தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள்

  • Home
  • தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள்

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள், Legal, Chennai, .
(9)

Right to Information Act, 2005 is an act of the which sets out the rules and procedures regarding citizens' right to information.Under the provisions of RTI Act, any citizen of India may request information from a "public authority"

பாம்பின் உடம்பில் தங்க மோதிரம்.!
30/04/2026

பாம்பின் உடம்பில் தங்க மோதிரம்.!

தமிழ்.
29/04/2026

தமிழ்.

West Bengal
29/04/2026

West Bengal

சாதி, மதம் அற்றவர் சான்றிதழ் மூலம் கிடைக்கப்பெறுகின்ற நன்மைகள் பற்றி தெரிந்திருந்தால் நண்பர்கள் பதிவு செய்யவும்.
29/04/2026

சாதி, மதம் அற்றவர் சான்றிதழ் மூலம் கிடைக்கப்பெறுகின்ற நன்மைகள் பற்றி தெரிந்திருந்தால் நண்பர்கள் பதிவு செய்யவும்.

மேற்கு வங்கத்தில் பரபரப்பு!  |   |
29/04/2026

மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

| |

One Grid One Nation One Frequency - ஒரே நாடு ஒரே மின்தொகுப்பு ஒரே அதிர்வெண்.1990களின் கடைசியில் மூன்று வருடங்கள் அனல் மி...
28/04/2026

One Grid One Nation One Frequency - ஒரே நாடு ஒரே மின்தொகுப்பு ஒரே அதிர்வெண்.

1990களின் கடைசியில் மூன்று வருடங்கள் அனல் மின் நிலையத்தில் பொறியாளராக வேலை செய்து கொண்டிருந்தேன். நன்றாக மின் உற்பத்தி நடந்து கொண்டிருக்கும். திடீரென்று பார்த்தால் கண் இமைக்கும் நேரத்தில் எல்லா இயந்திரங்களும் டிரிப் ஆகி சட்டென்று ஒன்றுமே புரியாது. மின் உற்பத்தி நிலையத்தில் எங்கும் இருள் சூழ்ந்திருக்கும். அவசர கால விளக்குகள் மட்டும் உயிரோடிருக்கும்.

மற்ற மின் உற்பத்தி முறைகள் போலல்லாமல் அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏகப்பட்ட இயந்திரங்கள் உண்டு மற்றும் நிறைய தரவுகளை அதாவது பாய்லர் எனப்படும் கொதிகலனில் உற்பத்தியாகும் நீராவியை டர்பைன் எனப்படும் சுழலிக்குள் செலுத்தி அதை சுழல வைத்து ஜெனரேட்டர் என்று சொல்லப்படும் மின்ஆக்கியின் மூலமாக மின்சாரம் செய்யப்படும் வரை அனைத்து தரவுகளையும் மேற்பார்வையிட வேண்டும். அவசர கால விதிமுறைகளை பயன்படுத்த வேண்டும். ஏதாவது சிறு தவறு ஏற்பட்டாலும் பின்பு மீண்டும் அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர ஏகப்பட்ட வேலைகளை இழுத்து விடும் அந்த தவறான நடவடிக்கைகள். மின்உற்பத்தி இயக்கத்தில் இருக்கும் பொறியாளர்களை மொத்தமாக முடக்கி போட்டுவிடும்.

ஒரு அனல் மின் நிலையத்தை மீண்டும் இயக்கத்திற்கு எடுத்து வந்து மின் உற்பத்தியை தொடங்குவதென்பது நேரம் பிடிக்கும் விஷயம். அதனால்தான் பதினைந்து இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் மொத்தமாக மின்சாரம் போய்விட்டால் முழுவதுமாக எடுத்தவர இரண்டு நாட்களாவது ஆகும்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வலுவடைய மின்சாரம்தான் முதன்மையான காரணி... வலுவான மின் உற்பத்தி... அதை எடுத்து இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் வலுவான மின்தொடரமைப்பு மற்றும் கடைசியாக வீடுகள் கடைகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு மின்சாரத்தை எடுத்துவரும் மின்வினியோக கட்டமைப்பு இவையெல்லாம் வலுவாக இருக்க வேண்டியது அவசியம்.

1990 - 2000மாவது வருஷங்களில் இந்திய மின்தொடர், இப்பதிவின் துவக்கத்தில் சொன்னது போல மிகப் பெரிய தலைவலிகளை சந்தித்து. இது எவ்வாறு படிப்படியாக தீர்க்கப்பட்டதென்று இப்பதிவில் பார்ப்போம்.

இந்தியா ஐந்து மின் தொடரமைப்புகளாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக இயக்கத்தில் இருந்தது.
1. வடக்கு மின் தொடர்
2. மேற்கு மின் தொடர்
3. தெற்கு மின் தொடர்
4. கிழக்கு மின் தொடர்
5. வடகிழக்கு மின் தொடர்.
(படத்தில் காண்க)

ஆகையால் ஒரு மின் தொடரில் பிரச்சனை ஏற்பட்டால் அந்த மின்தொடரமைப்பேதான் அதை சரிசெய்து கொள்ள வேண்டும். அதனால்தான் மின்சாரம் மொத்தமாக ஒரு மின்தொடரமைப்பில் போகும்போது அதை சரிசெய்ய நாள் கணக்கில் ஆனது‌.

இந்த பிரச்சனையை ஆராய ஒரு குழு அமைக்கபட்டு அது தீர ஆராய்ந்து அளித்த அறிக்கையில் சொல்லப்பட்டது:
அனைத்து மாநிலங்களிலும் குறைவான மின் உற்பத்தி இருக்கும் போது மற்ற மாநிலங்களின் மின்சாரத்தை உறிஞ்சும் போது ஏற்படும் மின் அழுத்த அதிர்வெண் (Grid frequency) குறைபாடு காரணமாக மின் நிலையங்கள் செயலிழந்து போகிறது. அதனால் மின் நுகர்வு ஒழுங்குமுறையை எடுத்து வரவேண்டும்.அதற்கான வழிமுறை இருப்பதை சரியாக பகிர்ந்து கொள்ளுதல். (Availability Based Tariff - ABT)

நான் முதல் பத்தியில் சொன்ன திடீரென்று மொத்தமாக அனல்மின் நிலையம் செயலிழந்து போவதற்கான காரணம் மேற்கண்டவாறு வகைதொகையில்லாமல் வெவ்வேறு மாநிலங்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மின்சாரத்தை விட அதிகமாக உறிஞ்சியதால்தான்.

இந்த ABT வழிமுறை நடைமுறைக்கு வந்தபிறகு மாநில மின்வாரியங்கள் தங்களது மின்நுகர்வை அப்போது இருக்கும் மின்உற்பத்தியை கணக்கில் வைத்து சீரமைக்க ஆரம்பித்தது. இதன் பிறகு ஒரு வழியாக மின்தொடரமைப்பில் பிரச்சனைகள் வருவது குறைந்து விட்டது. அதிகப்படியான மின்சாரத்தை உறிஞ்சினால் நிறைய அபராதம் கட்டவேண்டியிருக்கும்.

இந்தியா முழுவதும் 5 தனித்தனி மின்தொடரமைப்புகளாக இருந்ததால் ஒரு மின்தொடரமைப்பிலிருக்கும் அதிகப்படியான மின்சாரத்தை அடுத்த மின்தொடரமைப்பிற்கு அனுப்ப முடியாத சூழ்நிலை இருந்தது. எடுத்துக்காட்டாக நிலக்கரி சுரங்கள் இருக்கும் சட்டிஸ்கர் மாநிலத்தில் மின்உற்பத்தி நிலையம் அமைத்தால் செலவு கம்மி. ஆனால் அங்கு உற்பத்தியாகும் மின்சாரம் வட மின்தொடரமைப்பில் மாத்திரமே பயன் படுத்தமுடியும். மின் உற்பத்தி குறைவாகவும் மின்தேவை அதிகமாக இருக்கும் தெற்கு மின் தொடருக்கு அதை அனுப்ப முடியாது.

இந்த தலைவலியை போக்க ஆரம்பிக்கப் பட்டதுதான் One Nation One Grid One Frequency - ஒரே நாடு ஒரே மின்தொகுப்பு ஒரே அதிர்வெண் என்பது.

மேலே சொன்ன இந்தியாவின் 5 மின்தொடரமைப்புகளும் படிப்படியாக ஒன்றினைக்கப்பட்டு இன்று பாரதம் முழுவதும் ஒரே மின்தொடரமைப்பாக உள்ளது. இந்த மின்தொடரமைப்புதான் உலகின் மிகப்பெரிய Synchronised மின்தொடரமைப்பு என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

இதில் இன்னொரு பெருமைக்குரிய விஷயம். உலகின் முண்ணனி தொழில்நுட்பம் முழுமையாக இந்திய மின்தொடரமைப்பில் பயன்படுத்தபடுகிறது. அதாவது செயற்கை நுண்ணறிவு முதற்கொண்டு... இந்திய மின்தொடரமைப்பில் வேலை செய்யும் மின் பொறியாளர்கள் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அமெரிக்கா ஐரோப்பா உட்பட... அந்த மின்தொடர் பற்றிய எந்தவித பெரிய பயிற்சியில்லாமல் முதல் நாளிலிருந்து செம்மையாக வேலை செய்யமுடியும். அந்த அளவிற்கு இந்திய மின்தொடர் நவீன படுத்தப்பட்டுள்ளது.

மின்தொடரமைப்பில் செம்மைபடுத்த முடிந்த அளவிற்கு மின்வினியோக கட்டமைப்பை இன்னும் முழுவதுமாக கட்டமைக்க முடியவில்லை என்பதால்தான் மத்திய அரசு நிறைய மானியங்களுடன் கூடிய நீண்டகால கடன்களை மாநில மின்வாரியங்களுக்கு அளித்து வருகிறது. மின்வினியோக கட்டமைப்பும் படிப்படியாக நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

பாரத பொருளாதாரம் இந்த அளவிற்கு வளர்ந்து வருவதற்கு மிகப் பெரிய காரணி வலுவான தடையில்லாத மின்சாரம். அதற்கு அடிப்படையான இந்த One Nation One Grid One Frequency - ஒரே நாடு ஒரே மின்தொகுப்பு ஒரே அதிர்வெண் பற்றி பெருமை கொள்வோம். நான் அதன் ஒரு அங்கமாக மின்தொடரமைப்பு பொறியாளனாக வேலை செய்வதில் பெருமை கொள்கிறேன்.

ஜெய்ஹிந்த்.

பி.கு: மேலும் "ஒரே நாடு ஒரே மின்தொகுப்பு ஒரே அதிர்வெண்" எப்படி படிப்படியாக கட்டமைக்கப்பட்டது என்பதை பற்றிய தரவுகளை கமண்ட்டில் தந்துள்ளேன். இந்த திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு அடுத்து வந்த பாஜக ஆட்சியில் வேகமெடுத்து இந்திய மின் கட்டமைப்பு இந்த அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

Post : Ramesh Kannan

????
28/04/2026

????

மருமகள் கைவரிசை.122 சவரன் கொள்ளைகடந்த 14ம் தேதி திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் 122 சவரன் கொள்ளை சம்பவத்தில் வேட்ப...
28/04/2026

மருமகள் கைவரிசை.

122 சவரன் கொள்ளை

கடந்த 14ம் தேதி திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் 122 சவரன் கொள்ளை சம்பவத்தில் வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது. கணவரை பிரிந்து வாழும் நிலையில் மாமனார் வீட்டில் கொள்ளை

அண்ணா பல்கலை. ஸ்ட்ராங் ரூமில் 'ஜனநாயகன்' படம் பார்த்தவர் கைது |   |   |
28/04/2026

அண்ணா பல்கலை. ஸ்ட்ராங் ரூமில் 'ஜனநாயகன்' படம் பார்த்தவர் கைது | | |

வறட்சியால் யானைகள் உயிரிழப்பு!
27/04/2026

வறட்சியால் யானைகள் உயிரிழப்பு!

27/04/2026

நைசா மிளகாய் மூட்டையையே தூக்கிட்டு போயிட்டாரே பெரியவர்.

Forwarded.

27/04/2026

Address

Chennai

600001

Alerts

Be the first to know and let us send you an email when தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Law Practice?

Share