Eesan Murugasamy
- Home
- Eesan Murugasamy
Farmers Activists,& Advocate

14/08/2023
உழவர்களின் விடிவெள்ளி, மானமிகு மருத்துவர் சிவசாமி அவர்களுக்கு ஏழாம் ஆண்டு புகழ் அஞ்சலி
29/07/2023
சந்தனகட்டை வீரப்பன் உருவாக முக்கியகாரணம் தவறான பொருளாதார கொள்கைகள்தான்
சந்தனக்கட்டை மரத்தில் இருந்து கிடைப்பது. மரம் ஒன்று இயற்கையாக வளரும் அல்லது செயற்கையாக நட்டு உருவாக்கலாம்.
ஆனால் அரசின் கொள்கை எப்படி இருந்தது என்றால் சந்தன மரம் யார் வேண்டுமானால் நடலாம், ஆனால் அதை வெட்டி எடுத்து விற்கும் உரிமை அரசுக்கே என்பதுதான்.
உங்கள் நிலத்தில் சந்தனமரம் நட்டாலும் அரசுதான் அதை வெட்டி எடுத்து விற்பனை செய்யமுடியும்.
இதனால் ஒரு கட்டத்தில் உலக சந்தனமர விற்பனையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தியது இந்தியா. ஆனால் இம்மாதிரி விதிகளால் யாரும் தனியார் நிலங்களில் சந்தனமரம் வளர்க்க ஆர்வம் காட்டவில்லை. அரசின் காடுகளில் இருக்கும் சந்தனமரங்களை கடத்தி விற்க மிகப்பெரிய நெடொர்க் உருவானது.
அரசு அதனால் சந்தனமரங்களை அழிவில் இருந்து காப்பாற்ற ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
சைக்கிள் கேபில் உள்ளே புகுந்த ஆஸ்திரேலியா ஏராளமான தனியார் நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து, விற்று நன்றாக லாபம் பார்த்து வருகிறது. இன்று உலக சந்தனமர சந்தையின் ஏகபோக ஆதிக்கம் ஆஸ்திரேலியாவுக்குதான்.
கள் இறக்க அனுமதி, தனியார் சந்தன மரங்கள், பண்ணைகளை அனுமதித்தால் இந்திய விவசாயத்தில் நல்ல மலர்ச்சி ஏற்படும்.
ஆனால் செய்யமாட்டார்கள் :-)

29/07/2023
கண் வலி விதை விவசாயிகளின் கண்ணீரை துடைக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்,,
28/07/2023
தமிழ்நாட்டின் துயரம் நெய்வேலி நிலக்கரி நிறுவனம்
----------------------------------------
தமிழ்நாடு அரசு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு வருவாய்த்துறை - காவல்துறை ஒத்துழைப்பை நிரந்தரமாக திரும்ப பெற வேண்டும்
----------------------------------------
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை
----------------------------------------
அன்புடையீர்,,
தமிழ்நாட்டிலேயே நிலம் எடுப்பால் - விவசாய நிலம் பறிப்பால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் கடலூர் மாவட்டம் ஆகும்.
தமிழ்நாட்டின் வரம் என்று சொல்லி வந்த நிறுவனம் சாபக்கேடாக மாறி இருக்கிறது.
சுரங்கம் - 1, 2, 2 A, என மூன்று சுரங்கங்கள், சுமார் 36,000/- ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, வாழ்வாதாரத்தை பறித்து நெய்வேலி நிலக்கரி நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நிலம் கொடுத்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என வாக்குறுதி கொடுத்து, இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றாமலேயே தமிழ்நாடு அரசின் துணையோடு இந்நிறுவனம் அப்பகுதி மக்களை ஏமாற்றி வருகிறது.
இது போதாது என்று மீண்டும் 19,000 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சொல்கிறார் ,! நிலம் எடுப்பு செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன என்று, ஆனால் நிலம் எந்த நோக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கு 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றால், 2013 ஆம் ஆண்டு புதிய நிலமெடுப்புச் சட்டப்படி அந்த நிலத்தை மீண்டும் நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற சட்டத்தின் படி நிலம் எடுப்பை இரத்து செய்து விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
10 ஆண்டுகள் பொருத்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு, நெல்லை அறுவடை செய்யும் வரை 10 நாட்கள் பொறுக்க முடியாதா ??
நிலம் எடுப்பில் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டதில் மிகக் கடுமையான பாரபட்சம் நடத்திருக்கிறது, சட்டப்படி இழப்பீடு நிர்ணயம் செய்தால் விவசாயிகளுக்கு மறுவாழ்வு - மறுகுடியமர்வு பணிகளை செய்ய வேண்டும் என்பதை தவிர்ப்பதற்காக சட்டவிரோதமாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையத்தின் மூலமாக நிலத்தை பறித்து இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது விவசாயிகளுக்கு குரல் கொடுப்பதும், ஆளும் கட்சிகளாக வந்த பின்பு அதே விவசாயிகளின் கழுத்தை நெறிப்பதையும் தமிழ்நாட்டு அரசியல் கட்சியில் வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கின்றன.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம், விவசாய நிலத்தை கையகப்படுத்துவதில் நான் ஒரு எக்ஸ்பர்ட் என்று திமிராகச் சொல்லி இருக்கிறார்.
பரவனாறு என்கிற ஒரு ஆற்றையே அதன் திசையை மாற்றி, மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேட்டையும், விவசாயத்திற்கு பாதிப்பையும் NLC ஏற்படுத்தி இருக்கிறது, இதற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் காவல்துறை பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு மண்ணின் மக்களுக்காக, விவசாயிகளுக்காக செயல்படுவதை தவிர்த்து, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருப்பது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல் உள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு துணை போவதை நிறுத்தும் பொருட்டு, நிறுவனத்துக்கு வழங்கி வரும் காவல்துறை - வருவாய் துறை ஒத்துழைப்பை நிரந்தரமாக நிறுத்த ஆவணம் செய்ய வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேட்டுக் கொள்கிறது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வரும் 18 மாவட்டங்களிலும் நாளை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன முழக்கம் எழுப்பப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நில உரிமை பறிக்கப்படும் ஒவ்வொரு உழவனுடனும் கடைசிவரை தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் உறுதியுடன் இருக்கும் என்பதையும் பதிவு செய்து கொள்கிறோம்.
இப்படிக்கு
வழக்கறிஞர் ஈசன் முருகசாமி
நிறுவனர்
*தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்*

27/07/2023

22/07/2023
*தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின்*
*பத்து அம்சக் கோரிக்கைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க ஆதரவு*
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், விவசாயிகள் நலனுக்கான பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, ஜூலை 5 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 16 இடங்களில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தினை நடத்தி வருகிறது.
விவசாயிகள் நலன் காக்கவும், சுற்றுச் சூழல் வளம் பெறவும் இந்திய அரசிடம் நான்கு கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசிடம் ஆறு கோரிக்கைகளையும் முன்வைத்து, அவைகளை நிறைவேற்றித் தருமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் இந்தப் போராட்டத்தினை நடத்தி வருகிறது.
இந்திய அரசு நியமித்த எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றித் தருமாறும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தை காப்பீடு செய்த உழவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் இழப்பீடு பெறும் வகையில் மாற்றி அமைக்க வேண்டியும், தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கும் திட்டத்தை செயலிழக்கச் செய்யும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டியும், உழவர்களின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யுமாறு வேண்டியும் ஒன்றிய அரசிடம் இந்தச் சங்கம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டியும், வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டை உயர்த்தித் தருமாறும் தொழிற்பேட்டைகளுக்கு விவசாய நிலங்களை எடுப்பதை தடை செய்யுமாறும், ஆனைமலை ஆறு, நல்லாறு திட்டத்தையும், அப்பர் அமராவதி அணைத் திட்டத்தையும் விரைந்து செயல்படுத்தவும், அமராவதி அணையை தூர் வாரவும், கொப்பரை தேங்காய், பச்சை தேங்காய், நெல், கரும்பு, மரவள்ளிக் கிழங்கு, மஞ்சள், மக்காச் சோளம் ஆகிய விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தித் தருமாறும் தமிழ்நாடு அரசிடம் இந்தச் சங்கம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் முன்வைத்துள்ள இக்கோரிக்கைகளை மறுமலர்ச்சி தி.மு.கழகம் முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது. தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் இவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து, விவசாய பெருமக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
22.07.2023
ஆதரவு தெரிவித்து அறிக்கை செய்தமைக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
22/07/2023
தர்மபுரி மாவட்டம் - புலிகரை அருகே கெயில் எரிகாற்று குழாய் திட்டத்தை சாலையோரமாக பதிப்பதை பார்வையிட்டு நேரடியாக செய்தி வழங்கிய போது
21/07/2023
21/07/2023
20/07/2023
சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியம், கண்ணாமூச்சி கிராமத்தில் பருத்திக்கு விலை கிடைக்காமல் விவசாயி பருத்தியை அழிக்கும் போது இன்று நேரலையாக எடுத்த சோகமான காணொளி,,

13/07/2023
திருப்பூர் இயற்கை கழகத்திற்கு நன்றிகள்,,
12/07/2023
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் காராமணி அவர்களின் காட்டு விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சிறு பாடல்
12/07/2023
மதுரை மாவட்டத்தின் காத்திருப்பு போராட்ட சமையல் அறையில் இருந்து நேரலையாக,,

11/07/2023
இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் வேளாண்மைக்கும் அமல்படுத்தப்படுமா ??
11/07/2023
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 18 மாவட்டங்களில் நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டம் குறித்து தொகுத்து செய்தி வெளியிட்ட சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றிகள்,,
10/07/2023
Waste is wealth,,

08/07/2023
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பெருங்கற்காலத்தைச் சார்ந்த, உலகிலேயே ஒரே கல்லாலான உயரமான நடுகல்லை உலகறிய செய்யவும், தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் காக்கவும் அணி திரள்வீர்

20/04/2023
கூட்டுறவு சங்க நிதி மோசடியில், நீதி கிடைக்க அனைவரும் திரண்டு வாரீர்,,,
12/01/2023
பிஏபி திட்டத்திற்காக நிலம் கொடுத்த முக்கிய மற்றும் கிளை கால்வாய்களின் இருபுறமும் உள்ள உழவர்களின் கட்டணமில்லா வேளாண் மின் இணைப்புகளை துண்டிப்பதையும், ஆழ்துளை, திறந்த வெளி கிணறுகளை மூடுவதையும் தடுத்து நிறுத்தி உழவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை
04/01/2023
ஜனவரி-5,யாருக்கு எதிரான போராட்டம்? எதற்காக இந்த போராட்டம்-வழக்கறிஞர் திரு ஈசன் முருகசாமி அவர்களின் விளக்கம்

03/01/2023
பிஏபியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்றாம் மண்டல பாசனத்திற்கு ஏழு சுற்று தண்ணீர் வழங்க கோரி பிஏபி பிரதான கால்வாயில் இறங்கும் போராட்டம்.
நாள் 05-01-2023,
வியாழக்கிழமை
இடம் - பொங்கலூரில் உள்ள பிஏபி கால்வாய்.
நேரம் - காலை 10 மணி.

29/12/2022
வேளாண் போராளி அய்யா நம்மாழ்வார் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் 30-12-2022
26/12/2022
இந்த பொங்கல் விவசாயிகளுக்கு கருமாரி பொங்கல் - நாளை தொடங்குகிறது காத்திருப்பு போராட்டம்
22/12/2022
சத்து மிக்க தேங்காய் எண்ணெயை அரசு நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய தயங்குவது ஏன்?
12/12/2022
தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாட்டிற்கு அனைவரும் வாரீர் வாரீர் வாரீர்

12/12/2022
முக்கிய அறிவிப்பு
09/12/2022
விளைஞ்ச பொருளுக்கு விலையில்லை
விவசாயிக்கும் இங்கே மதிப்பில்லை
விலங்குகளுக்குப் பிரச்சினைன்னா வீதியிலிறங்கி போராட ஆளுண்டு
ஆனா எங்க விவசாயிக்குப் பிரச்சினைன்னா அவனே இறங்கி போராடுனாதான் உண்டு
விலங்குக்கு கொடுக்கிற முக்கியத்துவம் கூட எங்க விவசாயிக்கு இல்ல
பாவம் யாரும் அறியவில்லை அவனும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினம் (உயர் இனம்) தான் என்று..

07/12/2022
தேர்தல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டதா பசு பாதுகாப்பு அமைப்பு?
விவசாயிகளின் மேம்பாட்டுக்காக தொடங்கிய "Rastriya Kamadhenu Ayog"-ஐ மத்திய அரசு முழக்கியதற்கு என்ன காரணம்?
இன்று இரவு 7 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில்...

07/12/2022
தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாட்டிற்கு அனைவரும் வாரீர் வாரீர் வாரீர்...
Address
Kalinathampalayam
Website
Alerts
Be the first to know and let us send you an email when Eesan Murugasamy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to Eesan Murugasamy:
Videos

ஆகஸ்ட் 21- திருப்பூரில் விவசாயிகள் பேரணி எதற்காக? பி ஏ பி யில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்
ஆகஸ்ட் 21- திருப்பூரில் விவசாயிகள் பேரணி எதற்காக? பி ஏ பி யில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதில் என்னதான் பிரச்சனை? வழக்கறிஞர் திரு ஈசன் முருகசாமி அவர்களுடன் ஓர் நேர்காணல்

ஆகஸ்ட் 21 (ஞாயிற்றுக்கிழமை) பிஏபி பாசனத்தை பாதுகாக்கவும், 4.20 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களையும்
ஆகஸ்ட் 21 (ஞாயிற்றுக்கிழமை) பிஏபி பாசனத்தை பாதுகாக்கவும், 4.20 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களையும், 2 கோடி தென்னை மரங்களையும், 12 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும் ஆழியாற்றிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய கோரி வீரபாண்டி பிரிவில் இருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைபெற உள்ள மாபெரும் கோரிக்கை பேரணியில் அரசியல் கடந்து பச்சை துண்டு அணிந்து பிஏபி விவசாயிகளாக ஒன்றிணைவோம் வாரீர்..!வாரீர்...!. #Tiruppur #Coimbatore #Farmers #PAPProject #StopOttanchatramProject #August21Rally

ஆகஸ்ட் 21 (ஞாயிற்றுக்கிழமை) பிஏபி பாசனத்தை பாதுகாக்கவும், 4.20 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களையும், 2 கோடி தென்னை மரங்களையும், 12 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும் ஆழியாற்றிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய கோரி வீரபாண்டி பிரிவில் இருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைபெற உள்ள மாபெரும் கோரிக்கை பேரணியில் அரசியல் கடந்து பச்சை துண்டு அணிந்து பிஏபி விவசாயிகளாக ஒன்றிணைவோம் வாரீர்..!வாரீர்...!. #Tiruppur #Coimbatore #Farmers #PAPProject #StopOttanchatramProject #august21rally

👬👬👬👬👬👬👬👬👬 ஆகஸ்ட் 14-ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் நஞ்சராயன்குளத்தை காப்பாற்றக்கோரி மாபெ ம
👬👬👬👬👬👬👬👬👬 ஆகஸ்ட் 14-ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் நஞ்சராயன்குளத்தை காப்பாற்றக்கோரி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் அனைவரும் வாரீர்..வாரீர்...வாரீர். #tiruppur #savenanjarayankulam #vikasvidhyalaya

👬👬👬👬👬👬👬👬👬 ஆகஸ்ட் 14-ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் நஞ்சராயன்குளத்தை காப்பாற்றக்கோரி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் அனைவரும் வாரீர்..வாரீர்...வாரீர். #tiruppur #savenanjarayankulam #vikasvidhyalaya

அரசு விதிமுறைகளை பின்பற்றி தொழில் செய்யும் ஆவணங்களை வெளியிட தயாரா?-கல்குவாரி உரிமையாளர்களு வ
அரசு விதிமுறைகளை பின்பற்றி தொழில் செய்யும் ஆவணங்களை வெளியிட தயாரா?-கல்குவாரி உரிமையாளர்களுக்கு வழக்கறிஞர் ஈசன் முருகசாமி சவால்.. #palladam #kalquary #easanmurugasamy

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டம்.. நாள்:07.08.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்: வேலம்பட்டி சுங்கச்சாவடி, நேரம்: காலை 10 மணி...

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சா
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டம்.. நாள்:07.08.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்: வேலம்பட்டி சுங்கச்சாவடி, நேரம்: காலை 10 மணி...

கோடங்கிபாளையம் கல்குவாரி பிரச்சனை குறித்து மனு அளிக்க விவசாயிகளை வெளியே போ என விரட்டிய திரு வ
கோடங்கிபாளையம் கல்குவாரி பிரச்சனை குறித்து மனு அளிக்க விவசாயிகளை வெளியே போ என விரட்டிய திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை இணை இயக்குநர் வள்ளல்.... மனுவை கிழித்து எறிந்து விவசாயிகள் போராட்டம்

தொடர்கதையாகி வரும் விவசாயிகள் மீதான கா (ஏ)வல்துறையின் அராஜகம்.. சூலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டுக்கட்டாக கைது செய்து காவல்துறை அராஜகம்...