24/06/2026
📌 பட்டாவில் பெயர் திருத்தம் செய்வது எப்படி?
பட்டாவில் (Patta) பெயர், தந்தை பெயர், எழுத்துப்பிழை அல்லது பிற விவரங்களில் தவறு இருந்தால், அதனை வருவாய்த் துறையின் மூலம் திருத்திக் கொள்ளலாம்.
✅ பட்டா பெயர் திருத்த நடைமுறை:
1️⃣ சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் தாசில்தாருக்கு மனு அளிக்க வேண்டும்.
2️⃣ மனு, வருவாய் ஆய்வாளர் (RI) மூலம் கிராம நிர்வாக அலுவலருக்கு (VAO) அனுப்பப்படும்.
3️⃣ VAO முன் தேவையான ஆதார ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
4️⃣ VAO ஆவணங்களை சரிபார்த்து அறிக்கை சமர்ப்பிப்பார்.
5️⃣ VAO மற்றும் RI அறிக்கைகளின் அடிப்படையில் தாசில்தார் விசாரணை மேற்கொண்டு உரிய உத்தரவு பிறப்பிப்பார்.
📄 பொதுவாக தேவையான ஆவணங்கள்:
✔️ பட்டா நகல்
✔️ விற்பனைப் பத்திரம் / உரிமை ஆவணம்
✔️ ஆதார் அட்டை
✔️ குடும்ப அட்டை
✔️ ஆதார ஆவணங்கள் மற்றும் சான்றுகள்
⚠️ கவனிக்க:
உரிமைத் தகராறு (Title Dispute) அல்லது சொத்து உரிமை தொடர்பான சிக்கல்கள் இருந்தால், வருவாய் அதிகாரிகள் பட்டா பெயர் திருத்தம் செய்ய மறுக்கலாம். அத்தகைய சூழலில் உரிய சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்கும்.
👨⚖️ Adv. P. Tamilalagan
Advocate, High Court of Madras
📞 90957 87582
📧 [email protected]
⚖️ VOICE OF JUSTICE