது இந்த சிபில்ஸ்கோர் தான்.

நீங்கள் வாங்கிய கடனை அடைக்க, செலுத்தும் தொகையை ஒருமுறை தாமதமாக செலுத்தினால்கூட அதனது பாதிப்பு இந்த சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.

கடன் வாங்குவபரின் சம்பளத் தொகையில் 60% அளவுக்கே அதிகபட்சம் கடன் இருக்க வேண்டும். அதற்கு மேல் கடன் வாங்கினால்கூட அதன் தாக்கம் சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.

அதேபோல் கிரடிட்கார்டு லிமிட் தொகையில் அதிகபட்ச தொகையை பயன்படுத்திவிட்டு, குறைந்தபட்ச தொகையை செலுத்தினாலும் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.

ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பிப்பதும் தவறு. வங்கிக்கடன் அல்லது கிரடிட் கார்டு பெற்று ஆறு மாதங்கள் கழித்தே அடுத்த கடனுக்கு அல்லது அடுத்த கிரடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கிக்கடனை சரியாக செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கடனை செலுத்திய 3 மாத்தித்தில் இருந்து 6 மாதங்களுக்குள் சிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டை விண்ணப்பித்து பெற வேண்டும். சில வேளைகளில் தாங்கள் கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தியிருந்தால்கூட வங்கி அதனை சிபில் அமைப்பிடம் தெரிவிக்காமல் இருந்தால், வங்கி மேலாளரிடம் பேசி அதனை சரிசெய்ய வைக்கவேண்டும்.

எதற்கு எவ்வளவு வெயிட்டே்ஜ்?

கடனை திருப்பி செலுத்தும் வகைக்கு 30%
கடனி்ன் கால அளவிற்கு 25%
கடனுக்கும் சம்பளத்திற்கும் உள்ள வித்தியாசம் 25%
கிரடிட்கார்டு பயன்படுத்துவதற்கு 20% மும் வெயிட்டேஜ் இருக்கும்.

இன்றைய நிலையில் கை நிறைய கடன் வாங்கிவிட்டு, அதை சரிவர திரும்பக் கட்டாமல், சிபிலில் மாட்டி கடைசியில் புதிதாக கடன் பெறும் தகுதியை இழந்து, அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் பலர்.
வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தி, சிபிலில் நூற்றுக்கு நூறு எடுக்க என்ன செய்ய வேண்டும் ?

''வங்கிகளில் கடன் வாங்க நினைக்கிற வர்கள் முதலில் ரூ.500 செலுத்தி தங்களுடைய பெயர், தந்தை பெயர், தங்களுடைய முகவரி, பிறந்த தேதி, தொலை பேசி எண்கள் மற்றும் பான் நம்பர், ஓட்டுநர் உரிமம் எண், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் நம்பர் ஆகியவற்றில் அடையாளத்துக்குக் கொடுக்கப்பட்ட ஒன்றை சிபில் அமைப்புக்கு அனுப்பி,
தங்களின் சிபில் ஸ்கோர் மற்றும் தங்கள் மீது தங்களுக்கே தெரியாமல் ஏதாவது, கடன் நிலுவை உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

#சிபில்_ஸ்கோர்! CIBIL Score:

சிபில் ஒவ்வொருவருக்கும் 300 முதல் 900 வரை ஸ்கோர் கொடுக்கிறது. ஏற்கெனவே கடன் வாங்கிய ஒருவர், இன்னொரு கடனுக்கு விண்ணப்பித்து, அவருக்கு 800-க்கு மேல் ஸ்கோர் இருந்தால், அவரது கடன் விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்படும். அவர்களுக்கு கிரீன் சேனல் கடன் வழங்கப்படும்.

ஸ்கோர் 700 முதல் 800 வரை இருந்தால், ஆவணங்களை சரி பார்த்துவிட்டு வங்கிகள்/நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும். ஸ்கோர் 600 முதல் 700-ஆக இருந்தால் தீவிர பரிசீலனைக்குப் பின் விண்ணப்பதாரர் மேல் எந்தத் தவறும் இல்லை என்று விண்ணப்பதாரர் நிரூபித்தால், அவர்களுக்கும் கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஆனால், விண்ணப்பதாரரின் ஸ்கோர் 600-க்கு கீழே இருந்தால் கடன் கேட்டு வருபவரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் நிராகரிக் கப்படும். இவர்களுக்கு எந்த வங்கியிலும் கடன் கிடைக்காது.
விண்ணப்பத்தாரரின் ஸ்கோர் சான்றிதழில் விவரம் இல்லை என்பதை என்.ஏ. அல்லது என்.ஹெச். (NA or NH) என்று இருந்தால் அவர்கள் கடனுக்கு புதியவர்கள்.
இதுவரை கடந்த 2 வருடங்களில் அவர்கள் எந்த கடனும் வாங்கவில்லை என்று அர்த்தம். இது மாதிரியான புதியவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்படும்.

'CIBIL Score sheet-ல் ###’ என்றோ அல்லது DPD (Days Past Dues) என்றோ போட்டிருந்தால் கவலை வேண்டாம். அவர்கள் வாங்கிய கடனை சரியாக திருப்பிச் செலுத்துகிறார்கள் என்று அர்த்தம்.

ஸ்கோர் குறைய காரணங்கள்..!

கடனை உரிய காலத்தில், உரிய தவணையில் செலுத்தத் தவறினால் ஸ்கோர் குறையும்.
கிரெடிட் கார்டு கடன், குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்திவிட்டு மீதமுள்ள தொகையை தவணையில் செலுத்தினால் அபராதத்திலிருந்து தப்பிக் கலாம். ஆனால், ஸ்கோர் உடனடியாக குறையும். அந்த தவணைக் காலம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் உங்கள் ஸ்கோர் குறைந்து கொண்டே போகும்.
நீங்கள் வாங்கும் வீட்டுக் கடன் அல்லது கார் கடன் அதிகமாக இருந்து பெர்சனல் லோன் குறைவாக இருந்தால், உங்கள் ஸ்கோர் பாதிக்கப் படாது.
அடமானம் இல்லாத கடன் (உதா. பெர்சனல் லோன்), அடமானக் கடனைவிட (உதா. வீட்டுக் கடன்) அதிகமாக இருந்தால் ஸ்கோர் மிகவும் பாதிக்கப்படும். உதாரணமாக மொத்த கடன் 25 லட்ச ரூபாயாக இருந்தால், இதில் கிரெடிட் கார்டு இரண்டு லட்ச ரூபாய், அடமானம் இல்லாத கடன் 12 லட்ச ரூபாய், கார் லோன் இரண்டு லட்சம் ரூபாய், வீட்டுக் கடன் 9 லட்சம் ரூபாயாக இருந்தால் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும். ஏனெனில் கடனில் 44% மட்டுமே அடமானத்துடன் கூடிய கடன் (வீட்டுக் கடன்) மீதமுள்ள 56% அடமானம் இல்லாத கடன் (பெர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு கடன்).
ஆகவே, பெர்சனல் லோன் கடனையும், கிரெடிட் கார்டு கடனையும் அதிகம் வாங்காமல் இருந்தால் ஸ்கோர் நன்றாகவே இருக்கும்.
வீட்டுக் கடனையும், கார் கடனையும் அதிகபட்சமாக 75% முதல் 80% வரை வாங்கி பயன் அடையலாம்.
ஒருவர் வீட்டுக் கடன் வாங்க வேண்டுமென்றால் குறைந்த வட்டியுள்ள ஒரே ஒரு வங்கியைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தை அங்கு மட்டுமே விண்ணப்பித்தாலே போதும். ஒரே நேரத்தில் ஐந்தாறு வங்கிகளில் விண்ணப்பித்தால் அனைத்து வங்கிகளிலும் உங்கள் பெயர் விசாரிக்கப்பட்டு, அதனால் உங்கள் ஸ்கோர் குறைய வாய்ப்பிருக்கிறது. இரண்டு கடனுக்கு மத்தியில் குறைந்தபட்சம் 4 முதல் 6 மாத இடைவெளி இருக்க வேண்டும்.
முடிந்த வரை யாருக்கும் கடன் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருந்தால் நல்லது. அவர்கள் பணம் கட்டவில்லை என்றாலும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப் பட்டு உங்களுக்கு கடன் கிடைக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது.
கடன் கிடைக்காது!

நீங்கள் கடன் வாங்கி அதை குறிப்பிட்ட தேதியில் செலுத்த தவறி இருந்தால், வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, மீதமுள்ள கடனையோ அல்லது மொத்தத் தொகையையும் தள்ளுபடி செய்திருக்கலாம். இதனால் உங்களுடைய சிபில் சான்றிதழில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது (Written-off) என்றோ, செட்டில் செய்யப் பட்டது (settled) என்றோ வரும். இந்நிலையில் உங்களை அடுத்த ஏழு வருடங்களுக்கு கறுப்புப் பட்டியலில் (Black List) சேர்த்துவிடுவார்கள். இதன் பிறகு அத்தியாவசிய கடனுக்காக நீங்கள் அழுது புலம்பினாலும் கடன் கிடைக்காது.

ஐந்து கட்டளைகள்!

நீங்கள் சிபிலில் அதிக ஸ்கோர் வாங்கி நல்ல பெயர் எடுக்க வேண்டுமெனில் பின்வரும் ஐந்து விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.
1. உங்களுடைய இ.எம்.ஐ.-யை நிலுவை தேதிக்கு முன்னதாகவே செலுத்தி விடுங்கள். கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம்.
2. கிரெடிட் கார்டு நிலுவையை மொத்தமாக செலுத்துவது நல்லது. குறைந்த பட்ச தொகையைச் செலுத்தி விட்டு மீதியை இ.எம்.ஐ-ல் செலுத்தக் கூடாது.
3. அடமானமில்லாத கடன் மற்றும் பெர்சனல் லோன் வாங்குவதை நிறுத்த வேண்டும்.
4. அதிக கிரெடிட் கார்டுகள் இருந்தால் இரண்டு மட்டும் வைத்துக் கொண்டு மீதியை சரண்டர் செய்துவிடுங்கள். அதில் குறைந்த தொகையை பயன்படுத்தவும்.
5.ஒரே நேரத்தில் வீட்டுக் கடன் அல்லது கார் கடனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.

இந்த விதிமுறைகளை 24 மாதங்களுக்கு சரியாக பின்பற்றி வந்தால் உங்கள் ஸ்கோர் 300-ஆக இருந்தாலும் அது 800ஆக உயர வாய்ப்பு இருக்கிறது..!!

சட்ட சிக்கல் பிரச்சனைக்கு அனுக வேண்டிய முகவரி
S.SURESH (Advocate)
PERAMBUR
CHENNAI
9500005764

28/05/2020

#கிரயப்_பத்திரம்_தொலைந்தால்_என்ன_செய்வது

#யாரை_அணுகுவது:

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.அவர்களை அனுக வேண்டும்.

#என்னென்ன_ஆவணங்கள்_தர_வேண்டும்

☉ கண்டு பிடிக்க முடியவில்லை என்ற காவல் துறை கடிதம்,
☉ பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம்,
☉ யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரிபப்ளிக் ஒருவரின் உறுதிமொழி,
☉ சர்வே எண் விவரங்கள்.

#எவ்வளவு_கட்டணம்:

ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொருபக்கத்திற்கும் 20 ரூபாய் வாங்கப்படும்.

#கால_வரையறை

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

#நடைமுறை :

முதலில் கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார்அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்.
தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்யவேண்டும்.
இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
நோட்டரிபப்ளிக் ஒருவரின் உறுதிமொழி,
பின்பு சார்பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

Address

Chennai
600012

Telephone

9500005764

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chennai Advocates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chennai Advocates:

Share